H/ Al Akbar M.M.V

H/ Al Akbar M.M.V

Share

Our Vision : Growing as The First Rank Tamil Medium School in Southern Province

19/06/2026
Photos from H/ Al Akbar M.M.V's post 19/06/2026

புனிதமிக்க முஹர்ரம் மாதத்தின் ஆரம்பத்தை முன்னிட்டு, நமது பாடசாலையில் மிகச் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த இஸ்லாமிய வரலாற்று நிகழ்வு . இந்நிகழ்வு இனிதே நிறைவுறக் காரணமாய் இருந்த அனைவருக்கும் நன்றிகள்.

முதலாவதாக, இந்நிகழ்வை இவ்வளவு சிறப்பாக நடத்துவதற்கு முழுமையான வழிகாட்டல்களையும், ஆலோசனைகளையும் வழங்கி, எங்களை வழிநடத்திய நமது மதிப்பிற்குரிய அதிபர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த நிகழ்வு வெறும் மேடை நிகழ்ச்சியாக மட்டுமில்லாமல், முஹர்ரம் மாதத்தின் தியாக வரலாற்றையும், ஹிஜிரத் திருநாளின் முக்கியத்துவத்தையும் மாணவர்களுக்குக் கொண்டு சேர்க்கும் நோக்கில் கடினமாக உழைத்த இஸ்லாமிய பாட ஆசிரியர்களுக்கும், ஏனைய சக ஆசிரியர்களுக்கும், ஏற்பாட்டுக் குழுவினருக்கும் எனது பாராட்டுகளும் நெஞ்சார்ந்த நன்றிகளும் உரித்தாகுக.

மேடையில் தங்களின் திறமைகளை மிக அழகாக வெளிப்படுத்தி, முஹர்ரம் தினத்தின் மாண்பை எமக்கு உணர்த்திய மாணவச் செல்வங்கள் அனைவருக்கும், முழு நிகழ்விலும் மிகச் சிறந்த ஒழுக்கத்தோடும், அமைதியோடும் கலந்துகொண்டு சிறப்பித்த அனைத்து மாணவர்களுக்கும் எனது வாழ்த்துகளும் நன்றிகளும்.

சிறப்புறை நிகழ்த்திய பர்ஹத் மெளலவி,ரினாஸ் மெளலவி அவர்களுக்கும்,

அரங்கு அலங்காரம், ஒலிபெருக்கி அமைப்பு மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்கி, இந்நிகழ்வு எவ்வித தடையுமின்றி நடக்க உதவிய அனைத்து ஊழியர்களுக்கும், நேரடி மற்றும் மறைமுக உதவி புரிந்த நல் உள்ளங்களுல்கும் எமது நிர்வாகத்தின் சார்பில் நன்றியினைச் சமர்ப்பிக்கின்றேன்.

இந்த முஹர்ரம் திருநாளில் நாம் கற்றுக்கொண்ட தியாகம், பொறுமை மற்றும் ஒற்றுமை போன்ற உயரிய குணங்களை நமது அன்றாட வாழ்விலும் கடைப்பிடித்து வாழ எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்தித்க்கிறேன்..
வஸ்ஸலாம். நன்றி!

பி அதிபர் 🎉🎉

16/06/2026

අම්බලන්තොට, හ/අල්-අක්බර් මුස්ලිම් මහා විද්‍යාලය විසින් සංවිධානය කරනු ලබන වැදගත් මහජන සෞඛ්‍ය වැඩසටහනක් ක්‍රියාත්මක වේ. මෙය ජූනි මස 15 වන දින සිට ජූනි මස 20 වන දින දක්වා ක්‍රියාත්මක වන "ජාතික ඩෙංගု මර්දන සතිය" පිළිබඳ නිවේදනයකි. මෙම සතිය පුරා, ඩෙංගු ව්‍යාප්තිය පාලනය කිරීම සඳහා විවිධ ස්ථාන පිරිසිදු කිරීමේ කටයුතු සිදු කිරීමට නියමිතය. විශේෂයෙන්ම, ජූනි 15 සිට 17 දක්වා පොදු පරිශ්‍ර ද, ජූනි 18 වන දින අධ්‍යාපන ආයතන ද, ජූනි 19 වන දින රජයේ කාර්යාල ද, ජූනි 20 වන දින නිවෙස් සහ පුද්ගලික පරිශ්‍ර ද පිරිසිදු කිරීමට සැලසුම් කර ඇත.

அல்-அக்பர் முஸ்லிம் மகா வித்தியாலயம் சார்பில் ஒரு முக்கிய பொது சுகாதார நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது. இது ஜூன் 15 ஆம் தேதி முதல் ஜூன் 20 ஆம் தேதி வரை கடைபிடிக்கப்படும் "தேசிய டெங்கு ஒழிப்பு வாரம்" பற்றிய ஒரு அறிவிப்பு ஆகும். இந்த வாரம் முழுவதும், டெங்கு பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு இடங்களை சுத்தம் செய்யும் பணிகள் நடைபெறும். குறிப்பாக, ஜூன் 15 முதல் 17 வரை பொது இடங்களும், ஜூன் 18 அன்று கல்வி நிறுவனங்களும், ஜூன் 19 அன்று அரச அலுவலகங்களும், ஜூன் 20 அன்று வீடுகள் மற்றும் தனியார் இடங்களும் சுத்தம் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.






Photos from H/ Al Akbar M.M.V's post 16/06/2026

සිසුන් අතර ජාතික, ආගමික හා සංස්කෘතික සංහිඳියාව වර්ධනය කිරීමේ අරමුණින් හ/මාමඩල මහා විද්‍යාලය සහ හ/අල් අක්බර් මුස්ලිම් මහා විද්‍යාලය ඒකාබද්ධව සංවිධානය කළ "සහජීවන දිනය" අද දින ඉතා සාර්ථකව පවත්වන ලදී.

පාසල් දෙකෙහිම විදුහල්පතිවරුන්, නියෝජ්‍ය විදුහල්පතිවරුන්, ගුරුභවතුන් සහ සිසුන් සහභාගී වූ මෙම වැඩසටහනේදී ඒකාබද්ධ සංස්කෘතික අංග සහ සුහද සාකච්ඡා රැසක් පවත්වනු ලැබීය.

මෙම සුවිශේෂී වැඩසටහන ඉතා ඉහළින් සංවිධානය කළ මාමඩල විද්‍යාලයේ විදුහල්පතිතුමා, නියෝජ්‍ය විදුහල්පතිතුමා ඇතුළු ගුරු මණ්ඩලයටත්, මෙයට සහභාගී වූ අප පාසලේ ගුරුභවතුන් සහ සිසු දරු දැරියන්ටත් අපගේ හෘදයාංගම ස්තූතිය පුද කර සිටිමු! 🎉🎉

පාසල් සහජීවනයේ නොමැකෙන මතක සටහන! 🤝
හ/මාමඩල මහා විද්‍යාලයීය සංවිධානයෙන් පැවැත්වුණු සුවිශේෂී සහජීවන සහ සංහිඳියා වැඩසටහන සඳහා සහභාගී වීමට අප හ/අල් අක්බර් මුස්ලිම් මහා විද්‍යාලයේ සිසුන්ට සහ ගුරු මණ්ඩලයට ඉතා කදිම අවස්ථාවක් උදා විය.

මෙවැනි වැඩසටහන් තුළින් ගොඩනැගෙන සමාජ සහජීවනය සහ සහෝදරත්වය හෙට දවසේ ලක් මෑණියන් සරසන සුන්දරම මල්දමක් වනු නොඅනුමානය!

Thanks principal,D.principal,staff…etc

15/06/2026

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹ்.
எமது பாடசாலையின் தரம் 7 வகுப்பறைக்கு மிக அவசியத் தேவையாகவிருந்த ஆசிரியர் மேசையை, எமது வேண்டுகோளை ஏற்று மிக உன்னதமான மனதோடு அன்பளிப்பாக வழங்கிய மதிப்பிற்குரிய ஜனாப் S N M ஹசன் அவர்களுக்கு எமது பாடசாலைச் சமூகம் சார்பாக முதற்கண் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மாணவர்களின் கற்றல்-கற்பித்தல் செயற்பாடுகள் செவ்வனே நடைபெறுவதற்கு ஆசிரியர்களுக்கான வசதிகள் இன்றியமையாதவை. எமது பாடசாலையின் இந்தத் தேவை நிமித்தம், சற்றும் யோசிக்காது உடனடியாக உதவிக்கரம் நீட்டிய உங்களின் இந்த நற்பணி மிகவும் பாராட்டுக்குரியது.
ஆசிரியர் மற்றும் மாணவர்களின் அன்றாடப் பயன்பாட்டுக்கு உகந்த வகையில் இந்த மேசையை அன்பளிப்புச் செய்த தங்களின் நல்வாழ்வுக்கும், பொருளாதார அபிவிருத்திக்கும் எல்லாம் வல்ல இறைவனின் அருள் என்றும் கிடைக்கப் பிரார்த்திக்கின்றோம்.
உங்களின் இந்தத் தாராள மனதிற்கும், எமது பாடசாலை மீது நீங்கள் கொண்டுள்ள அக்கறைக்கும் மீண்டும் ஒருமுறை எமது மனமார்ந்த நன்றிகள்!

15/06/2026

வாசிப்போம், வரலாற்றைப் படைப்போம்!

எமது அல் அக்பர் முஸ்லிம் மகா வித்தியாலய நூலகத்திற்கு, இளம் எழுத்தாளர் நபீல் அபாபீல் அவர்களின் "கறுப்பி" என்ற சிறந்த குறுநாவலை அன்பளிப்பாக வழங்கிய மாணவர் சாபித் நவ்ஷாட் கு எமது பாடசாலைச் சமூகம் சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
தனது பிறந்தநாளை ஆடம்பரமாகக் கொண்டாடாமல், எமது பாடசாலை மாணவர்களின் அறிவுப் பசிக்குத் தீனி போடும் வகையில் நூலகத்திற்குப் புத்தகங்களை அன்பளிப்புச் செய்திருப்பது, இன்றைய இளைய தலைமுறைக்கு ஒரு சிறந்த முன்னுதாரணமாகும் (Excellent Role Model). இஸ்லாமியக் கோட்பாட்டின்படி, ஒருவருக்கு அறிவூட்டும் புத்தகங்களை வழங்குவது என்பது மரணத்திற்குப் பின்னரும் நன்மைகளைத் தரக்கூடிய ஒரு சிறந்த "சதகா ஜாரியா" (நிலையான தர்மம்) ஆகும். இந்த நூலை வாசிக்கும் ஒவ்வொரு மாணவனின் அறிவிலும், சிந்தனையிலும் ஏற்படும் மாற்றங்கள் உங்களின் இந்த நற்செயலுக்கான நற்கூலியாக இறைவனிடம் சேரும் என்பதில் ஐயமில்லை.
தனது பிறந்தநாளில் இத்தகைய உன்னதமான பணியைச் செய்த சாபித் நவ்ஷாட் மாணவனுக்கு எல்லாம் வல்ல இறைவன் நீண்ட ஆயுளையும், ஆரோக்கியத்தையும், ஈமானிய நல்வாழ்வையும், கல்வியில் உயர்வையும் வழங்குவானாக எனப் பிரார்த்திக்கின்றோம்.
உங்களின் இந்த நற்பணி தொடர வாழ்த்துக்கள்!

"புத்தகம் தருவது வெறும் காகிதங்களை அல்ல; ஒரு தலைமுறையின் எதிர்காலத்தை!"

நன்றி🎉🎉🎉🎉🎉

Want your school to be the top-listed School/college in Ambalantota?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address

Malay Colany
Ambalantota
82100