Ragul IAS Academy

Ragul IAS Academy The Right Programmes for you UPSC Admission 2021course details Personality Assessment Test 2020 (Int ALL IS WELL

Exam Updates உடனுக்குடன் பெற நமது டெலிகிராம் பக்கத்தில் இணையவும்👇https://bit.ly/Tnpsc_Pre_Coaching
04/08/2023

Exam Updates உடனுக்குடன் பெற நமது டெலிகிராம் பக்கத்தில் இணையவும்👇
https://bit.ly/Tnpsc_Pre_Coaching

தினத்தந்தி பேப்பரை வரிக்கு வரி படிக்கணும் போல.ஆழமான ( குத்திய ஆழம் அல்ல ) மனித உரிமைகள் நடப்பு நிகழ்வு கேள்வி அதுவும் ஜூ...
12/07/2023

தினத்தந்தி பேப்பரை வரிக்கு வரி படிக்கணும் போல.
ஆழமான ( குத்திய ஆழம் அல்ல ) மனித உரிமைகள் நடப்பு நிகழ்வு கேள்வி அதுவும் ஜூன். 2019 இல் நடந்த சம்பவம்.

MOTIVATIONAL LIFE HISTORY ...சென்னையில் வருடம் 2009 என்று நினைக்கிறேன். எனது மாணவர் திரு. ராஜேந்திர சோழன் IAS ( Now Addi...
07/07/2023

MOTIVATIONAL LIFE HISTORY ...

சென்னையில் வருடம் 2009 என்று நினைக்கிறேன். எனது மாணவர் திரு. ராஜேந்திர சோழன் IAS ( Now Additional Chief Electoral officer, Karnataka )அவர்களுடன் திரு.விஜயகுமார் IPS அவர்களை சந்தித்தேன். மூவரும் உரையாடிய தருணம் இன்னும் ஞாபகத்தில் உள்ளது. அவர்கள் இருவரும் அப்போது தான் SERVICE வாங்கி இருந்தார்கள். AC ஆக அப்போது ஆவடியில் பணி புரிந்த சமயம். மிகவும் ஃபிட் ஆக, கம்பீரமாக இருந்தார். தேர்வர்களின் ரோல் மாடலாக திகழ்ந்தவர்.
வறுமையான நிலையில் இருந்து படிப்படியாக படித்து முன்னேறியவர்.
இன்னும் நம்ப முடியவில்லை...

நேர்மையான விசாரணை வேண்டும், தற்கொலை செய்து கொள்ள வாய்ப்பு மிகவும் குறைவு. இல்லையென்றே சொல்லலாம்.
( Rajaboopathy Radian )

திரு. விஜயகுமார் IPS அவர்களின் பழைய பதிவு ...

''தேனி மாவட்டம் அணைக்கரைப்பட்டி தான் என் சொந்த ஊர். அப்பா செல்லையா வி.ஏ.ஓ. என் அம்மா ராஜாத்தி, பள்ளி ஆசிரியை. ப்ளஸ் டூ வரை தமிழ் வழிக் கல்வியில்தான் படித்தேன். ஒரே மகனான என்னை டாக்டர் இல்லேன்னா, இன்ஜினீயர் ஆக்கிப் பார்க்க அவங்களுக்கு ஆசை. மெக்கானிக்கல் இன்ஜினீயர் ஆயிட்டேன். சாதாரண கடைநிலை ஊழியரான அப்பாவைப் பார்த்துப் பார்த்தே வளர்ந்ததால், மாவட்ட அளவு அதிகாரம் படைத்த ஓர் அரசு அதிகாரி ஆகணும்னு அடிக்கடி மனசுல தோணிட்டே இருக்கும். அது போக, போடி கலவரம், தேவாரம் கலவரம், கஞ்சா விவசாயம்னு எங்க பகுதியில் எல்லாப் பக்கமும் க்ரைம்தான். போலீஸ் அதிகாரியானால் நம்மால் முடிஞ்ச உதவியை மக்களுக்குச் செய்யலாம்னு தோணும். 'மாவட்ட அளவிலான போலீஸ் அதிகாரி’ என்ற என் இரண்டு ஆசைகளையும் பூர்த்திசெய்வது ஐ.பி.எஸ்., பதவி மட்டும்தான்னு தெரிஞ்சுக் கிட்டேன். அந்தத் திசையில் பயணிக்கத் தொடங்கினேன்.
கல்லூரிப் படிப்பு முடிஞ்சதும் சரியான வேலை எதுவும் அமையலை. சென்னையில் தங்கி சிவில் சர்வீஸ் பரீட்சைகளுக்குப் படிக்கிற அளவுக்கு வசதியும் இல்லை. ஏதாவது வேலையில் சேர்ந்து சின்னதா சம்பாதிச்சுட்டே படிக்கலாம்னு முடிவு பண்ணி, ஆயிரம் ரூபா சம்பளத்துக்கு ஜெராக்ஸ் எடுக்கிற வேலையில் சேர்ந்தேன். 12 மணி நேர வேலைப் பளுவுக்குப் பிறகு படிக்க முடியலை. நாலு மாசத்திலேயே வேலையை விட்டுட்டேன். ஏதாவது
ஓர் அரசு வேலையில் சேர்ந்துட்டு, படிக்கலாம்னு முடிவு பண்ணேன். 1999-ல் குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிச்சேன். ஏனோதானோன்னுதான் படிச்சேன். தேர்வில் தோல்வி. அதே சமயத்தில் குரூப்-2 தேர்வுக்கும் விண்ணப்பித்து இருந் தேன். அந்தத் தேர்வுக்கு ஆறு மாசம் தீவிரமாப் படிச்சேன். 2000-ல் இந்து சமய அறநிலைய ஆட்சித் துறையில் ஆடிட் இன்ஸ்பெக்டர் பணியில் சேர்ந்தேன். அதே வருஷம், குரூப்-1 தேர்வும் எழுதினேன். முதற்கட்டம், மெயின், நேர்முகத் தேர்வுன்னு இரண்டு வருட நடை முறை முடிந்து 2002-ல் ரிசல்ட் வந்தது. தேர்ச்சி பெற்று டி.எஸ்.பி., ஆனேன்.
தொடர்ந்து சிவில் சர்வீசஸ் தேர்வுக்கான முயற்சிகள். அடுத்தடுத்து ஆறு தடவை முயற்சிகள். நான்கு முறை மெயின் தேர்வு வரையிலும், மூன்று முறை நேர்முகத் தேர்வு வரையும் சென்றேன். பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் ஏழு முறை தேர்வு எழுத முடியும். அது எனது கடைசி ஏழாவது முயற்சி. வெற்றி!
ஆனால், தேர்வுக்கான ஆயத்தங்களைக் காட்டிலும் அந்த காலகட்டங்களில் நான் கடந்து வந்த மன உளைச்சலின் வீரியம் வார்த்தையில் அடங்காது. டி.எஸ்.பி-யாக நான் பணிபுரிந்த ஆறு ஆண்டுகளில் ஈரோடு, திருவள்ளூர், சி.பி.சி.ஐ.டி., சென்னை கமிஷனர் அலுவலகம், ஆவடி உட்பட ஆறு இடங்களுக்கு என்னை டிரான்ஸ்ஃபர் செய்தார்கள். காரணம், சிவில் சர்வீசஸ் தேர்வு.
'இன்டர்வியூ போகணும்... மெயின் எக்ஸாமுக்குப் படிக்கணும்... ஒரு மாசம் லீவு வேணும்’னு கேட்டால், உடனே ஒரு டிரான்ஸ்ஃபர் பரிசாகக் கிடைக்கும். வேறு எந்த வேலைக்கும் செல்லாமல் முழு நேரமும் சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கு மட்டுமே படித்துக்கொண்டு இருந்தால், நிச்சயம் முதல் இரண்டு முயற்சிகளிலேயே யாருக்கும் வெற்றி நிச்சயம்!
சிவில் சர்வீசஸ் விண்ணப்பத்தில் விருப்பப் பணியில் 'ஐ.பி.எஸ்’ என்று மட்டுமே எழுதினேன். ஐ.ஏ.எஸ், ஐ.எஃப்.எஸ். பிரிவின் கீழ் 0 என்றே குறிப்பிட்டு இருந்தேன். நேர்முகத் தேர்விலும் காவல் துறை பற்றிய கேள்விகள் தான் சுற்றிச் சுழன்றன. 'எப்படிங்க உங்க ளுக்கு நேரம் கிடைச்சது? எப்படிப் படிச் சீங்க’ன்னு நட்பாகத்தான் என்னை எதிர் கொண்டார்கள். சிவில் சர்வீஸில் தேறி ஐ.பி.எஸ்., பணி உறுதியானாலும் டி.எஸ்.பி., பணியில் இருந்து நான் உடனடியாக விலகவில்லை. தமிழக முதல்வரிடம் சிறப்பு அனுமதி பெற்று, ஓர் ஆண்டு விடுமுறையில்தான் பயிற்சிக்குச் சென்றேன். ஒரு வேளை பயிற்சி முடிந்த பிறகு, வேறு மாநிலத்தில் பணி அமர்த்தப்பட்டால், 'ஐ.பி.எஸ். வேண்டாம்’னு சொல்லிட்டு, தொடர்ந்து தமிழகத்திலேயே டி.எஸ்.பி. ஆகப் பணிபுரியத்தான் ஆசை.
நீங்கள் சிவில் சர்வீசஸ் தேர்வுக்குத் தயாராகும்போது தங்குவதற்குச் சிரமமாக இருக்கலாம். புத்தகங்களைப் பெறுவதில் சிரமம் இருக்கலாம். வீட்டிலும், 'என்னப்பா படிச்சுட்டே இருக்கேன்னு சொல்ற. எப்பதான் பாஸ் பண்ணப்போற?’னு கேட்பார்கள். சில உறவினர்கள் கிண்டல் அடிக்கக்கூடச் செய்வார்கள். எந்தச் சூழலிலும் சோர்ந்து போகவே கூடாது. நேர்மறை எண்ணம்கொண்டவர்களை மட்டுமே பக்கத்தில் சேருங்கள். வீட்டில் எவ்வளவு சிரமம் இருந்தாலும், அதைத் தாங்கிக்கொண்டு வேறு வேலைக்குச் செல்லாமல் ஒரே லட்சியத்தோடு படித்தால் நலம். குரூப்-2, குரூப்-1 என கொஞ்சம் தடம் மாறியதால் தான் என் வெற்றி தள்ளிப்போனது. 'இதுவே போதும்’ என்று எங்கேயும் தேங்கிவிடாதீர்கள். ஓடிக்கொண்டே இருங்கள். வெற்றி உங்களைப் பின் தொடரும்!''

08/06/2023
21/05/2022

குரூப்-2-2A தேர்வு எப்படி இருந்தது?

தேர்வர்களிடம் இருந்து பெறப்பட்ட முதற்கட்ட தகவல்.

(1)GENERAL ENGLISH & பொதுத்தமிழ் எளிது.

(2)கணிதம் எளிது.

(3)பொது அறிவு எளிது கிடையாது.

Nanbargale...கூச்சபடாமல் உங்கள் சந்தேகங்களை ExamHall'ku Varum Staff'kita கேட்டு Clear Panikoga❤🏆TNPSC Govt Study Materia...
20/05/2022

Nanbargale...கூச்சபடாமல் உங்கள் சந்தேகங்களை ExamHall'ku Varum Staff'kita கேட்டு Clear Panikoga❤🏆

TNPSC Govt Study Materials பெற கீழே உள்ள Telegram பக்கத்தை பின்தொடரவும்👇
https://bit.ly/Tnpsc_Pre_Coaching

Maria Gomes dos Reis, a 121-year-old woman from Bom Jesus da Lapa, Brazil, may be the world's oldest person. City offici...
08/05/2022

Maria Gomes dos Reis, a 121-year-old woman from Bom Jesus da Lapa, Brazil, may be the world's oldest person. City officials discovered her age after dispatching a medical mobile unit to her home.

Gomes dos Reis lives with her granddaughter Célia Gomes, and she has 13 great grandchildren and six great great grandchildren who help out as well.

Lucile Randon, a 118-year-old French nun, has been named the world's oldest living person by Guinness World Records.
Kane Tanaka of Japan, who died on April 19th at the age of 118, was her replacement.

மூன்றாம் பாலினமாக “திருநங்கைகளை“ அங்கீகாித்த “இரண்டாவது உலக“ நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றது.(முதல் உலக நாடு-ஆஸ்திரேல...
15/04/2022

மூன்றாம் பாலினமாக “திருநங்கைகளை“ அங்கீகாித்த “இரண்டாவது உலக“ நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றது.
(முதல் உலக நாடு-ஆஸ்திரேலியா)

வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தத் தீா்ப்பை 15-04-2014 அன்று உச்ச நீதிமன்றம் அறிவித்தது

திருநங்கைகளுக்கு மூன்றாம் பாலின சட்ட அங்கீகாரம் அளித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதுதொடர்பாக, ஆறு மாதத்திற்குள் உரிய சட்டத் திருத்தம் கொண்டு வரவும் மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கல்வி மருத்துவம் போன்றவற்றில் உரிய வசதிகளை அவர்களுக்கு செய்து தர வேண்டும் என்று தமது உத்தரவில் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. சமூகம் மற்றும் பொருளாதார ரீதியில் திருநங்கைகள் பிற்படுத்தப்பட்டவர்களாகக் கருத வேண்டும் என்றும் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

TNPSC அறிவிப்புகுரூப்2 -5831 பணியிடங்கள்குரூப் 4-5255 பணியிடங்கள்
07/12/2021

TNPSC அறிவிப்பு

குரூப்2 -5831 பணியிடங்கள்
குரூப் 4-5255 பணியிடங்கள்

Address

Tittagudi
Tittagudi
606106

Telephone

+919994252778

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ragul IAS Academy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Ragul IAS Academy:

Shortcuts

Share

Category