களம் TV

களம் TV முயற்சிகளுக்கான களம் உண்மை நடுநிலைக்கே முதலிடம்

தனது சாரதி ஓய்வுபெற்று செல்லும் போது   வழங்கி கௌரவித்த வைத்திய அதிகாரி.!!பொத்துவில் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில்...
23/08/2026

தனது சாரதி ஓய்வுபெற்று செல்லும் போது வழங்கி கௌரவித்த வைத்திய அதிகாரி.!!
பொத்துவில் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் சுகாதார சேவை உதவியாளராகவும், சாரதியாகவும் நீண்ட காலமாக பணியாற்றி அரச சேவையில் இருந்து ஓய்வுபெற்றுச் செல்லும் பொத்துவில் பிரதேசத்தைச் சேர்ந்த எம்.எஸ்.அப்துல் ஜலாலுக்கு சுகாதார வைத்திய அதிகாரி உவைஸ் பாறூக் Smart Phone ஒன்றினை வழங்கி பாராட்டி கௌரவித்தார்.

சிறந்த நன்னடத்தையும் சமூக சிந்தனையும் கொண்ட ஜலால், தனது அரச சேவையில் 10 வருடங்கள் சுகாதார சேவை உதவியாளராகவும், 15 வருடங்கள் சாரதியாகவும் ஒட்டுமொத்தமாக 25 வருடங்கள் பொத்துவில் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் பணியாற்றியுள்ளார்.

அவரது அர்ப்பணிப்பு மிக்க சேவைகளைப் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு சனிக்கிழமை (22) பொத்துவில் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் உவைஸ் பாறுக் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில், கல்முனை பிராந்திய கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் எம்.சீ.எம்.மாஹிர் கௌரவ அதிதியாகவும், டொக்டர் திருமதி சமீரா உவைஸ், ஓய்வுபெற்ற மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் எம்.எஸ்.எம்.அப்துல் மலீக் ஆகியோர் விசேட அதிதிகளாகவும் கலந்து சிறப்பித்தனர்.

இந்தப் பாராட்டு விழாவின் போது, சுகாதார வைத்திய அதிகாரி உவைஸ் பாறூக் தனது சொந்த நிதியிலிருந்து ஓய்வுபெற்று செல்லும் அப்துல் ஜலால் அவர்களுக்கு Smart Phone ஒன்றினை பரிசாக வழங்கி கௌரவித்தமை குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான், துருக்கி, சவுதி அரேபியா இடையே கையெழுத்தான கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் சேர தங்களுக்கும் அழைப்பு விடுக்க...
23/08/2026

பாகிஸ்தான், துருக்கி, சவுதி அரேபியா இடையே கையெழுத்தான கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் சேர தங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ஈரான் தகவல்!

​ஒரு நாட்டின் மீதான தாக்குதல் அனைவரின் மீதான தாக்குதலாக கருதும் இதில், ஈரான் இணைந்தால் மத்திய கிழக்கு பாதுகாப்புச் சூழலே மாறும். இருப்பினும், இதை பிற நாடுகள் இன்னும் உறுதி செய்யவில்லை...

23/08/2026
ஜனாஸா அறிவித்தல்அக்கரைப்பற்று 4, ஆண்கள் பாடசாலை வீதியைச் சேர்ந்த முஹம்மது மொகிடீன் இன்று (23) வபாத்தானார்.இன்னாலில்லாஹி ...
23/08/2026

ஜனாஸா அறிவித்தல்

அக்கரைப்பற்று 4, ஆண்கள் பாடசாலை வீதியைச் சேர்ந்த முஹம்மது மொகிடீன் இன்று (23) வபாத்தானார்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னார் ஹாஜியானி பௌசியா அவர்களின் அன்பு கணவரும்,

அஸ்லம் (சியான்) சவூதி அரேபியா
ஹகீமா சவூதி அரேபியா
ஆகியோரின் அன்புத் தந்தையும்;

பைஸல் சவூதி அரேபியா
மஸீயா சவூதி அரேபியா
அவர்களின்
மாமனாரும்;

இப்றாகிம், வஸ்றா, நஸ்றா, மும்தாஜ், குட்டி ஆகியோரின் சகோதரரும்;

ஆரிபா, ஜாபிர், ஜெஸீர், மஃறூப், அனீஸ், றணீஸ், றஸீன், ஜெலீஸ் ஆகியோரின் மச்சானும் ஆவார்,

மற்றும் முஜீஸ், பஸ்வான் ஆகியோரின் பெரியப்பாவும் ஆவார்கள்.

இன்ஷா அல்லாஹ் அன்னாரின் ஜனாஸா நல்லடக்க விபரம்
பின்னர் அறிவிக்கப்படும்.

உங்கள் பிள்ளைகளுக்கு சொத்துக்களைச் சேர்ப்பதைவிட…அவர்களைச் சொத்தாக்குங்கள்!,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,...
21/08/2026

உங்கள் பிள்ளைகளுக்கு
சொத்துக்களைச் சேர்ப்பதைவிட…
அவர்களைச் சொத்தாக்குங்கள்!
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

வீடு, நிலம், பணம் என
அனைத்தையும் சேர்த்து,
அவர்களின் எதிர்காலம் குறையக்கூடாது என்று
ஓடிக்கொண்டிருக்கின்றோம்.

ஆனால் அந்த ஓட்டத்தில்
நாம் இழப்பது என்ன?

அவர்களுடன் செலவிட வேண்டிய நேரம்,
அவர்களின் சிறு மகிழ்ச்சிகளைப் பகிர வேண்டிய தருணங்கள்,
நம்முடைய வாழ்க்கையை அனுபவிக்க வேண்டிய அமைதி—
எல்லாமே “நாளைக்கு…” என்று
தள்ளிப்போய்க் கொண்டிருக்கின்றது.

பிள்ளைகள் கஷ்டப்படக்கூடாது என்பதற்காக
நாம் கஷ்டப்படுகின்றோம்.
அவர்கள் எதையும் இழக்கக்கூடாது என்பதற்காக
நம்மையே இழக்கின்றோம்.

ஆனால் சிந்தித்துப் பாருங்கள்…

அவர்களுக்குத் தேவையான அனைத்தையும்
நாமே தேடித் தேடிச் சேர்த்துக் கொடுத்துவிட்டால்,
அவர்கள் தங்களுக்காகத் தேடக் கற்றுக்கொள்வார்களா?

கஷ்டம் தெரியாமல் வளர்ந்தவன்
கஷ்டத்தை எதிர்கொள்ளக் கற்றுக்கொள்வானா?

தோல்வியைச் சந்திக்காமல் வளர்ந்தவன்
தோல்வியைத் தாங்குவானா?

எல்லாவற்றையும் பெற்றுக்கொடுத்தால்
வாழ்க்கையில் எதையும் தேட வேண்டும் என்ற
உந்துதல் அவனுக்குள் உருவாகுமா?

வாழ்க்கையை எளிதாக்க நினைத்து
நாம் அவர்களின் வாழ்க்கையையே
கடினமாக்கிக் கொண்டிருக்கிறோமா?

ஒவ்வொரு தலைமுறையும்
அடுத்த தலைமுறைக்காக
வாழ்நாள் முழுவதும் ஓடிக்கொண்டிருந்தால்,

எப்போது அவர்கள்
தங்களுக்காக வாழ்வார்கள்?

எப்போது உழைப்பார்கள்?
எப்போது தங்கள் உழைப்பின் பலனை அனுபவிப்பார்கள்?
எப்போது நிம்மதியாகச் சிரிப்பார்கள்?

அதற்குப் பதிலாக…

அவர் உழைக்கட்டும்…
அவர் சம்பாதிக்கட்டும்…
அவர் தன் சொத்தை உருவாக்கட்டும்…
அவர் தன் வாழ்க்கையை அனுபவிக்கட்டும்.
என்று,

தன் பிள்ளைகளை…..
உழைப்பையும், பண்பையும், பொறுப்பையும் கற்றுக்கொடுத்து
நல்ல மனிதர்களாக உருவாக்கட்டும்.

அடுத்த தலைமுறையும்
தன் உழைப்பால் உயரட்டும்.

இப்படி ஒவ்வொருவரும்
தங்களுக்கான வாழ்க்கையைத் தாங்களே உருவாக்கும்
ஒரு நல்ல பண்பாடு உருவானால்…

யாரும் வாழ்நாள் முழுவதும்
சொத்துக்களுக்காக ஓட வேண்டியதில்லை.

யாரும் தங்களை உருக்கி
அடுத்த தலைமுறைக்காக மட்டும் வாழ வேண்டியதில்லை.

யாரும் தங்கள் மகிழ்ச்சியையும்
ஓய்வையும்
நிம்மதியையும்
வாழ்க்கையின் இறுதிவரை ஒத்திவைக்க வேண்டியதில்லை.

**சொத்து என்பது
அடுத்த தலைமுறைக்காக நாம் சேர்த்துவைப்பது மட்டும் அல்ல…

நல்ல வாழ்க்கையை வாழக் கற்றுக்கொடுத்த
ஒவ்வொரு மனிதனும்
அடுத்த தலைமுறைக்கு விட்டுச்செல்லும்
மிகப்பெரிய செல்வம்!**

ஆகவே…

பிள்ளைகளுக்காக சொத்துக்களை மட்டும் சேர்க்காதீர்கள்;
அவர்கள் சொத்துக்களை உருவாக்கும்
ஆற்றலைச் சேர்த்துக் கொடுங்கள்.

பணம் அல்ல—பண்பை கொடுங்கள்.
சொத்து அல்ல—சுயநம்பிக்கையை கொடுங்கள்.
சுகம் அல்ல—சவால்களை எதிர்கொள்ளும் துணிவைக் கொடுங்கள்.

**நீங்கள் சேர்த்த சொத்துக்களை
உங்கள் பிள்ளைகளின் வாழ்க்கையாக்காதீர்கள்…

உங்கள் பிள்ளைகளையே
உங்கள் மிகப்பெரிய சொத்தாக உருவாக்குங்கள்!**

அப்போது…

நீங்கள் வாழ்வீர்கள்,
அவர்கள் வாழ்வார்கள்,
அவர்களின் பிள்ளைகளும் வாழ்வார்கள்…

ஒவ்வொருவரும் தங்களுக்காக உழைத்து,
தங்களுக்காக மகிழ்ந்து,
தங்களுக்காக வாழ்ந்து,
தங்கள் சந்ததியை நல்ல நிலையில் உருவாக்கும்
ஒரு சமநிலையான வாழ்க்கை உருவாகும்.

வாழ்க்கையை இழந்து சொத்துக்களைச் சேர்க்காதீர்கள்…
வாழ்க்கையை வாழ்ந்துகொண்டே
பிள்ளைகளைச் சொத்தாக்குங்கள்!

நடைமுறையில் உள்ளதும் உணர்ந்ததும்

Zanuz Kariapper.

🚨 மக்களே அவதானமாக இருங்கள்! | டெங்கு நோய் பரவல் அதிகரிப்பு🦟 20 நாட்களில் 8,043 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளத...
21/08/2026

🚨 மக்களே அவதானமாக இருங்கள்! | டெங்கு நோய் பரவல் அதிகரிப்பு

🦟 20 நாட்களில் 8,043 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டெங்கு நோய் பரவல் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

🏠 வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களில் தேங்கியுள்ள நீரை அகற்றுங்கள்.
🪣 நீர் தேங்கக்கூடிய பாத்திரங்கள், டயர்கள் உள்ளிட்டவற்றை முறையாக அகற்றுங்கள்.
🦟 நுளம்பு பெருகும் இடங்களை அழிப்பதில் அனைவரும் ஒத்துழையுங்கள்.
🤒 காய்ச்சல், தலைவலி, உடல் வலி போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள்.

⚠️ டெங்குவைத் தடுப்பது நம் அனைவரின் பொறுப்பு!

📢 இந்த தகவலை உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பகிர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.

கலம் TV | Kalam TV
📰 உண்மையான செய்தி • சமூக விழிப்புணர்வு

#டெங்கு #டெங்குநோய் #சுகாதாரம் #விழிப்புணர்வு #கலம்TV

Address

Akkaraipattu
32400

Alerts

Be the first to know and let us send you an email when களம் TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to களம் TV:

Shortcuts

Share