நாட்டு கோழி

நாட்டு கோழி Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from நாட்டு கோழி, g m, Vellore.

வீட்டு முறைப்படி செரிலாக்இந்த செரிலாக் சித்த மருத்துவர் உமா வளவனின் ஆலோசனை படி இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட செரிலாக். ...
01/02/2017

வீட்டு முறைப்படி செரிலாக்

இந்த செரிலாக் சித்த மருத்துவர் உமா வளவனின் ஆலோசனை படி இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட செரிலாக். எந்த வகையான இரசாயன பொருட்கள் கலப்படம் செய்யாமல் குழந்தைகளுக்கான ஒரு சிறந்த ஊட்டசத்துமிக்க இயற்கையான உணவு.

இந்த உணவை உங்கள் குழந்தைகளுக்கு உங்கள் வீட்டில் செய்து வைத்து கொள்ளவும். கடையில் வாங்க வேண்டாம். உங்களுக்கு தான் உங்கள் குழந்தை ஆரோக்கியம் முக்கியம்.

இந்த உணவை 9 மாத குழந்தை முதல் மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய குழந்தைகளுக்கு தாரளமாக கொடுக்கலாம்.

நல்ல தரமான சுத்தமான , புதிய பருப்பு வகைகளை பயன்படுத்தவும். எவர்சில்வர் பாத்திரம் மற்றும் பயன்படுத்தும் ஸ்பூன் ஈரத்தன்மை இல்லாமல் இருப்பது மிக மிக அவசியம்.

தேவையான பொருட்கள்
முளையிட்ட கேழ்வரகு 1 கப்
முளையிட்ட கம்பு 1 கப்
முழு முந்திரி பருப்பு 1/2 கப்
தோல் நீக்கிய பாதாம் பருப்பு 1/2 கப்
கோதுமை 1 / 2 கப்
ஓடுகள் நீக்கிய பிஸ்தா பருப்பு 1/2 கப்
வேர்கடலை 1/2 கப்
வால்நட் 1/2 கப்
பொட்டுகடலை 1/2 கப்
சுக்கு தூள் 1 தேக்கரண்டி

பாதாம் தோல் நீக்கும் செய்முறை
1. தண்ணீரை நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். மற்றுமொரு பாத்திரத்துல பாதாம் பருப்பை எடுத்து கொண்டு அதில் பாதாம் பருப்பு மூழ்கும் அளவுக்கு கொதிக்க வைத்த தண்ணீரை ஊற்றி 15 நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும்.

2. பிறகு அந்த தண்ணீரை வடித்து விட்டு அதில் குளிரூட்டப்பட்ட தண்ணீரை ஊற்ற வேண்டும். பிறகு பாதாம் பருப்பின் மேலுள்ள தோலை இரண்டு விரல்களால் பிதுக்கினால் தானாக மேல் தோல் பிரிந்து விடும்.

பயிர்களை முளையிட வைப்பது

1. கேழ்வரகு மற்றும் கம்பை தனி தனியாக நன்றாக அலசி கொண்ட பிறகு அதை ஒரு பாத்திரத்துல போட்டு அது மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்ற வேண்டும்.

2. 1 நாள் முழுவதுமாக ஊறவைக்க வேண்டும். பிறகு தண்ணீரை முழுவதுமாக வடித்து விட்டு அதை ஒரு சுத்தமான காட்டன் துணியில் கேழ்வரகு மற்றும் கம்பை தனி தனியாக இருக்கி கட்டி அதை 12 மணிநேரம் வைக்க வேண்டும். பயிர் முளைத்து இருப்பதை காணலாம்.

3. சில சமயங்களில் ( தட்பவெப்பநிலைக்கு ஏற்றவாறு ) முளை வருவதற்கு 1 அல்லது 2 நாட்கள் கூட ஆகிவிடும்.

செரிலாக் பொடி செய்முறை

1. ஒரு வடசட்டியில் எண்ணெய் விடாமல் முளையிட்ட பயிரை தனி தனியாக நன்றாக வறுத்து எடுத்து வைத்து கொள்ளவும்.

2. ஒரு வடசட்டியில் எண்ணெய் விடாமல் கோதுமை , பருப்பு வகைகள், வேர்கடலை மற்றும் பொட்டுகடலை அனைத்தையும் தனி தனியாக வறுத்து எடுத்து தனியாக ஆற வைத்து கொள்ளவும்.

3. பிறகு நன்றாக ஆறிய உடன் அதை மிக்ஸியில் தனி தனியாக போட்டு நன்றாக நைசாக பொடியாக அரைத்து கொள்ள வேண்டும்.

4. அதில் சுக்கு பொடியை சேர்த்து நன்றாக அரைத்து கொள்ள வேண்டும்.

5. பருப்பு வகைகளை அரைக்கும் போது அதிக நேரம் அரைக்க கூடாது, அவ்வாறு அரைத்தால் எண்ணெய் வந்து விடும்.

6. பிறகு அனைத்தையும் ஒன்றாக கலந்து எவர்சில்வர் டப்பாவில் போட்டு பிரிஜ்ல பத்திர படுத்தி வைத்து கொள்ளவும்.

செரிலாக் செய்முறை

வீட்டு முறை செரிலாக் பொடி 1 மேஜைக்கரண்டி
பனை கற்கண்டு பொடித்தது 2 தேக்கரண்டி
தண்ணீர் 1 கப்
பசுநெய் 1 தேக்கரண்டி

1. தண்ணீரை நன்றாக சிறுதீயில் கொதிக்க வைக்க வேண்டும். அதில் பொடித்து வைத்துள்ள பனை கற்கண்டை போட்டு கொதிக்க விட்டு அதில் உள்ள குப்பைகளை அகற்ற வேண்டும்.

2. அந்த சமயத்துல செரிலாக் பொடியை தண்ணீர் கொண்டு கட்டியில்லாமல் பேஸ்ட் போல் ஆக்கிகொள்ள வேண்டும்.

3. பிறகு இந்த பேஸ்டை கொதிக்கும் பனை கற்கண்டு கரைசலில் ஊற்றி கரண்டியால் கலக்க வேண்டும். இந்த கரைசலை 5 நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும்.

4. இப்பொழுது இந்த கலவை கேழ்வரகு கூழ் பததிற்கு வந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு அதில் பசுநெய்யை போட்டு நன்றாக கலக்கி ஆறவைத்து.

5. குழந்தை உண்ணும் அளவிற்கு சூடு வந்த உடன் குழந்தைக்கு பரிமாறவும்.

நம் முன்னோர்கள் ஒன்றும் மூடர்கள் அல்ல..!அந்நாட்களில் வீட்டு சுவர்களில் ஏன் வறட்டி காய வைக்க வேண்டும் ? இந்தப் பழக்கம் ஏன...
30/01/2017

நம் முன்னோர்கள் ஒன்றும் மூடர்கள் அல்ல..!

அந்நாட்களில் வீட்டு சுவர்களில் ஏன் வறட்டி காய வைக்க வேண்டும் ? இந்தப் பழக்கம் ஏன் வழக்கமானது?

ஒவ்வொரு பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை வீட்டுச்சுவரின் வெளிப்புறத்தில் வறட்டி காய வைக்கும் பழக்கும் தமிழகம் முழுவதும் கிராமப்புறங்களில் காணப்பட்டதை நாம் அறிவோம். அது ஏன்?

அதற்கு முக்கிய காரணம், வறட்டிகளால் சூழப்பட்ட சுவர்கள் வெளியில் எந்த தட்பவெப்ப நிலை இருந்தாலும் சரியாக 28.35°C வெப்பநிலையை வீட்டிற்குள் வழங்கும். இந்த விஞ்ஞான உண்மை உங்களை திகைக்க வைக்கலாம்.! மேலும் படியுங்கள்.

அப்போதெல்லாம் தடுப்பூசியோ மருந்து மாத்திரையோ தமிழகத்தில் இல்லை. காரணம் பசு வறட்டியில் உள்ளது. நாட்டு மாடுகளின் A2 சாணம் என்பது ஒரு மிகச்சிறந்த கிருமி நாசினி என்பது அறிவியல்.

18 மாதங்கள் நிரம்பிய ஒவ்வொரு பசுவின் சாணமும் ஆயிரம் தடுப்பூசிக்கு சமம். அப்படியான சாணத்தை தனித்தனியாக ஒவ்வொருவர் முகத்திலும் தனித்தனியாக அடிக்க முடியாது என்பதால் வீட்டுச்சுவற்றில் அடித்து வந்தனர். இதன் மூலம் முழுமையாக சுத்திகரிக்கப்பட்ட ஒரு Safe Zone-ல் நம் தாத்தா பாட்டி காலம் வரை வாழ்ந்தார்கள் என்றால் நம்ப முடிகிறதா?

அதுபோல, வளி மண்டலத்தில் இருந்து வரும் புற ஊதா கதிர்கள் மற்றும் காஸ்மிக் கதிர்கள் இந்த நன்கு காய்ந்த வறட்டியில் படும்போது, மின்காந்த சக்தி உந்தப்பட்டு அந்த வீடே அணுக்கதிர்கள் கூட துளைக்க முடியாத ஒரு எஃகு அரணாக மாறிப்போகும். ஆனால் இதன் பலன் 15 நாட்களுக்கு மட்டுமே. இதனாலேயே சோழர்களின் கோட்டையை ஆங்கிலேயர்களால் வீழ்த்த முடியவில்லை என்பது தனிக்கதை.

மேலு‌ம், இம்மாதிரியான வறட்டி தட்டும் பழக்கம் கைகள் மூலமாக உடலில் ஏற்படும் கெட்ட கொழுப்புகளை அகற்றி சர்க்கரை நோயை கட்டுக்குள் இருக்க வைத்தது. சுற்றிலும் வறட்டிகளை கொண்ட வீடுகளில் 48 நாட்கள் புழங்கி வந்தால் அலர்ஜி, கேன்சர், இருதய கோளாறு போன்றவை சரியாகும் என சித்தர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலைநாட்டினர் அவற்றின் மகிமையைப் புரிந்துக்கொண்டு தான் தற்போது வறட்டியை அதிக அளவில் தங்கள் வீடுகளில் சேமித்து வைக்கின்றனர்.

வறட்டி தயாரிக்கும் முறைக்கு காப்புரிமையும் பெற்றுள்ளனர். ஆனால் நாமோ, பகுத்தறிவு என்று நாம் நமது முன்னோரின் சம்பிரதாயங்களில் இருக்கும் விஞ்ஞான அறிவைப் புரிந்துகொள்ளாமல்

கேலிசெய்து கேவலப்படுத்துகிறோம் .

நம் முன்னோர் ஒன்றும் முட்டாள்கள் இல்லை..!
இப்போது நாம் பேசும் பகுத்தறிவு அவர்களின் கால் தூசுக்கு ஈடாகாது..!

நம் முன்னோரின் பழக்கவழக்கங்களை நம்மால் நடைமுறைப்படுத்த முடியாவிட்டாலும் பரவாயில்லை...

அவற்றைக் கேலி செய்யாமல் இருந்தாலே போதும்..!

மறக்காம ஷேர் செய்ங்க!!

கால்நடை சார்ந்த கேள்விகளும் பதில்களும் பாகம் - 10வெள்ளாடு வளர்ப்பு :வெள்ளாடு வளர்ப்பு – பொதுக் குறிப்புகள் மற்றும் வளர்ப...
27/01/2017

கால்நடை சார்ந்த கேள்விகளும் பதில்களும் பாகம் - 10

வெள்ளாடு வளர்ப்பு :

வெள்ளாடு வளர்ப்பு – பொதுக் குறிப்புகள் மற்றும் வளர்ப்பு முறைகள் ?

திட்டமிட்டு வெள்ளாடு வளர்க்கத் தொடங்குபவருக்கு, விலங்கினங்கள் மீது ஒரு பாசமும், ஆர்வமும் இருக்க வேண்டும். இது ஓர் அடிப்படைத் தேவை எனலாம். வெள்ளாடுகள் நம்மைப்போல் உயிருள்ளவை. ஆகவே, அவற்றின் மீது அக்கறை காட்டினால்தான் அவை சிறக்கும். அதக் காரணமாக அதிக வருவாய் பெற முடியும். அடுத்து, அதிக அளவில் நல்ல முறையில் வெள்ளாடு வளர்ப்பவருக்குத் தேவையான நிலமும், முதலீடும் தேவை. அடுத்தபடியாக ஓரளவு வெள்ளாட்டுப்பால் விற்பனைக்கும் ஏற்பாடு செய்து கொள்ளுவது நல்லது. ஏனெனில் இறைச்சிக்காக ஆடுகள் விற்பது எளிதானது. ஆனால், ஆட்டுப்பால் விற்பனை செய்ய சிறப்பான விளம்பரம் தேவை.
நல்ல பண்ணை அமைய நல்ல தரமான ஆடுகள் தேவை. நமது இன்றைய இறைச்சித் தேவை கருதி இறைச்சிக்கான வெள்ளாடுகள் வளர்ப்பதே சிறந்தது. நமது நாட்டு ஆடுகள் நல்ல இறைச்சி வழங்குபவை. ஆனால் வளர்ச்சி வீதம் குறைவு. அத்துடன் கொடுக்கும் பால் அளவு குறைவு. ஆகவே இவ்விரு குணநலன்களைக் கூட்ட, நாட்டு ஆடுகளை நம் நாட்டின் சிறந்த இனங்களுடன் இணைத்துக் கலப்பின உற்பத்தி செய்து வளர்க்கலாம்.

எளிதானது. ஆனால், ஆட்டுப்பால் விற்பனை செய்ய சிறப்பான விளம்பரம் தேவை.

நல்ல பண்ணை அமைய நல்ல தரமான ஆடுகள் தேவை. நமது இன்றைய இறைச்சித் தேவை கருதி இறைச்சிக்கான வெள்ளாடுகள் வளர்ப்பதே சிறந்தது. நமது நாட்டு ஆடுகள் நல்ல இறைச்சி வழங்குபவை. ஆனால் வளர்ச்சி வீதம் குறைவு. அத்துடன் கொடுக்கும் பால் அளவு குறைவு. ஆகவே இவ்விரு குணநலன்களைக் கூட்ட, நாட்டு ஆடுகளை நம் நாட்டின் சிறந்த இனங்களுடன் இணைத்துக் கலப்பின உற்பத்தி செய்து வளர்க்கலாம். இது குறித்து இனச்சேர்க்கை என்னும் பகுதியில் விரிவாக விவாதிக்கலாம்.

வெள்ளாடுகள் வாங்கும் போது கவனிக்க வேண்டியவை :

1. இளம் ஆடுகளையே வாங்க வேண்டும். நல்ல ஆடுகள் பத்து ஆண்டுகளுக்குப் பலன் கொடுக்கும். இளம் ஆடுகளைத் தேர்ந்தெடுக்கப் பல் பார்த்து வாங்க வேண்டும். பல் அடிப்படையில் வயது நிர்ணயிப்பது.

3 மாத வயது வரை — பால் பல்
1 1/2 வயது வரை — 2 பல்
2 வயது வரை — 4 பல்
3 வயது வரை — 6 பல்
4 வயது வரை — 8 பல்

வெள்ளாட்டுக் குட்டிகள் பிறக்கும் போதே, முன் தாடையில் ஆறு வெட்டும் பற்கள் இருக்கும். ஆனால் கன்றுகளுக்கு இரண்டு பற்கள் மட்டுமே உண்டு.

இரண்டு பல் வயதுள்ள ஆடுகளைத் தேர்ந்தெடுப்பதே சிறந்ததாகும்.

2. ஆடுகளை வாரச் சந்தையில் வாங்குவதைவிச் சிறந்த பண்ணைகளிலிருந்து வாங்குவது நல்லது. அதுவும் நோய்த் தாக்குதல் அறடற பண்ணைகளிலிருந்து வாங்குவது நல்லது. அருகே பண்ணைகள் இல்லாத சூழ்நிலையில் சில ஆடு வளர்ப்பவர்களிடம் வாங்கிச் சேர்க்கலாம்.

3. பல குட்டிகள் போடும் ஆடுகளைத் தேர்ந்தெடுப்பது நல்லது. தாய் ஆடு, 3-4 குட்டிகள் போட்டால், அதன் பெண் குட்டியும் அவ்வாறே பல குட்டிகள் ஈனும். தமிழ் நாட்டின் பல பகுதிகளிலும் 3-4 குட்டிகள் ஈனும் ஆடுகளை வளர்ப்போர் சில ஊர்களில் இருக்கின்றார்கள். இவற்றைத் தேடி வாங்கலாம். இப்படி நான் வாங்கிய ஆடு முதல் ஈற்றில் மூன்று குட்டியைத் தாங்கியது.

4. போட்ட குட்டிகளைக் காக்கவும், வளர்ப்போருக்குச் சிறிது பால் கொடுக்கவும் ஏற்றதாக, நன்கு பால் வழங்கும் திறனுடைய பெட்டையாடாக இருக்க வேண்டும். நன்கு திரண்ட வளர்ச்சியடைந்த மடியுள்ள ஆடுகளைத் தேர்வு செய்ய வேண்டும். மடியில் பாதிப்புள்ளதா என்பதை நன்கு ஆய்வு செய்து வாங்க வேண்டும்.

5. மிருதுவான, பளபளப்பான தோல் கொண்ட ஆடுகளைத் தேர்வு செய்ய வேண்டும். இது ஆட்டின் உடல் நலத்தைக் காட்டும்.

6. சுறுசுறுப்புடன் அகன்ற ஒளியுடன் கூடிய கண்களை உடைய ஆடுகள் தேர்வு செய்யப்பட வேண்டும். இதுவும் ஆட்டின் நலத்தைக் காட்டுவதே.

7. முதுகுப் புறமும், பின் பகுதியும், அகன்று விரிந்து இருக்கும் ஆடுகள் சிறந்தவை. அகன்ற முதுகுப் புறமும் விலா எலும்பும் அதிக தீவனத்தை எடுக்கும் தன்மையையும், அகன்ற பின்புறம் சிறந்த இனப் பெருக்கக் குணத்தையும் காட்டுவனவாகும்.

புதிதாக வாங்கிய வெள்ளாடுகளை உடனடியாக மற்ற ஆடுகளுடன் சேர்க்கக் கூடாது. ஆடுகளை ஒதுக்கி வைத்து, அப்பகுதியில் உள்ள தொற்று நோய்களுக்கு எதிராகத் தடுப்பூசி போட வேண்டும். இத்துடன் உடலில் உள்ள உண்ணி, பேன், தெள்ளுப் பூச்சிகளை ஒழிக்க மருந்து தெளிக்க வேண்டும். பிறகு, குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும். இவையாவும் முடிந்த பின்பே பண்ணையிலுள்ள மற்ற ஆடுகளுடன் சேர்க்க வேண்டும்.

வெள்ளாடு வளர்ப்பு முறைகள் குறித்து எழுதுமுன் வெள்ளாடுகளின் குணநலன்கள், பழக்க வழக்கங்கள் பற்றித் தெரிந்து கொள்ளுவது நல்லது.

1. வெள்ளாடுகளுக்கு, அசைகின்ற வலுவான மேலுதடும், திறனுள்ள நாக்கும் உள்ளதால், முட்செடி, சுள்ளி, மரங்களின் பட்டைகள் ஆகியவற்றைக் கடித்துத் தின்ன முடியும்.

2. வெள்ளாடுகள் செடி, கொடிகளைக் கொய்து தின்னும் குணமுடையன. இவை செம்மறி ஆடுகளைப் போன்று குனிற்து புற்களை மேயுத் தன்மையுடையதல்ல.

3. செம்மறி ஆடுகளைப் போல், வெள்ளாடுகள் சேர்த்து மேயா. தனித்தனியாகப் பிரித்து சென்று மேயும். அருகிலுள்ள தன்னைச் சேர்ந்த வெள்ளாடுகளைக் கண்ணால் பார்க்காமல், மூக்கால் மோந்து கண்டு கொள்ளும்.

4. செம்மறி ஆடுகளைப் போன்று, வெள்ளாடுகளை ஓட்டிச் செல்ல முடியாது. மாறாக அவற்றை நடத்திச் செல்ல வேண்டும்.

5. வெள்ளாடுகள், நெருக்கடியால் சங்கடப்படுவது போலத் தனிமைப் படுத்தினாலும் பாதிக்கபடும். தனியாக ஓர் ஆட்டை வளர்ப்பது சிறந்ததன்று.

6. வெள்ளாடுகளுக்கு மிக மெல்லிய தோல் உள்ளதாலும், தோலுக்கு அடியில் கொழுப்பு இல்லாததாலும், குளிர், மழையை அதிகம் அவை தாங்கா. மழை பெய்ய ஆரம்பித்தால், வெள்ளாடு ஓடி ஒதுக்குப் புறத்தைத் தேடுவதைக் காணலாம். மேலும் வெள்ளாடுகள் வெப்ப நாடுகளில் நன்கு செழித்து வளரும்.

7. செம்மறி ஆடுகளுக்கு அதன் கூட்டமே அதற்குப் பாதுகாப்பு எதிரியைக் கண்டால் கத்தாமல் நின்று விடும். வெள்ளாடு, அங்கும் இங்கும் ஓடிக் கத்தி ஓலமிடும்.

தொகுப்பு : A R தியாகரஜன், கால்நடை மருத்துவர், சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம்,

26/01/2017
26/01/2017
26/01/2017
கோவைக்காய் வெளிநாட்டில் வராது,அதனால் வெள்ளரிக்காயை புகழ்கிறார்கள்,கொத்தவரங்காய் வெளிநாட்டில் வராது,அதனால் பீன்ஸை புகழ்கி...
26/01/2017

கோவைக்காய் வெளிநாட்டில் வராது,
அதனால் வெள்ளரிக்காயை புகழ்கிறார்கள்,
கொத்தவரங்காய் வெளிநாட்டில் வராது,
அதனால் பீன்ஸை புகழ்கிறார்கள்,
முருங்கைக்காய் வெளிநாட்டில் வராது,
அதனால் புரொக்கோளியை புகழ்கிறார்கள்,
தேங்காய் வெளிநாட்டில் வராது,
அதனால் பீட்ரூடை புகழ்கிறார்கள்,
அரசாணிக்காய் வெளிநாட்டில் வராது,
அதனால் உருளைக்கிழங்கை புகழ்கிறார்கள்,
பூசணிக்காய் வெளிநாட்டில் வராது,
அதனால் முள்ளங்கியை புகழ்கிறார்கள்,
வாழைப்பூ அதிகம் வெளிநாட்டில் வராது,
அதனால் முட்டகோசை புகழ்கிறார்கள்,
மிளகு வெளிநாட்டில் வராது,
அதனால் பச்சை மிளகாயை புகழ்கிறார்கள்,
கடுகு அதிகம் வெளிநாட்டில் வராது,
அதனால் ஆலிவ் ஆயிலை புகழ்கிறார்கள்,
வெளிநாட்டு மோகம் நம்நாட்டை அழித்துக்கொண்டே வருகிறது.
தடுப்பார் யார்?
நம் பூமி புண்ணிய பூமி
நம் நாட்டில் வாழாதவர்கள்
அதிஷ்டம் இல்லாதவர்கள்!
நம் நாட்டில் இருந்தும்
வாழத்தெரியாதவர்கள்
துர்பாக்கியசாலிகள்!

16/01/2017

எங்கள் வீட்டின் இரு செல்லக் குட்டிகளின் வீரம்....

இது எம்மக்களின் அறியாமையை நீக்கி, விழிப்புணர்வு ஏற்படுத்திட  முடியாத என்ற ஆதங்கத்தில் யாம் கூறவரும் பதிவு.கொக்காே காேலா ...
23/12/2016

இது எம்மக்களின் அறியாமையை நீக்கி, விழிப்புணர்வு ஏற்படுத்திட முடியாத என்ற ஆதங்கத்தில் யாம் கூறவரும் பதிவு.

கொக்காே காேலா நிறுவனத்தின் உண்மை நிலையை ஏற்கனவே எல்லாேரும் அறிந்த ஒன்றுதான்.
அமெரிக்க நிறுவனமான கொக்கோகோலா தனது குளிர்பான தயாரிப்புகளின் விற்பனை தாெடர்ந்து வீழ்ச்சியடைந்து வருவதால், ஒரு புதிய வியாபார உக்தியை கையாண்டு வருகிறது.

அதுதான் குளிரூட்டப்பட்ட பால் விற்பனை...!
இது கடந்த சனவரி மாதம் 4ஆம் நாள் பெங்களூருவில் தான் முதன் முதலில் அறிமுகபடுத்தபட்டு,
விற்பனைக்கு வந்துள்ளது.
இதை நிறைய பேர் அறிய வாய்ப்பில்லை.
தற்பாேது இந்த பாலின் விலை
200மி.லி-க்கு ரூ.25 என நிர்ணயம் செய்துள்ளனர்.
அப்படி பார்த்தால் 1 லிட்டர் பாலின் விலை ரூ.125 ஆகின்றது.

இப்பாெழுது ஒரு வழியாக நம் தமிழகத்தில் நுளைந்துள்ளது.
குறிப்பாக சென்னை சூப்பர் மார்க்கெட்டுகளில், அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது. இதன் அறிமுகச் சலுகையாக ஒன்று வாங்கினால் ஒன்று இலவசமாம்.

இது இப்படியே தாெடர்ந்தால், வருங்காலத்தில் பால் விலையை நிர்ணயிப்பது கொக்கோ கோலா நிறுவனம்தான் என்ற நிலை உருவாகும்.
ஜல்லிக்கட்டு தடையின் பின்னணி இது சார்ந்த ஒன்றே ஆகும்.
நம் நாட்டு மாடுகளை 'பீட்டா' அழிக்கத்துடிக்கும் காரணமும் இதுதான்.
இன்னாெரு அதிர்ச்சியான தகவல் என்னவெனில், இந்த காெக்காே காேலா பால் விற்பனையில் ரிலையன்ஸ் நிறுவனமும் கை காேர்த்துள்ளது.
எனவே தாங்கள் (படிப்பவர்) எவராயினும், இந்த பாலை வாங்கி வந்தாலாே அல்லது வாங்க நினைத்தாலாே தயவுகூர்ந்து இதை வாங்குவதை தவிர்த்திடுகள்.
தமிழக அரசின் ஆவின் மற்றும் உங்களது அருகாமையில் உள்ள பாலகங்கள் ஆகியவற்றில் பாலை வாங்கி, உள்நாட்டு தயாரிப்புகளை ஆதரியுங்கள்.

நமது நாட்டு பசும்பாலின் அருமையை அறிந்தவர் சிலரே.
ஆனால் மேற்கத்திய நாட்டினர் நம் நாட்டு பசும்பாலின் பயனை நன்கு அறிந்து வைத்துள்ளனர்.
ஆகையால் தான் நம் நாட்டு பசுவின் பாலுக்கும், சீம்பாலுக்கும் அங்கு கடும் தட்டுபாடு.

நம் நாட்டு மாடுகள்தான் எந்த ஒரு காலநிலையிலும் வாழும் சக்தி படைத்தவை.
எனவே தான் வெட்டுக்கு அனுப்புவதை பாேன்று, பல ஆயிரம் நாட்டு மாடுகள் வளர்ப்புகாகவே சில ஐராேபிய நாடுகளுக்கும், அமெரிக்காவிற்கும் ஏற்றுமதி செய்யப்படுள்ளன என்பது வெகு காலமாக நாம் அறியாத ஒன்று.
ஆகவே விரைவில் நாட்டு மாடுகள் இந்தியாவில் அழிக்கப்பட்டு, பால் உற்பத்தியில் அயல்நாட்டு நிறுவனங்களின் தயாரிப்புகள் களமிறங்க உள்ளன.
இதற்கு ஆரம்பம்தான் இந்த காெக்கோ காேலா பால் விற்பனை.
எனவே இதை ஆரம்பத்திலேயே தவிர்த்திட்டால் நம்மினம் காக்கப்படும்.

இந்த பதிவை படிப்பவர் தங்களின் நண்பர்களிடத்திலாே அல்லது உற்றாரிடத்திலாே எடுத்து கூறி, அந்நிய தயாரிப்புகளை வாங்குவதை தவிர்த்து, உள்நாட்டு உற்பத்தி பாெருட்களை வாங்குவதில் முன்னுரிமை காெடுக்கச் சாெல்லுங்கள் அதுவே பாேதும்.

11/11/2016

Share Please....

05/11/2016

Education Loan வாங்கியவர்கள் அவரவர் வங்கிக்கு சென்று தற்போது குடுக்கும் Form ஐ Fill செய்து With தாசில்தார் Sign
15ம் தேதிக்குள் கொடுக்கனும்
அப்படி செய்தால்
மட்டுமே 2009 -2014 வரை வட்டி தள்ளுபடி.
முடிந்த வரை நண்பர்களுக்கு தெரிய படுத்துங்கள்...

Address

G M
Vellore
635751

Website

Alerts

Be the first to know and let us send you an email when நாட்டு கோழி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share