21/08/2026
அமைச்சர் CTR நிர்மல்குமார்
முந்தைய கட்சிகள்
2019 - 2023 பாஜக
2023 - 2025 அதிமுக
2025….. தவெக,
ஆக, மூன்று ஆண்டுகளில் இவருக்கு தவெக மூன்றாவது கட்சி.
அடிப்படை சங்கியான இவர் பாஜகவில் இருக்கும்போது fake news பரப்பியதற்காக நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டவர்.
ராகுல் காந்தியுடன் பிரியங்கா காந்தியின் மகள் இருக்கும் படத்திற்கு கொச்சையாக டிவீட் செய்து கண்டனத்திற்கு ஆளானார்.
திசை திருப்புவது, கவனத்தை ஈர்ப்பது, பம்முவது எனப் பல கைங்கரியத்தில் கில்லாடி. அதாவது வாயால் வடை சுடுவதில் வல்லவர்.
இன்று மின்சாரம் மற்றும் சிறைத்துறை அமைச்சர். தொடர் மின்வெட்டு, 200 யூனிட் இலவச மின்சாரம், மின்கட்டண உயர்வு போன்றவற்றிக்கு மழுப்பல் பதில் அளிப்பதில் வல்லவர்.
தவெக ஆட்சியில் இதுவரை ஆறு காவல்துறை கொலைகள் நடந்துள்ளன. அதில் இரண்டு மரணம் சிறைச்சாலையில் நடந்தது. இதற்கு பதில் அளிக்காமல் பம்மினார். தவெக பெண் வழக்கறிஞர் ஒருவரின், “அரசு வழக்கறிஞர் பதவிக்கு பல லட்சம் லஞ்சம் கேட்கிறார்கள்” என்ற குற்றச்சாட்டிற்கு, அந்தப் பெண் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
சமீபத்தில் பள்ளி ஆசிரியர் இடமாற்றம் நிறுத்தி வைக்கப்பட்டது. சென்னையில் பணியாற்றும் இவர் மனைவிக்கு மட்டும் அமைச்சர் இருக்கும் பசுமை வழி சாலை பகுதியில் இருக்கும் பள்ளிக்கு பணியிடமாற்றம் (transfer) பெற்றார்.
இப்படிப்பட்ட பின்புலம் உடையவர் இன்று திமுக, அதிமுக, இவர் தாய் கழகமான பாஜகவிற்கு அரசியல் அறிவுரை சொல்வது காலக்கேடு. சட்டமன்றத்தில் பிறர் துறைக்குப் பாய்ந்து பதில் அளித்து, சபாநாயகரால் இவரது பேச்சு அவைக் குறிப்பில் இருந்து தொடர்ந்து நீக்கப்படுவதைப் பார்க்கிறோம். இப்ப ஆணவத்தோடு சட்டமன்றத்தில் திமுக மூத்த நிர்வாகியான திரு.KN நேரு, எதிர்க்கட்சி தலைவர் மாண்புமிகு திரு.உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் மீது அவதூறாகப் பேசுகிறார்.
மிக முக்கியமாக, கரூரில் நடந்த கூட்டத்தில் 41 நபர்கள் உயிர் இழந்தபோது இரண்டு மாதம் ஓடி ஒளிந்தவர் இவர். தூய சக்தி எனத் தம்பட்டம் அடிக்கும் தவெக அரசின் முக்கிய அழுக்கு ‘பலப்பட்டரை’ நிர்மல் குமார்.
ஆலடி எழில்வாணன்
இணைச் செயலாளர்
திமுக கல்வியாளர் அணி