St.Xavier's College Visual Communication

St.Xavier's College Visual Communication B.Sc Visual Communication degree is the bachelor science course with half of total papers is practical.

In St.Xavier’s college the visual communication students had State level workshop on screen play for two days from 23.02...
26/02/2016

In St.Xavier’s college the visual communication students had State level workshop on screen play for two days from 23.02.2016 to 24.02.2016. On 23rd morning The Inauguration function of the workshop was held in the Department of Visual communication at St.Xavier’s college. Mr.Anto Kingsly the coordinator of the department of visual communication, Professors Mr.Vijay Rathina Kumar, Mr.Santhosh Kumar and Mr.doulous newbegin were presented in the Function. [ 233 more words. ]

http://inboxepaper.com/blog/2016/02/26/state-level-workshop-on-screen-play/

In St.Xavier’s college the visual communication students had State level workshop on screen play for two days from 23.02.2016 to 24.02.2016. On 23rd morning The Inauguration function of the worksho…

சுப்பிரமணிய பாரதியாரின் கவிதைகளை தொடர்ந்து...                        நெஞ்சம் பொறுப்பதில்லை            இந்த நிலை கெட்ட மா...
17/02/2016

சுப்பிரமணிய பாரதியாரின் கவிதைகளை தொடர்ந்து... நெஞ்சம் பொறுப்பதில்லை இந்த நிலை கெட்ட மானிடர்களை நினைக்கும் போது... காதலை மட்டும் மையப்படுத்தும் இயக்குனர்களை நினைக்கும் போது... கவர்ச்சியை மட்டும் மையப்படுத்தும் ஒளிர்பதிவாளர்களை நினைக்கும் போது... பணத்தை மட்டும் மையப்படுத்தும் தயாரிப்பாளர்களை நினைக்கும் போது... புலன் உணர்வுகளை மட்டும் மையப்படுத்தும் கதை ஆசிரியர்களை நினைக்கும் போது... உடலை திரையிட்டு காட்டும் கதாநாயகிகளை நினைக்கும் போது... பிஸ்தாவாக தன்னை காட்டும் கதாநாயர்களை நினைக்கும் போது...

http://inboxepaper.com/blog/2016/02/17/%e0%ae%a8%e0%af%86%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b1%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%af%87/

சுப்பிரமணிய பாரதியாரின் கவிதைகளை தொடர்ந்து…                        நெஞ்சம் பொறுப்பதில்லை            இந்த நிலை கெட்ட மானிடர்களை                               நினைக்கும் போது… காதலை மட்டு…

தூய சவேரியார் கல்லூரியில் காட்சி தொடர்பியல் துறையில் MASS COMMUNICATION THEORIES எனும் தலைப்பில் கருத்தரங்கு நேற்று ( 15...
17/02/2016

தூய சவேரியார் கல்லூரியில் காட்சி தொடர்பியல் துறையில் MASS COMMUNICATION THEORIES எனும் தலைப்பில் கருத்தரங்கு நேற்று ( 15.02.2016 ) மதியம் நடைபெற்றது. காட்சிதொடர்பியல் துறையின் ஒருங்கினைப்பாளர் பேரா.ஆன்டோ கிங்ஸ்லி அவர்களும் துணை பேரா.சந்தோஷ் அவர்களும் தலைமைவகித்தனர். கருத்தரங்கினை துணை பேரா.சதிஷ் அவர்கள் வழங்கினார். இவர் ஈரோடு மாவட்டம், பெருந்துரையிலுள்ள மஹாராஜ கலை கல்லூரியில் காட்சி தொடர்பியல் துறையில் துணை பேராசிரியராக பணியாற்றி வருகிறார். மாணவி கெரன் சொருபா வரவேற்புரை ஆற்றினார். MASS COMMUNICATION THEORIES-ன் பல்வேறு வகைகள் மற்றும் வேறுபாடுகள் எடுத்துக்காட்டுடன் வழங்கப்பட்டது மேலும் தற்போதைய ஊடகம் பற்றிய விளக்கவுரையும் ஊடக நெறிமுறைகளுக்கும் விளக்கம் அளிக்கப்பட்டது. சுமார் 3 மணி நேரத்திற்கும் கூடுதலாக நடைபெற்ற இந்த கருத்தரங்கினை துணை பேரா.சந்தோஷ் அவர்கள் கல்லூரியின் சார்பாகவும் காட்சிதொடர்பியல் துறையின் சார்பாகவும் நன்றியுரை ஆற்றி இனிதே நிறைவேற்றினார்.

http://inboxepaper.com/blog/2016/02/17/%e0%ae%8e%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%af%81%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-mass-communication-therioes-%e0%ae%95%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0/

தூய சவேரியார் கல்லூரியில் காட்சி தொடர்பியல் துறையில் MASS COMMUNICATION THEORIES எனும் தலைப்பில் கருத்தரங்கு நேற்று ( 15.02.2016 ) மதியம் நடைபெற்றது. காட்சிதொடர்பியல்  துறையின் ஒருங்கினைப்பாளர் பேர…

எந்த நாடு ஆசிரியர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லையோ அந்த நாடு வளராது... செய்திதாளில் ஆசிரியர்களை அடுத்து இழுத்து செ...
11/02/2016

எந்த நாடு ஆசிரியர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லையோ அந்த நாடு வளராது... செய்திதாளில் ஆசிரியர்களை அடுத்து இழுத்து செல்லுவது போலவும், கையையும் காலையும் பிடித்து தூக்குவது போலவும் இருந்தது. மேலைநாடு மேலைநாடு என்கிறீர்களே உங்கள் மேலைநாடுகளில் ஆசிரியர்களை இப்படியா நடத்துகிறார்கள்? நம்ம ஆட்சியாளர்களை யாரோடு ஒப்பிடன்னு தெரியல.வாச்சதும் அப்படித்தான் இருக்கு, வந்ததும் அப்படித்தான் இருக்கு... தேர்தல் வேற வரப்போகுது.யாருக்கு ஓட்டுபோடன்னு தெரியல... 49ஒ தானா!!!

http://inboxepaper.com/blog/2016/02/11/%e0%ae%86%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%87/

                             எந்த நாடு ஆசிரியர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லையோ அந்த நாடு வளராது… செய்திதாளில் ஆசிரியர்களை அடுத்து இழுத்து செல்லுவது போலவும், கையையும் காலையும் பிடித்து …

ஸ்மாட் சிட்டி திட்டத்துக்காக 98நகரங்கள் தேர்வாகியுள்ளன. இவற்றில் 20 நகரங்கள் அடங்கிய முதல்கட்ட பட்டியல் வெளியிடப்பட்டது....
11/02/2016

ஸ்மாட் சிட்டி திட்டத்துக்காக 98நகரங்கள் தேர்வாகியுள்ளன. இவற்றில் 20 நகரங்கள் அடங்கிய முதல்கட்ட பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த 98 நகரங்களும் 5ஆண்டு காலத்தில் திறன்மிகு நகரங்களாக உருவாக்கப்படும். இவற்றில் 24 நகரங்கள் மாநில தலைநகரங்கள் , 24 தொழில் வர்த்தக நகரங்கள்,18 கலாச்சாரம் மற்றும் சுற்றுலா சார்ந்த நகரங்கள்,5 துறைமுக நகரங்கள், 3 கல்வி மற்றும் மருத்துவம் சார் நகரங்கள் அடங்கும். இளம் இந்தியாவின் பேராவலை பூர்த்தி செய்யும் விதத்தில் ஒருங்கிணைந்த நீடித்த வளர்ச்சிக்கான கருவிகளாக ஸ்மார்ட் நகரங்கள் உருவாக்கபபடும். இந்திய மக்களின் பொருளாதாரம், உழைப்பு, மதிப்பு போன்றவற்றை உயர்த்தும் அருமையான திட்டங்கள். கேட்க நல்லா இருக்கு ஆனா கொஞ்சம் பயமா இருக்கு. இந்த ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் எத்ததை பேர் தங்கள் கைவரிசையை காட்டப்போகிறார்கள் என்று... " தனி ஒருவன் " படத்தில் வரும் வசனம் என் நினைவுக்கு வருகிறது. எந்த ஒரு பெரிய விசயத்துக்கு முன்னாலையும் ஒரு சின்ன விசயம் இருக்கு. ஆக ஸ்மார்ட் சிட்டி திட்டத்த செயல்படுத்துறதால இந்ததிட்டத்தின் அதிகாரகளுக்கு நிச்சயம் லாபம் வரப்போகிறது. இல்லைன்னா "MAKE IN INDIA " வுக்காக வெளிநாட்டு நிறுவனங்களுக்கு பாதை அமைப்பதாக கூட இருக்கலாம். ஸ்மாட் சிட்டின்னு தடையில்லாமல் மின்சாரம், போக்குவரத்து, நெடுஞ்சாலை, குழாய் குடிநீர், தரமான தொலைதொடர்பு , நிலம்ன்னு எல்லாவற்றையும் நம் கண்முன்னே செயல்படுத்துவார்கள். அதேப்போல நம் கண்முன்னே வெளிநாட்டு நிறுவனங்களுக்கு தாரைவார்த்து கொடுப்பார்கள். ஏற்கனவே நம் ஊரில் இருக்கிற வெளிநாட்டு நிறுவனஙாகளால் நம் நீர் வளம் (தாமிரபரணி), நில வளம் (கனிமங்கள்), மின்சாரங்கள் , காற்று மாசுபாடு , பொருளாதாரம் , குடிசை தொழில் பாதிப்பு, சுரண்டல்னு பல சீர்கேடுகள் நடக்கிறது. இதுல இப்புடி புதுசா செய்தால் நாம் என்ன செய்வது? வழக்கமா அமைதியா இருக்கிறமாதிரி நாம் இப்போது இருக்க கூடாது. ஒரு உண்மை என்னவெனில் "MAKE IN INDIA" , "SMART CITY" போன்ற திட்டங்களை ஆதிக்கும் அதிகாரிகளுக்கு பன்னாட்டு நிறுவனங்களுடன் தொடர்பு இருக்க வாய்ப்பு உள்ளது எனபதே. சும்மாவே ஆடு புலி ஆட்டம் ஆடுவாங்க , இப்ப சொல்லவா வேண்டும்??? ஆக ஸ்மார்ட் சிட்டி நகரத்திற்கு ஏதோ வழியில் , ஏதோ ஒரு முறையில் உள் நோக்கங்கள், உள் திட்டங்ள் இருப்பது நிச்சயம்... நகர்புற மக்கள் தொகை 40 கோடியிலிருந்து, 2050-ல் 81.4 கோடியாக உயரும். தீவிர நகர்மயமாதலை சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா எதிர்நோக்கியுள்ளது. சீன மக்களுக்கு வேலையே நகர்புறங்களில்தான் ஆனால் இந்தியாவுக்குஅப்படியில்லை. இந்தியா என்றாலே விவசாயம். "இந்தியாவின் முதுகெலும்பு விவசாயம் ". இந்த இரு நாடுகளையும் ஒப்பிடுவது சரியல்ல . விவசாயத்தை அழிக்க நினைக்கும் புதிய முயற்சி இது. விவசாயத்துக்கு எதிரா இருக்கிற பன்னாட்டு நிறுவனங்கள் அதிக ஈடுபாடு காட்டுவார்கள். அவர்களுக்கு இந்த திட்டத்தின் உள்நோக்கம் பற்றி தெரியவாய்ப்புள்ளது. நகர்புற மேம்பாட்டு துறையின் கீழ் வேளாண்மை மேம்பாட்டு துறை தூங்குகிறதா? அல்லது தூங்க வைக்கப்பட்டதா??? யாருக்கு தெரியும். நமக்கு மகிழ்சியான வாழ்வுக்கு நகரமா ? கிராமமா?ன்னு பட்டிமன்றங்கள்தான் வைக்கதெரியும்!!! கேபப்படாதீர்கள் ஆனால் உண்மை அதுதான். முதல்ல மற்ற நாடுகளுடன் நம்ம நாட்டை ஒப்பிடுவதை நிறுத்துவோம். நம்ம நாட்டு வளங்களை நாம் பயன்படுத்தி நம்ம நாட்டு பொருளாதாரத்தை உயர்த்துவோம். விவசாயத்துக்கு தடையாக நிற்கும் திட்டங்களை எதிப்போம்.

http://inboxepaper.com/blog/2016/02/11/%e0%ae%95%e0%af%8a%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b8%e0%af%8d%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%9f/

                   ஸ்மாட் சிட்டி திட்டத்துக்காக 98நகரங்கள் தேர்வாகியுள்ளன. இவற்றில் 20 நகரங்கள் அடங்கிய முதல்கட்ட பட்டியல் வெளியிடப்பட்டது.                     இந்த 98 நகரங்களும் 5ஆண்டு காலத்தில் த…

How to organize a shoot
02/02/2016

How to organize a shoot

In this how-to training video we show you how and why to assemble a storyboard, organize your resources, and manage a production schedule. When film-making, time is money, and being well organized will...

நேற்று கல்லூரியிலே ஒரு பெண் உடுத்தியிருந்த உடையின் மாதிரி தான் இது.இந்த உடையை பார்த்தவுடன் என் மனதிற்குள் பல கேள்விகள் எ...
27/01/2016

நேற்று கல்லூரியிலே ஒரு பெண் உடுத்தியிருந்த உடையின் மாதிரி தான் இது.இந்த உடையை பார்த்தவுடன் என் மனதிற்குள் பல கேள்விகள் எழும்பியது. அந்த உடை மாதிரியை இந்த குறுஞ்செய்தியினுடன் சேர்ப்பதர்க்காக Google imageல் தேடினேன். அங்கே நான் கண்ட ஆடைகள் மன அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பலர் ஆடைக்கலாச்சாரம் பற்றி பேசும் போது எனக்கு மனது உருத்தவில்லை. ஆனால் கண்முன்னே காணும் போது மிகவும் கொடுமையாக இருந்தது. அந்த ஆடையை மட்டும்தான் என்னால் வரைய முடிந்தது.அதனுள் இருந்த வடிவமைப்புக்கள் மிகவும் கொடுமை. எப்படி இத்தகைய ஆடைகளை வாங்குகிறார்கள்? துணிக்கடைக்கு செல்லும் போது பெற்றோர்களும் கூடவே இருப்பார்கள்தானே? ஒரு வேளை அந்த பெண்னுக்கு அம்மா தவறியிருப்பார்களோ? அப்பா அதிக செல்லம் கொடுத்து வளர்த்திருப்பார்களோ? அந்த பெண்ணுக்கு அண்ணன்,தம்பி இருக்கமாட்டார்களோ? இன்னும் பெரியவர்கள் ,தோழிகள் ,உறவினர்கள் என்று அதிக கேள்விகள் எழுந்துகொண்டே இருந்தது. பல துறைகளில் பெண்கள் சாதனைப்படைத்து சமநிலையடைந்து வருகிறார்கள்.ஆனால் பெண்களுக்கான தற்போதைய ஆடைக்கலாச்சாரம் என்பது சமநிலையல்ல. பெண்களுக்கான ஆடைக்கலாச்சாரம் என்று பேசும்போது ஆண்களுக்கும் இது பொருந்தும்.ஆனால் சமுதாயத்திலே பெண்களுக்கு வரலாறுதொட்டு பாரம்பரியம் உள்ளது. இந்தியா பன்னாட்டு நிறுவனங்களுக்கு வெறும் வியாபார சந்தை. ஆனால் இந்தியர்கள் ஒவ்வொருவருக்கும் "இந்தியாவே உயிர்". வியாபாரிகள் பலவற்றை நம் மண்ணில் விற்பனை செய்கின்றனர். அவற்றை ஆதரிக்கும்படி செய்தால் நாம்தான் பாதிக்கப்படுவோம்.நம் கலாச்சாரம்தான் பாதிக்கப்படும். ஆடைக்கலாச்சாரம் என்று பேசும் ஒவ்வொருவரும் பன்னாட்டு ஆடைகளை தவிர்த்தால் மட்டுமே நம் கலாச்சாரம் பாதிக்கப்படாது.

http://inboxepaper.com/blog/2016/01/27/%e0%ae%86%e0%ae%9f%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b2%e0%ae%be%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d/

நேற்று கல்லூரியிலே ஒரு பெண் உடுத்தியிருந்த உடையின் மாதிரி தான் இது.இந்த உடையை பார்த்தவுடன் என் மனதிற்குள் பல கேள்விகள் எழும்பியது. அந்த உடை மாதிரியை இந்த குறுஞ்செய்தியினுடன் சேர்ப்பதர்க்காக Google …

Interesting facts
14/01/2016

Interesting facts

நான் ஒரு Engineer, நான் ஒரு teacher , நான் ஒரு doctor, நான் ஒரு college student, நான் ஒரு bank employee எனக்கும் பொங்கலு...
11/01/2016

நான் ஒரு Engineer, நான் ஒரு teacher , நான் ஒரு doctor, நான் ஒரு college student, நான் ஒரு bank employee எனக்கும் பொங்கலுக்கும் என்ன சம்பந்தம். office work-கே எனக்கு அதிகம். நான் கரும்பு சாப்பிடுவேன், வீட்டுல செய்யிற பொங்கல் சாப்பிடுவேன், T.V-ல காட்டுற ஜல்லிக்கட்டு பார்ப்பேன்… அவ்வளவுதான் என்னுடைய பொங்கல் programme. இதுக்கு மேல வேற என்ன செய்ய? அப்புடின்னுதான் உயர்மட்ட, கிடைமட்ட மக்கள் எல்லாரும் நினைக்கிறோம். ஆனால் அப்புடி இல்லைங்க. ஒவ்வொரு நாள் முழுதும் நல்லா சாப்பிடுவதர்க்கு உதவி செய்கிற விவசாய நண்பர்கள், நெற்பயிர், மாடு, உழவு பொருட்கள், நிலம்ன்னு எல்லாவற்றையும் நினைச்சி பார்ப்பதுதான் பொங்கலுடைய சிறப்பு. இவங்க எல்லாத்தையும் ஒவ்வொரு நாளும் நினைச்சி பாக்கலைன்னாலும் வருசத்துல ஒரு நாள் நினைச்சி பார்த்து அவர்களுக்கு நன்றி சொல்லி விழா எடுப்பதுதான் இந்த பொங்கல், மாட்டுப் பொங்கல், உழவர் திருநாள். இது “தமிழர் திருநாள்” என்றும் அடையாளபடுத்துவதற்கும் பல காரணங்கள் உண்டு. அடுத்தவன் வயிற்றில அடிக்கிற கலாச்சாரம் மெல்ல மெல்ல வளர்ந்துக்கிட்டு இருந்தாலும், தமிழன்னா அடுத்தவன் வயிறார சோறு போடுபவன் தான் என்பதை நினைவுபடுத்துகிற பெருவிழா இது. நம்ம மகிழ்ச்சியை நன்றியை நம்ம நண்பர்கள் உறவினர்கள்-ன்னு சுற்றியிருக்கிற எல்லாருடனும் பகிர்ந்து கொள்ளனும். ஒரு குட்டிகதையை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன். கண்களுக்கு குளிரூட்டும் நெற்பயிர்களுக்கு இடையே அழகான பெரிய கூடு கட்டி குடியிருந்தது அந்த வெளிநாட்டு பறவை. ஒரு நாள் அதன் குட்டிப்பறவை வெளியிலே மனிதர்கள் பேசிக்கொண்டிருந்ததை கேட்டது. உடனே, அலரிஅடித்து கொண்டு தன் தாய்பறவையிடம் ஓடிவந்து சொன்னது: “ அம்மா அங்கே விவசாயிகள் இந்த நிலத்துபயிர அறுவடை செய்யபோகிறதா பேசிக்கிட்டு இருக்காங்க ” என்றது. அதிர்சியடைந்த தாய்பறவை, அப்புடியா இது நல்லதுக்கு இல்லையே! இப்படி விடக்கூடாதே!!! என்று ஒரு திட்டம் தீட்டியது. தாய்பறவை தன் தோழியான உள்ளூர்பறவையிடம் இதை எப்படியாவது தடுக்கனுமே எனக்கு உதவி செய். நான் உனக்கு தேவையான உணவு, இருப்பிடம் எல்லாத்தையும் செய்துதருவேன் என்று சொல்லியது. உள்ளூர்பறவை சிறிதும் யோசிக்காமல் வெளியூர் பறவை பேச்சைகேட்டு பேராசை கொண்டு விவாசாயிடம் பேச சென்றது. விவசாய நண்பனே, இந்த நாட்டின் முதுகெலும்பே, உன்னாலே பலர் இன்று வயிறாற உன்னமுடிகிறது என்று விவசாயிக்கு பொறி வைத்தது. மீண்டும் தொடர்ந்தது, உன்னுடைய வயலில் ஒரு வெளிநாட்டு பறவை தஞ்சம் புகுந்துள்ளது. அது உன் நிலத்திலே வாழ்ந்து சுற்றியுள்ள நீர்வளம், மண்வளம், உணவுவளம், இயற்கை இவற்றை அனுபவிக்க வேண்டுமாம். நீதான் அவற்றுக்கு உதவி செய்ய வேண்டும். நான் என்ன செய்ய வேண்டும் என்று நீ நினைக்கிறார் என்றார் விவசாயி. அதற்கு உள்ளூர் பறவை விவசாயிடம் உனக்கு தேவையான உன் பரம்பரைகே தேவையான உணவு, வேலை எல்லாம் கிடைக்கும், நீ….. உன் நிலத்தை அந்த வெளிநாட்டு பறவைக்கே கொடுத்துவிடு என்றது. அதற்கு விவசாயி உள்ளூர் பறவையை பார்த்து “………………………….” என்ன கூறியிருப்பார்.. விவசாயி இடத்தில் நீங்கள் இருந்து இக்கதையில் உண்மைக்கு தகுந்த முடிவெடுங்கள். (ஒரு நாள் முதல்வர்ன்னா சரின்னு சொல்லுவாங்க , ஒரு நாள் விவசாயின்னா சிரிப்பாங்கன்னு நினைக்கிறீங்களா) நமக்கு ஸ்கோர விட , சோறுதான் முக்கியம்-ன்னு வளைதளங்களில் ஒரு குறுஞ்செய்தி அடிக்கடி எட்டிப்பாக்கும். நமக்கு படியளக்குற விவசாயிகளுக்கு விவசாயத்துக்கு ஏற்படுகிற பிரச்சனையதான் ஒரு கதையா பகிர்ந்தேன். எந்த நிலம் எந்த பயிருக்கு, எந்த பயிர் எந்த காலத்துக்கு எந்த காலத்துல என்ன மழைன்னு அறிய கூடிய நம்ம விவசாயிகளுக்கு கூடவேயிருந்து குழிபறிக்கிறவங்கள பற்றி தெரியமாட்டைக்கே!!! நாமாவது அவங்களுக்கு தொல்லை கொடுக்காமயிருப்போம். ஆங்கில புத்தாண்டை வெகுவிமரிசையாக கொண்டாடினோம். அத்தோடு பல தீர்மானங்களையும் எடுத்திருப்போம். இந்த பொங்கல் திருநாள் தமிழ் புத்தாண்டாகவும் கொண்டாடப்படுகிறது. இதனை அவ்வளவு சிறப்பாக கொண்டாடவில்லையென்றாலும் சில தீர்மானங்களை எடுத்துக்கொள்வோம். என் குடும்பத்தாலயோ, என்னாலயோ விவசாயத்துக்கு கெடுதி செய்யமாட்டேன். எனக்கு சோறு போடுகிறவங்களை நான் பாதுகாக்கிறேனோ இல்லையோ அவங்களுக்கு இடையூறு செய்யமாட்டேன். பொதுவாக இயற்கையை பாதுகாப்பேன்னு மேலோட்டமாக சொல்லாமல் உயிரோட்டமாக விவசாயத்துக்கு உதவி செய்வேன்-னு தீர்மானங்கள் எடுப்போம் வெளிநாட்டு மக்கள் நம் ஊர் திருநாளை சிறப்பா கொண்டாடும்போது நாம மட்டும் ஏன் வீட்டுக்குள்ளயே அடைபட்டு இருக்கிறோம். வாங்க இந்த விழாவை அர்த்தமுள்ள வகையில் கொண்டாடுவோம். ஏன்னா? இது நம்ம திருவிழா!!!

http://inboxepaper.com/blog/2016/01/11/%e0%ae%aa%e0%af%8a%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%8d/

                           நான் ஒரு Engineer, நான் ஒரு teacher , நான் ஒரு doctor, நான் ஒரு college student, நான் ஒரு bank employee எனக்கும் பொங்கலுக்கும் என்ன சம்பந்தம். office work-கே எனக்கு அதிகம…

Address

Dept Of Visual Communication, Street Xaviers College
Tirunelveli
627002

Alerts

Be the first to know and let us send you an email when St.Xavier's College Visual Communication posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to St.Xavier's College Visual Communication:

Shortcuts

Share

Category