01/02/2026
எமது பாடசாலையில் 2026 ஆம் கல்வி ஆண்டில் காலடி எடுத்து வைக்கும் புத்தம் புதிய மாணவச் சிட்டுக்களை வரவேற்று அகரம் எழுத ஆரம்பிக்கும் "வித்தியாரம்ப" நிகழ்வு பாடசாலை அதிபர் அஷ்-ஷேய்க் என்.எம்.பர்ஹான் (SLPS) தலைமையில் கல்வி அமைச்சின் சுற்றுநிருபத்திற்கமைவாக வெகு விமர்சையாக நடைபெற்றது.
இதில் புதிய மாணவர்கள் பாடசாலை 2ம் தர மாணவர்களால் மாலை அணிவித்து இனிப்பு வழங்கப்பட்டு, பேண்ட் வாத்தியம் முழங்க அக்கரைப்பற்று பெரிய பள்ளிவாசல் நுழைவாயிலிருந்து ஊர்வலமாக வரவேற்கப்பட்டு அறிஞர்கள், புத்திஜீவிகளால் அகரம் தொடங்கி வைக்கப்பட்டனர். மாணவர்களின் கலை, கலாசார நிகழ்ச்சிகளும் அரங்கேற்றப்பட்டன.
இந்நிகழ்வில்
• Mr.Chinthaka Abeywickrama அரசாங்க அதிபர்-அம்பாரை.
• Mr.Sujith Wethamulla -பிரதி பொலீஸ்மா அதிபர் -அம்பாரை.
• அல்-ஹாஜ் MS.Suhurdeen- LLB ,Management Consultant ,
• Mr.AS.Najath (ISA) EPSI -Coordinator
• அல்-ஹாஜ் MI.Nirfan – தொழிலதிபர்.
• Mr.
ULA.Razak -SDEC செயலாளர்
• Mr.MAC.Rusaik, Mr.STM .Nihman,- SDEC உறுப்பினர்கள்
• Mr.AG.Sigan (QA)
• Mr.MM.Risam - - உபதலைவர் பெரிய பள்ளிவாசல்
• மௌலவி Mr.RA.Faris
• Mr.J.Riyas- - பணிப்பாளர் Global Vision.
• Blue Waves Youth Club
மற்றும் பழைய மாணவர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் நலன் விரும்பிகளும் கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வு சிறப்பாக இடம்பெற ஒத்துழைப்பு வழங்கிய , புதிய மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கிய அனைவருக்கும் பாடசாலை சமூகம் சார்பாக நன்றி.
அதிபர்