A/Walahawiddawewa muslim vidyalaya கறடிக்குளம்

A/Walahawiddawewa muslim vidyalaya கறடிக்குளம்

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from A/Walahawiddawewa muslim vidyalaya கறடிக்குளம், School, Muslim Walahaviddawewa, Horowpothana, Anuradhapura.

28/08/2025
29/09/2024

*G.C.E_(O/L)_Results_Released*
கடந்த மூன்று தசாப்தங்களின் பின் (1992) எமது பாடசாலையிலிருந்து 12 மாணவர்கள் க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றி 12 மாணவர்களும் சித்தியடைந்து பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.அவர்களுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

எமது பாடசாலையானது ஹொரவப்பொதானை பிரதேசத்தில் கறடிக் குளம் எனும் கிராமத்தில் அமைந்துள்ள கஷ்டப் பிரதேச பாடசாலையாகும்.இப் பாடசாலையில் கற்பிக்கின்ற அதிகளவான ஆசிரியர்கள் வெளிப் பிரதேசத்திலிருந்து மிகவும் கஷ்டத்திற்கு மத்தியில் வருகை தரும் ஆசிரியர்களாகவே காணப்படுகின்றனர்.இவர்களது அர்ப்பணிப்பு அளப்பெரியது.

எமது பாடசாலை போதிய வழங்களற்ற நிலையிலேயே மிக நீண்டகாலமாக இயங்கி இன்று இப் பெறுபேற்றினை பெற்றுக்கொண்டது.பாடங்களுக்குரிய ஆசிரியர்கள் போதாமை,போதிய பொளதீக வழங்கள் இல்லை,வகுப்பறை இல்லை இவ்வாறான பல குறைபாடுகளுடனே இம் மாணவர்கள் இப் பெறுபேற்றினை பெற்றுள்ளனர்.இவ்வாறான பல சவால்களை எதிர்நோக்கி இம் மாணவர்களை தயார்படுத்திய எமது பாடசாலை ஆசிரியர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.

இம் முன்னேற்றத்தினை ஒரு படிக் கல்லாக எமது பாடசாலையின் பழைய மாணவர்கள்,ஊர் நலன்விரும்பிகள் என அனைவரும் ஒன்றினைந்து எமது பாடசாலையினை முன்னேற்றத்திற்கு ஒத்துழைக்க வேண்டிக் கொள்கினறோம்.

WMV Media.

05/05/2024

#வாழ்த்துக்களும்,
#பிரார்த்தனைகளும்
GCE O/L - 2023 (2024)

நாளைய தினம் O/L பரீட்சைக்குத் தோற்றவுள்ள
இம்மாணவர்கள் சிறந்த முறையில் பரீட்சைக்கு தோற்றி மிகச் சிறந்த சித்திகளைப் பெற்று எமது பாடசாலைக்கும், எமது ஊருக்கும்,அவர்களுடைய பெற்றோருக்கும் பெருமை தேடித்தர எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
-
WMV Media

Photos from A/Walahawiddawewa muslim vidyalaya கறடிக்குளம்'s post 03/05/2024

#வரலாற்றில்_ஓரேடு #
அனுமதி அட்டை வழங்கும் நிகழ்வு - 2024

இம்முறை க.பொ.த சாதாரண தர பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான அனுமதி அட்டை வழங்கும் நிகழ்வு எமது பாடசாலையில் இடம்பெற்றது.

கடந்த மூன்று (03) தசாப்தங்களின் பின் (1992) எமது பாடசாலையிலிருந்து 12 மாணவர்கள் க.பொ.த சாதாரண தர பரீட்சை எழுதவுள்ளனர்.இவர்கள் சென்ற வருடம் ஓய்வு பெற்ற எமது பாடசாலையின் அதிபர் S.காசிம் பாவா அவர்களினால் ஆரம்பிக்கப்பட்டு தற்போதய அதிபர் I.நிசார் அவர்களின் தலைமையில் வழிநடாத்தப்பட்டு தயார்படுத்தப்பட்டுள்ளனர்.இவற்றுக்கு உதவிய அதிபர்,உதவி அதிபர்கள்,வகுப்பாசிரியர்,பாட ஆசிரியர்கள்,ஏனைய ஆசிரியர்கள்,பெற்றோர்கள் அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.

எமது மாணவர்கள் அனைவருக்கும் பரீட்சை இலகுவாக அமைந்து சிறந்த சித்திகளைப் பெற்று உயர் கல்வியைத் தொடர இறைவனைப் பிரார்த்தித்து வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

WMV media

Photos from A/Walahawiddawewa muslim vidyalaya கறடிக்குளம்'s post 07/03/2024

Annual Inter House Athlatic Meet - 2024

Photos from A/Walahawiddawewa muslim vidyalaya கறடிக்குளம்'s post 12/09/2023

#கணித_வினா-விடை_போட்டி நிகழ்ச்சி
-2023

அநு/கெபிதிகொல்லாவ கல்வி வலயத்திற்குட்பட்ட சுமார் 20 இற்கு மேற்பட்ட தமிழ்,சிங்கள மொழி மூலமான பாடசாலை மாணவர்களுடன் கணித வினா-விடை போட்டி நிகழ்ச்சியில் பங்கு பற்றி எமது பாடசாலை மாணவர்களில் இருவர் இரண்டாம் நிலைகளைப் பெற்று மாகாண மட்டத்திற்கு தெரிவாகியுள்ளனர்.அம்மாணவர்கள்

#தரம்_07
MT.Ameena Farvin - 2nd Place
#தரம்_08
MHF.Akila - 7th Place
M.Rahna Farvin - 10th Place
#தரம்_10
MH.Shazni - 4th Place
#தரம்_11
NF.Nifra - 2nd Place

இம்மாணவர்கள் மாகாணமட்டப் போட்டியில் வெற்றிபெற்று தேசியமட்டத்திற்கு தெரிவாக வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும்.இதற்காக அயராது உழைத்த கணித பாட ஆசிரியர்களுக்கும்,அதிபர் ஏனைய ஆசிரியர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்
நன்றி.

WMV media.

06/09/2023


Zonal Level - 2023

அநு/கெபிதிகால்லாவ கல்வி வலயத்தில் இடம்பெற்ற ஆங்கில தின போட்டியில் எமது பாடசாலைக்கு இரு இடங்கள் கிடைக்கப் பெற்றுள்ளது.
அல்ஹம்துலில்லாஹ்,

1st Place - MF.Sasna_Grade 10 (Speech)
3rd Place - Yumna begum_Grade 04 (recitation)

இம் மாணவர்களை வாழ்த்துவதோடு, இதற்காக அயராது உழைத்த பாடசாலையின் ஆங்கில பாடத்தினை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும்,
ஆலோசனை வழங்கிய அதிபர்,ஏனைய ஆசிரியர்களுக்கும்
மனமார்ந்த நன்றிகள்.
-
WMV Media

Photos from A/Walahawiddawewa muslim vidyalaya கறடிக்குளம்'s post 26/04/2023

- 2023
Grade - 01

எமது பாடசாலையில் #தரம்_1_இற்கு புதிதாக உள்வாங்கப்பட்ட மாணவர்களை #வரவேற்கும்_நிகழ்வு 25.04.2023 அன்று எமது பாடசாலையின் அதிபர் I.Nizar அவர்களின் தலைமையில் நடைபெற்றது...

தரம் 2 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இந் நிகழ்வில் உதவி அதிபர் உட்பட ஆசிரியர்கள், SDEC, OBA அங்கத்தவர்கள் மற்றும் பெற்றோர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
நன்றி.

-
WMV Media

Photos from A/Walahawiddawewa muslim vidyalaya கறடிக்குளம்'s post 25/04/2023

பிறை 20,21,22,23,24,25,26,27 இன் பணப்பரிசு பெறும் வெற்றியாளர்கள்.

Photos from A/Walahawiddawewa muslim vidyalaya கறடிக்குளம்'s post 25/04/2023

பிறை 17,18,19 இன் பணப்பரிசு பெறும் வெற்றியாளர்கள்.

Want your school to be the top-listed School/college in Anuradhapura?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address

Muslim Walahaviddawewa, Horowpothana
Anuradhapura