06/09/2019
அதிபர் வரவேற்பு வைபவம்.
எமது பாடசாலையின் புதிய அதிபர் திரு. A.M.M. ரிஷாத் (S.L.E.A.S) அவர்களை வரவேற்கும் முகமாக பள்ளிகள் பரிபாலன சபையுடன் இணைந்து பாடசாலை அபிவிருத்தி சங்கம் பிரமாண்டமான வரவேற்பு நிகழ்வொன்றை ஏற்பாடு செய்திருந்தனர். தனவந்தர்கள், நலன் விரும்பிகள், ஆசிரியர்கள், பெற்றோர், பழைய மாணவர்கள், ஊர் மக்கள் அனைவரினதும் முழுமையான ஒத்துழைப்புக்களுடன் இந்நிகழ்வு வெற்றிகரமாக நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்...
பலரது அயராத முயற்சியின் விளைவாக மிக நீண்ட காலங்களுக்குப் பிறகு (S.L.E.A.S) தரத்திலான அதிபர் ஒருவரைப் பெற்றுக்கொள்ள முடிந்தமை ஊர் மக்கள் பெற்ற மிகப் பெரிய வெற்றியாகும். இதற்காக இரவு பகலாக உழைத்த அனைவருக்கும் அல்லாஹுத்தஆலா நிரப்பமான கூலியை வழங்குவானாக.
"ஜெய்லானியின் கல்வி எழுச்சிக்காக ஒன்றிணைவோம்! செயற்படுவோம்!!" என்ற கருப்பொருளில் மேற்படி வரவேற்பு நிகழச்சி நடைபெற்றது.
விஷேட பேச்சாளராக கலாநிதி ரவூப் ஸைன் அவர்கள் கலந்து சிறப்பித்ததுடன் சிறப்பு அதிதிகளாக பள்ளிகள் பரிபாலன சபைத் தலைவர் தேஷகீர்த்தி அல்ஹாஜ் M.J.M.மஹ்தூன் அவர்களும், அடுலுகம அல் கஸ்ஸாலி மத்திய கல்லூரி அதிபர் அல்ஹாஜ் M.J.M.மன்சூர்(M.A) அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
நிகழ்ச்சி வெற்றிகரமாக நடை பெறுவதற்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் அல்லாஹ் மேலான கூலியை வழங்குவானாக.