24/08/2026
அன்புடையீர் வணக்கம்
✨அகரம் கல்வி அறக்கட்டளை
சார்பில், இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்மொழித் திறனை மாணவர்களுக்கு வளர்க்கும் வகையில் ஓவிய போட்டி, கையெழுத்து போட்டி, கவிதை போட்டி, கட்டுரை போட்டி எனப் பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.
இப்போட்டிகளில் ஆச்சாரியா ஸ்ரீ சம்பூர்ண வித்யாலயம் பள்ளியில் 121 மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு அகரம் அறக்கட்டளை சார்பாக பரிசுகள் வழங்கப்பட்டன.
போட்டியில் பங்குபெற்ற அனைத்து மாணவ மாணவிகளுக்கும் சான்றிதழும் பதக்கமும் பள்ளியின் முதல்வர் திருமதி வி.காயத்ரி அவர்கள் வழங்கினார்கள்.
போட்டிக்கு சிறப்பாக பணியாற்றிய தமிழ் துறை ஆசிரியர்களையும் பள்ளியின் முதல்வரையும் அகரம் கல்வி அறக்கட்டளை சான்றிதழ் வழங்கி கௌரவித்தது.
💥நன்றி💥