Ayesha Muslim Ladies College Akkaraipattu

Ayesha Muslim Ladies College Akkaraipattu

Share

Ayesha Muslim Ladies College is known and recognized in Sri Lanka as the premier state educational Government institution for Muslim Girls.

OUR VISION
To be centre of excellent in providing leadership for the highest quality education in a dynamic multi cultural society. OUR MISSION
To provide quality education for all, by developing curricula, enhancing knowledge and skills to build a just and humane society.

எமது நோக்கு
ஓர் உத்வேக பல்லின கலாசார சமூகத்தில் உயர் தரமிக்க கல்விக்கான தலைமைத்துவத்தை வழங்கும் தலை சிறந்த நிறுவனமாக ச

27/10/2017

Ayesha Muslim Ladies College Akkaraipattu Frame

11/10/2017

ஆசிரியர் தினவிழா இன்னும் சொற்ப்ப நேரங்களில் ஆரம்பமாக இருக்கின்றது.
👨🏼‍🏫 👩🏼‍🏫

05/10/2017

ஆயிஷா முஸ்லிம் மகளிர் கல்லூரியில் இவ்வருடம் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 16 மாணவிகள் சித்தியடைந்துள்ளனர், இதில் முதல் இடத்தை இரு மாணவிகள் தட்டிக்கொன்டுள்னர்
மாஷா அல்லாஹ்!!!

Dr. ஹலீம் பாத்திமா சுஹா -173
பாத்திமா (பொத்துவில்)-173

அவர்களை தட்டிக்
கொடுங்கள்
ஏறி மிதிக்காதீர்கள்...

அவர்கள் சிறுவர்கள்...
எப்போதுமே கொண்டாடப்பட வேண்டியவர்கள்...
நமது வைராக்கியத்தையும் அந்தஸ்த்தையும் கட்டிக்கொண்டு அலையும் செக்கு மாடுகளோ பொதிசுமக்கும் கழுதைகளோ அல்ல...

சில பெற்றோரின் இன்றைய மனநிலையும் நடவடிக்கைகளும்
ஸ்கொலர்ஷிப் எக்ஸாமை Child Abuse ற்கான விதையாக்கி விட்டிருப்பது தெரிகிறது...
்கர் ஜவ்பர்

06/03/2017

Fact

27/10/2016

Don't be afraid to make a mistake 👌🏻

Photos 14/10/2016

Who really knows this class room

Photos 11/10/2016

Old Entrance of Ayesha Muslim Ladies College

Photos 09/10/2016
06/10/2016

Happy Teacher's Day
அறிவின் முகவரிக்கு

எழுத்தறிவிபப்பவனே
நீ பார்வையிலே
தெய்வ மனிதன்
பணியிலோ
மனித தெய்வம்

அறிவின் முகவரி காட்டப்போய் - உன்
ஆயுளின் முகவரியை
தொலைத்துக்கொண்டாயே

பூஜ்யங்களை புள்ளிகளாக்க புறப்பட்டதாலா
உன் வாழ்வையே நீ
பூஜ்யமாக்கிக் கொண்டாய்

நீ லட்சங்களூக்காக அன்றி
லட்சியங்களுக்காக வாழ்வதாலா - உன்
சொந்தப் பரம்பரையில்
சூன்ய ரேகைகள்
விழுந்து கொண்டிருக்க
மாணவ பரம்பரைக்கு
விடியல் ரேகை வரைந்து கொண்டிருக்கிறாய்

நியூட்டனையும்
நீல் ஆம்ஸ்ரோங்கையும்
சரித்திரங்களாக்கிவிட்டு
நீ மட்டும்
சம்பவமாகிப்போனாயே

பாடசாலையைப்
பௌர்ணமியாக்கப்போய்
உன் வீட்டை
அமாவாசையாக்கியவனே
உன்னால்
எவரெஸ்டில் ஏறியது
உன் பாடசாலைதான்
மரியானாவுக்குள்
மறைந்துபோனதே
உன் மண் குடிசை

ஆயிரம் பேருக்கு நீ
அறிவுப்பசி தீர்த்திருக்கிறாய்
உன் பசியைத்தீர்க்க
ஒருவரையும் காணோமே

புத்த்தன் ஏசு காந்தி
முகம்மத் றஸூலின்
புனிதப்பணி புரியும் மனிதனே
ஊரார் பிள்ளைக்கு
ஊட்டி வளர்த்தால்
தன் பிள்ளை தானேவளரும் - என்ற
தத்துவம் பொய்க்காது
உன்
லட்சியத்தில் நிமிர்ந்து நில்

அன்னையாய் தந்தையாய்
ஈசனாய்க்காணும் ஆசானே
விடை பெறும் முன்
விண்ணப்பம் ஓன்று

யுத்தத்துள் சிக்குண்டு
ரத்தத்தால் எழுதப்படும்
மானிட விதியைப்பற்றி
யோசிப்பாயா - அதை
மாற்றி எழுதிவாசிப்பாயா

உன் விரல் கொண்ட
வெண்கட்டியை
வெள்ளை நிறப்புறாவாக்கி
சமாதானத் தூதொன்று
அனுப்புவாயா
சாந்திதனை உலகுக்குத்
திருப்புவாயா

அருட்கவி
அக்கரையூர் அப்துல் குத்தூஸ்

Copied from Ithris WS Abusali

05/10/2016

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபறக்காத்துஹு.......

அக்கரைப்பற்று ஆயிஷா முஸ்லிம் மகளிர் கல்லூரி பாடசாலையின் 2016 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 14 மாணவிகள் சித்தி பெற்றுள்ளார்கள், முதலாம் மாணவி Mohameed Faizal Afkha Jazoom புலமைப் பரீட்சையில் 180 புள்ளிகளை பெற்றுள்றார்.
இவர்களை வழிநடாத்திய ஆசிரியர்களுக்கு
Mr. Asraf
Mrs. Ayesha Sidiq
Mrs. Jumaani
அக்கரைப்பற்று ஆயிஷா முஸ்லிம் மகளிர் கல்லுரி சார்பாக மிக்க நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

நிர்வாகம்.

Photos 23/09/2016

... .. . நினைவூட்டல். .. ...

2000 ஆண்டு புலமை பரீட்சையில் சித்தி பெற்ற 24 மாணவிகள்

Photos 21/09/2016

சேவை நலன் பாராட்டு மலருக்கான விளம்பரம்

ஆசிரியர் , ஊழியர்களல் ,மாணவிகள்,பெற்றொர்கள் , நலன்விரும்பிகள் அனைவருக்கும் அதிபர் சேவை நலன் பாராட்டு மலருக்கான விளம்பரம் சேகரித்தல் ஜனாப் . எம் .ஏ .சி . அப்துல் ஹையூ - அதிபர் அக் ஆயிஷா முஸ்லீம் மகளிர் கல்லூரி , அக்கரைப்பற்று எமது கல்லூரியின் நீண்ட காலம் கல்விப்பணி புறியது தனது 60வது வயது பூர்த்தியோடு எதிர்வரும் 2016.12.25ம் திகதியுடன் சேவையிலிருந்து ஓய்வு பெற்று செல்லவுள்ள எமது கல்லூரியின் முதல்வர் ஜனாப் எம் .ஏ .சி அப்துல் ஹையூ அவர்ளுகக்கான சேவை நலன் பாராட்டு விழாவை சிறப்பாக நடத்துவத்துவதற்க்கு எமது பாடசாலையின் பணிக்குழுவினர் தீர்மானித்துள்ளனர்
அதன் ஓர் அங்கமாக வெளியீடு செய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ள அதிபர் சேவை நலன் பாராட்டு மலருக்கான வாழ்த்துச் செய்திகளை பாடசாலைச்சமூகம் குறிப்பாக ஆசிரியர் மாணவர்களின் தெரிவு செய்யப்பட ஆக்கங்கள் கல்வி மற்றும் அரசியல் புலத்தில் சேவையாற்றுவோரிடமிருந்தும் , ஓய்வு பெற்றோரிடம்மிருந்தும் பெற்று வெளியீடு செய்வதென எமது மலர்க்குழு தீர்மானித்துள்ளது

இதனடிப்படையில் இம்மலரை வெளியிட ஏற்படும் செலவுத் தொகையின் ஒரு பங்கை அம்மலரில் பிரசுரிக்கப்படும் விளம்பரங்கள் மூலமாக பெறுவதற்கு எமது மலர்க்குழு எதிர்பார்க்கிறது

எனவே , பாடசாலை பழைய மாணவர்கள் என்ற அடிப்படையில் தமது ஆசானை மிக உயர்ந்த முறையில் பாராட்டு விழா ஒன்றை ஏற்றப்பாடு செய்ய உங்களால் முடிந்தன உதவிகளை செய்ய முன்வருகிறவர்கள் நிருவாகத்தை தொடர்புகொள்ளவும்

நிர்வாகம்
Mrs.N harudeen (Deputy principal)
Mr.DLA Ashraff (Vice Principal)
Mr CS Muzammil (Vice Principal)
ஆயிஷா முஸ்லீம் லேடீஸ் காலேஜ்
https://www.facebook.com/ayeshaakp/

மிக்க நன்றி
Akmal Mathihul
0752867175
http://akmalmathihul.blogspot.com/

Want your school to be the top-listed School/college in Akkaraipattu?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address

Mudaliyar Road
Akkaraipattu
32400

Opening Hours

Monday 07:30 - 14:00
Tuesday 07:30 - 14:00
Wednesday 07:30 - 14:00
Thursday 07:30 - 14:00
Friday 07:30 - 12:00