Sadakathullah Appa College - Autonomous

Sadakathullah Appa College - Autonomous The College is located on a 40-acre sprawling campus. It was first affiliated to the Madurai Kamaraj University for twenty years.

Sadakathullah Appa College, founded by the Muslim minority community, is committed to provide quality higher education to all especially the Muslims, both men and women and other deprived, disadvantaged, underprivileged sections of the society. Due to the dedicated and sincere efforts of the Muslim elite, a College of arts and sciences, named after the noted Arabic scholar Sadakathullah Appa, was

started in 1971. With the birth of the Manonmaniam Sundaranar University in 1990, the College was affiliated to it later. Sadakathullah Appa College is the fifth star to rise in the academic sky of Palayamkottai in 1971. The College is situated on the high-way between Tirunelveli and Thoothukudi near the District Court of Tirunelveli. The College is run by the SADAKATHULLAH APPA EDUCATIONAL SOCIETY. The College celebrated its Silver Jubilee in March 1999. The College has been re-accredited with A Grade by NAAC with CGPA 3.11. It is also an ISO 9001:2000 Certified Institution from the year 2004. The academic year 2007-2008 is a milestone in the history of the College in that the institution has become autonomous. Shift System is followed to offer more job-oriented courses for the benefit of the students. The College had implemented Choice - Based Credit System from 2008-2009.

PG Department of Computer Science Industrial Visit to RORIRI Software SolutionsStudents from II M.Sc. Computer Science p...
01/08/2024

PG Department of Computer Science Industrial Visit to RORIRI Software Solutions
Students from II M.Sc. Computer Science program of Sadakathullah Appa College participated in an industrial visit to RORIRI Software Solutions in Kalakad, Tirunelveli. The visit featured a workshop titled "Emerging Trends in Prompt Engineering," which covered fundamental concepts, advanced techniques, and future trends in the field. The workshop provided hands-on experience and insights into cutting-edge technological advancements, bridging the gap between theoretical knowledge and practical application. This visit underscored the department's commitment to preparing students for dynamic careers in computer science.

பாளை, சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் தரவு அறிவியல்  சொற்பொழிவுபாளை, சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியின் கணினி அறிவியல் ...
01/08/2024

பாளை, சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் தரவு அறிவியல் சொற்பொழிவு

பாளை, சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியின் கணினி அறிவியல் துறை சார்பாக ஜூலை 31,2024 இன்று "தரவு அறிவியலுக்கான பாதை தரவு: ஒரு சாலை வரைபடம்" என்ற தலைப்பில் சொற்பொழிவு நடைபெற்றது.

கணினி அறிவியல்துறை, மூன்றாம் ஆண்டு மாணவர் திரு. கே. அப்துல் மாலிக்கின் கிராத்துடன் நிகழ்வு தொடங்கியது.

இணை பேராசிரியரும் கணினி அறிவியல் துறையின் தலைவருமான திரு எஸ்.எம்.ஏ. கலீலுர் ரஹ்மான் அவர்கள் நிகழ்வின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து வரவேற்பு உரை நிகழ்த்தினார். கல்லூரி முதல்வர் முனைவர் எஸ்.எம். அப்துல் காதர் அவர்கள் ஒருவரின் தொழில் வாய்ப்புகளை மேம்படுத்த தரவு அறிவியலில் முக்கிய கருவிகளில் தேர்ச்சி பெறுவதன் பங்கை வலியுறுத்தி தலைமையுரையாற்றினார்.

கல்லூரியின் துணை முதல்வர் முனைவர். எஸ்.எம்.ஏ. செய்யது முகமது காஜா அவர்கள் மாணவர்களின் வளர்ச்சி மற்றும் தொழில்துறை தயார்நிலைக்கான துறையின் அர்ப்பணிப்பை உறுதிப்படுத்தி வாழ்த்துரை வழங்கினார். கணினி அறிவியல்துறை, மூன்றாம் ஆண்டு மாணவி எஸ். சரண்யா, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் மூத்த ஆலோசகரும், டிஸ்கவர் டேட்டாம் டேட்டா ஆர்வலரின் நிறுவனருமான திரு பஷீர் மொஹிதீன் அவர்களைத் தலைமை விருந்தினராக அறிமுகப்படுத்தினார்.

திரு. பஷீர் மொஹிதீன் தன் சிறப்பு உரையில் தரவு அறிவியல் துறையின் விலைமதிப்பற்ற நுண்ணறிவுகளைப் பகிர்ந்து கொண்டார். ஆர்வமுள்ள தரவு ஆய்வாளர்களுக்கான விரிவான வரைபடத்தை வழங்கினார். " ஒரு கருவியில் தேர்ச்சி, உங்கள் தரவு அறிவியல் பயணத்தை மேம்படுத்தும்" என்ற கருப்பொருளை வலியுறுத்திய திரு மொஹிதீன் அவர்கள் வளர்ந்து வரும் வேலைச் சந்தையில் வழிநடத்துதல் மற்றும் வெற்றி பெறுவது குறித்த நடைமுறை ஆலோசனைகளுடன் பார்வையாளர்களை ஊக்கப்படுத்தினார். அத்தியாவசிய கருவிகள் மற்றும் நுட்பங்களில் தேர்ச்சி பெறுவதில் கவனம் செலுத்தும் வழிமுறைகளை எடுத்துக் கூறி மாணவர்களை ஊக்குவித்தார்.

உதவி பேராசிரியரும் முதுகலை கணினி அறிவியல் துறையின் தலைவருமான முனைவர் வி. ரோஸ்லைன் பங்கேற்பாளர்களுக்கு நன்றி தெரிவித்ததன் மூலம் நிகழ்வு நிறைவடைந்தது. இந்நிகழ்வில், துறைப் பேராசியர்களும் மாணவர்களும் திரளாகக் கலந்து கொண்டு பயன் பெற்றனர். இந்த நடவடிக்கைகளை கணினி அறிவியல்துறை, மூன்றாம் ஆண்டு மாணவர் திரு. ஜே. முகமது பாசித், திறம்பட தொகுத்து வழங்கினார்

பொருளியல் துறை தொடக்க விழாபாளை. சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி பொருளியல் துறையில் 31.07.2024 புதன் கிழமை பொருளியல் துறை த...
01/08/2024

பொருளியல் துறை தொடக்க விழா

பாளை. சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி பொருளியல் துறையில் 31.07.2024 புதன் கிழமை பொருளியல் துறை தொடக்க விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் காமராஜ் கலைக் கல்லூரியின் துணை முதல்வர் Dr.அசோக் அவர்கள் கலந்து கொண்டு யூனியன் பட்ஜெட் 2024-2025 என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். மேலும் பேசுகையில் பொருளாதாரத்தின் முக்கியத்துவத்தை பற்றியும் அதன் வகைபாடுகள் பற்றியும் சிறப்பாக பேசினார் . குறிப்பாக இந்த ஆண்டு பட்ஜெட்டில் எந்தெந்த துறைக்கு எந்த அளவு நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது, ஏன் பட்ஜெட்டை ஒரு நாடு பின்பற்ற வேண்டும் முதலானவற்றை மிகவும் தெளிவாக கூறினார். முன்னதாக துறை தலைவர் சுல்தானா பர்வின் வரவேற்புரை ஆற்றினார். துணை முதல்வர் செய்யது முகம்மது காஜா
வாழ்த்துரை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் இளங்கலை பயிலும் பொருளாதார துறை மாணவர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். சுயநிதி பிரிவு துறை தலைவர் இசக்கியம்மாள் நன்றி உரையாற்றினார்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உதவிபேராசிரியர்கள்
முஹம்மது அலி முகைதீன், சகர் பான், பேச்சியம்மாள், சல்மா செரிப் மற்றும் துறை மாணவர்கள் சிறப்பாக செய்து இருந்தனர்.

பாளை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில்“இதழ்களில் கட்டுரைகள் மற்றும் சிறுகதைகள் எழுதுதல்” பற்றிய நிகழ்ச்சிநெல்லை,   எழுத்...
01/08/2024

பாளை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில்
“இதழ்களில் கட்டுரைகள் மற்றும் சிறுகதைகள் எழுதுதல்” பற்றிய நிகழ்ச்சி
நெல்லை, எழுத்தாளர்களின் சொர்க்க பூமி – பேரா.சௌந்தர மகாதேவன் பேச்சு

பாளையங்கோட்டை, ஆக.01: பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியின் ஹாஜி.மு.ந.முகம்மது சாகிப் நூலகம் மற்றும் தமிழ்த் துறை சார்பாக “இதழ்களில் கட்டுரைகள் மற்றும் சிறுகதைகள் எழுதுதல்” பற்றிய கருத்தரங்கம் நிகழ்ச்சி இன்று நூலகத்தில் நடைபெற்றது.
இவ்விழாவிற்கு கல்லூரி முதல்வர் பேராசிரியர்.எஸ்.எம்.அப்துல் காதர் தலைமை வகித்தார். துணை முதல்வர் முனைவர்.திரு. எஸ்.எம்.ஏ.செய்யது முகம்மது காஜா முன்னிலை வகித்தார்.
கல்லூரியின் நூலகர் முனைவர்.திரு.ஆர்.ஆர்.சரவணக்குமார் அவர்கள் பேசும் போது “கவிதைகள் எவ்வாறு மரபுக் கவிதைகள், புதுக் கவிதைகள், ஹைக்கூ கவிதைகள் என்று உருமாற்றம் பெற்றதோ அதே போல கதைகள் தொடர் கதை, சிறு கதை, ஒரு பக்கக் கதை, மைக்ரோ கதை என மாற்றம் பெற்று வந்துள்ளது” என்றும், “பத்திரிகைகள் மற்றும் இதழ்களுக்கு மாணவ மாணவிகள் கட்டுரைகள் எழுதும் போது நூலகத்தில் உள்ள புத்தகங்களைப் படித்து ஆய்வு செய்து உரிய ஆதாரத்துடன் எழுத வேண்டும” என கூறினார்.
கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் திரு.சௌந்தர மகாதேவன் அவர்கள் பத்திரிகைகள் மற்றும் இதழ்களுக்கு கட்டுரைகள் மற்றும் சிறுகதைகள் எழுதுவது எவ்வாறு என்பது பற்றியும், அதன் வடிவம் பற்றியும், வாசிப்பவர் மனதில் எளிதாகப் போய்ச் சேரும் வண்ணம் இருக்க வேண்டும் என்பது பற்றியும் விளக்கினார். சிறுகதைகள் எழுதுவது பற்றிய ஒரு மாதிரியை உருவாக்கிக் கொள்ள வேண்டும் எனவும் கூறினார். கட்டுரைகள் எழுதும் போது மாணவ மாணவிகள் தாங்கள் படித்த புத்தகங்களை மேற்கோள் காட்ட வேண்டும் எனவும் கூறினார். கட்டுரைகள் மற்றும் சிறுகதைகள் எழுத விரும்புபவர்கள் முதலில் புதுமைப்பித்தன், வண்ணதாசன், வல்லிக் கண்ணன், போன்ற எழுத்தாளர்களின் படைப்புக்களை வாசிக்க வேண்டும் என்றார். மேலும், மாணவ மாணவிகள் கேட்ட கேள்விகளுக்கு விளக்கம் அளித்தார்.
முன்னதாக நூலகப் பயிற்சியாளர் திருமதி.எம்.கௌபா அனைவரையும் வரவேற்றார். நூலகப் பயிற்சியாளர் செல்வி.எம்.சாதியா பாத்திமா அனைவருக்கும் நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில் நூலகத்துறைத் தலைவர் முனைவர் எம்.பாத்திமா பீவி உட்பட திரளான மாணவ மாணவியர் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளைத் தமிழ்த்துறை இணைப் பேராசிரியர் முனைவர்.திரு.ஏ.எஸ்.சேக் சிந்தா, நூலகர் ஆர்.ஆர்.சரவணக்குமார், உதவி நூலகர் செல்வி. ஜாஸ்மின் ஜமி, நூலக உதவியாளர் திருமதி. எஸ்.பாத்திமா சப்ரின், நூலகப் பயிற்சியாளர்கள் திருமதி. எம்.கௌபா, செல்வி. எம்.சாதிய பாத்திமா ஆகியோர் செய்திருந்தனர்.

என்னவாக மாற வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அதுவாகவே மாறுகிறீர்கள் - முன்னாள் ஐ.ஏ.எஸ். அலுவலர் கோவிந்தராஜ் சிறப்புரை பாளை...
29/06/2024

என்னவாக மாற வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அதுவாகவே மாறுகிறீர்கள் - முன்னாள் ஐ.ஏ.எஸ். அலுவலர் கோவிந்தராஜ் சிறப்புரை

பாளை. சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியின் முதலாமாண்டு மாணவர்களின் வகுப்புகள் 26.06. 24 அன்று தொடங்கப்பட்டது. முதலாமாண்டு மாணவ மாணவியர்கள் மற்றும் பெற்றோருக்கான ஊக்குவித்தல் நிகழ்ச்சி 26. 06. 24 காலை 9 மணிக்குக் கல்லூரிக் கலையரங்கில் நடை பெற்றது. தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் ச. மகாதேவன் நிகழ்ச்சியின் நோக்கம் குறித்தும் கல்லூரி குறித்தும் அறிமுகஉரையாற்றினார்.
கல்லூரிமுதல்வர் டாக்டர் சே.மு. அப்துல் காதர் தலைமையுரையாற்றினார். துணைமுதல்வர் டாக்டர் எஸ்.எம்ஏ. செய்யது முஹமது காஜா வாழ்த்திப் பேசினார். கல்லூரித் தேர்வுகள் குறித்து தேர்வாணையர் டாக்டர் எம். சித்தி ஜமீலாஉரையாற்றினார். மாணவர் நலன் குறித்த செய்திகளை மாணவர் நலப் புலமுதன்மையர் பேராசிரியர் ஏ. ஹாமில் ,கல்லூரிக் கட்டணம் குறித்துநிதிக்காப்பாளர் டாக்டர் எம். சித்திக் உரையாற்றினார். கல்லூரி விடுதிகள் குறித்து துணைக் காப்பாளர் டாக்டர் எம். தமிம் அன்சாரி ஆகியோர் உரையாற்றினர். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் டாக்டர் எம். ஐ. ஜாஹிர் உசேன், உதவி ஒருங்கிணைப்பாளர்கள் டாக்டர் பிரியதர்ஷிணி, டாக்டர் முத்துராமன் , டாக்டர் பாத்திமாஆகியோர் முன்னிலை வகித்தனர் . கல்லூரி முதல்வர் டாக்டர் சே.மு அப்துல் காதர் பேசும்போது, மாணவர்களை உருவாக்குவதில் பெற்றோர் ஆசிரியர் பங்கு முக்கியமானது என்று குறிப்பிட்டார். பெற்றோர் கல்லூரி வளர்ச்சி குறித்துத் தங்கள் கருத்துகளைத் தெரிவித்தனர்.

முயன்றால் முடியாதது ஏதுமில்லை - முன்னாள் ஆட்சித் தலைவர் கோவிந்தராஜு சிறப்புரை
விழாவில் சிறப்பு விருந்தினராகப் பணிநிறைவு பெற்ற மாவட்ட ஆட்சித் தலைவரும் கல்லூரியின் முன்னாள் மாணவருமான கோவிந்தராஜ் ஐ.ஏ.எஸ். பேசும்போது ,
" சென்னை, கரூர், திருப்பூர் மூன்று மாவட்டங்களின் ஆட்சித் தலைவராகப் பணிபுரிந்தேன். என் தந்தையார் உணவளித்து வளர்த்தார். அறிவுத் தந்தையாக சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி என்னை அறிவு தந்து வளர்த்தது 1977 - 80 வரை இக்கல்லூரியில் வரலாறு பயின்றேன். அரசியல்வாதிகளும் ஐஏஎஸ் அதிகாரிகளும்ஆட்சியின் தண்டவாளங்கள். ஒவ்வொரு துறையையும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் வழிநடத்துகிறார்கள். அந்த உயர் பணிக்கு நீங்கள் வரவேண்டும். அருமையான கல்லூரிக்கு நீங்கள் பயில வந்திருக்கிறீர்கள். உங்கள் சிந்தனை செயல் குறிக்கோள் மூன்றும் உங்களை வழிநடத்தும். குறிக்கோள் இல்லாமல் எதையும் சாதிக்க முடியாது. இந்தக் கல்லூரிக்கு நான் பயில வந்த வாய்ப்பு மறக்க இயலாதது. படிக்கும் போதே ஆட்சியர் ஆக வேண்டும் என எண்ணினேன். என் எண்ணம் ஈடேறியது. மூன்று மாவட்ட ஆட்சியராகப் பணிபுரிந்தேன். உங்கள் எண்ணத்தில் விதையுங்கள் நிச்சயம் சாதிப்பீர்கள். " என்று பேசினார்.

உங்கள் படிப்பே உங்கள் அடையாளம் : தென்காசி மாவட்ட தீத் தடுப்பு மற்றும் மீட்புத் துறை அலுவலர் பானுப்ரியா பேச்சு

தென்காசி மாவட்ட தீத் தடுப்புமற்றும் மீட்புத் துறை அலுவலர் பானுப் பிரியா பேசும்போது , "எதுவும் வாழ்வில் தடங்கல் இல்லை. என் மகன் பிறந்த பின் நான் ஏன் வேலைக்குப் போகக் கூடாது ? என்று எண்ணி னேன். ஆனால் படிப்பில் தங்கப்பதக்கம் பெற்ற நீ வீட்டில்தானே இருக்கிறாய் என்று எங்கள் ஊரில் சொன்னபோது, நான் சீருடைப் பணியாளராய் உயர்ந்து சாதித்துக் காட்டினேன். என் சீருடை எனக்கு மதிப்பும் மரியாதையும் தருகிறது. என்படிப்பால் நான் உயர்ந்தேன். குருப்1 தேர்வுக்கு 72 பணியிடத்துக்கு 10 லட்சம் பேர் எழுதினர். 4000 பேர் தேர்ச்சி அடைந்தோம். 145 பேர் தேர்வு செய்யப்பட்டோம். அதிலிருந்து 72 பேர் வெற்றி பெற்றோம். ஒவ்வொருவரின் சாதனைக்குப் பின்னால் ஒரு வலி இருக்கிறது. எதையும் நீங்கள் சாதாரணமாய் எடுக்கக் கூடாது. கல்லூரி படிக்கும் போதே ஐ.ஏ.எஸ். ஐபிஎஸ் தயார் செய்யுங்கள். எதற்கும் சமாதானம் ஆகாதீர்கள். சாதித்தவர்கள் ஓராண்டு தீவிரமாகப் படித்தால்தான் வெற்றி பெற முடியும். உங்களைக் குறை பேசியவர்கள் முன் சாதித்துக் காட்டுங்கள். வேலை இருந்தால் மட்டுமே அடையாளம் இருக்கும். முதல் நாளிலிருந்தே படியுங்கள். 6 முதல் 12 வரை உள்ள பாடப்புத்தகங்களைத் தீவிரமாகப் படியுங்கள். " என்று பேசினார். கணினித் துறைத் தலைவர் பேராசிரியர் கலிலூர் ரஹ்மான் நன்றி கூறினார். முதலாமாண்டு மாணவர்களை ஊக்குவிக்கும் நிகழ்ச்சி தொடர்ந்து 6 நாட்கள் நடக்கிறது

உலக போதை எதிர்ப்பு தின விழிப்புணர்வுக் கருத்தரங்கு பாளை. சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியும் திருநெல்வேலி மாவட்ட நிர்வாகமு...
29/06/2024

உலக போதை எதிர்ப்பு தின விழிப்புணர்வுக் கருத்தரங்கு
பாளை. சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியும் திருநெல்வேலி மாவட்ட நிர்வாகமும் இணைந்து 26. 6. 24 அன்று மாலை 5 மணிக்குக் கல்லூரிக் கலையரங்கில் நடத்தின. தமிழ்துறைத் தலைவர் பேராசிரியர் ச. மகாதேவன் வரவேற்றுப்பேசினார். கல்லூரி முதல்வர் பேராசிரியர் சே.மு. அப்துல்காதர் தலைமையுரை ஆற்றினார். துணைமுதல்வர் டாக்டர் செய்யது முகமது காஜா அறிமுக உரையாற்றினார். திருநெல்வேலி வட்டாட்சியர் (கலால் துறை) தங்கராஜ் விழிப்புணர்வு உரையாற்றும் போது, " உங்கள் கல்லூரிக் கனவுகளை நனவாக்க போதைப் பழக்கத்திற்கு ஆட்படக் கூடாது " என்றுபேசினார். நிகழ்வில் திருநெல்வேலி துணைஆட்சியர் மற்றும் கலால் உதவி ஆணையர் காசி, பாளையங்கோட்டை தாசில்தார் சரவணன், பாளையங்கோட்டை வருவாய் ஆய்வாளர் சுந்தர முருகன், பாளையங்கோட்டை கிராம நிர்வாக அலுவலர் பெருமாள்ஆகியோர் முன்னிலை வகித்தனர் அரசுதவி பெறாப் பாடங்களின் தமிழ்த்துறைத் தலைவர் டாக்டர் சாதிக் அலி போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழியை வாசிக்க மாணவ மாணவியர் உறுதிமொழியை மேற்கொண்டனர். திருநெல்வேலி மாவட்ட நிர்வாகமும் கல்லூரித் தமிழ்த் துறையும் சிறப்பாகச் செய்திருந்தன.

பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் குடிமை பணிகளுக்கான தேர்வுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி ....................
29/06/2024

பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் குடிமை பணிகளுக்கான தேர்வுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி ............................................................................................................
பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் குடிமை பணிக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி கல்லூரியின் இரண்டாம் தளத்தில் உள்ள உரையரங்கில் இன்று (26.06.24) புதன் கிழமை நடைபெற்றது.இறைமறை ஓதி துவங்கப்பட்ட இந் நிகழ்ச்சிக்கு வந்திருந்த சிறப்பு விருந்தினர்களை மருத்துவர் முஹம்மது இபுறாஹிம் வரவேற்று வரவேற்புரை ஆற்றினார் .கல்லூரி முதல்வர் முனைவர் சே.மு. அப்துல் காதர் நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கி தலைமையுரை ஆற்றியதோடு மாணவர்களுக்குக் குடிமை பயணிகள் முக்கியத்துவத்தைப் பற்றி எடுத்துரைத்தார். முஸ்லிம் அநாதை நிலையத்தின் செயலாளர் எம்.கே.எம். அஹமது கபீர் வாழ்த்துரை வழங்கினார். இந்த நிகழ்வில் மாணவர்களிடையே குடிமை பணிகள் பற்றிய முக்கியத்துவத்தைப் பற்றியும், அத்தேர்வுக்கு எவ்வாறு தயாராக வேண்டும் என்பதைப் பற்றி விரிவாக மாணவர்களுக்கு எடுத்துரைத்ததோடு மாணவர்களுக்கு ஏற்பட்ட சந்தேகங்ளுக்கான பதில் அளித்து சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் கூட்டுறவு சங்கத்தின் பதிவாளர் திரு கோவிந்தராஜன் I.A.S , தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் தென்காசி மாவட்ட அதிகாரி திருமதி பானுப்பிரியா மற்றும் முன்னாள் மாவட்ட வருவாய் அதிகாரி எம். அக்பர் அலி ஆகியோர் கலந்து கொண்டனர்.இறுதியாக இக்லாஸ் I.A.S. அகாடமியின் ஒருங்கிணைப்பாளர் ஏ.எம். செய்யது அலி நன்றியுரை வழங்கினார்.இந் நிகழ்வுக்கான ஏற்பாடுகளைக் கல்லூரியின் சதக்கத் அகாடமி மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் சாகுல் ஹமீது,நூலகர் முனைவர் சரவணன், பேரா சைதாலி, முனைவர் பிரியதர்ஷினி,பேரா ஷீனத் பக்கீரா,பேரா பெரின் பாத்திமா,பேரா குர்ஷித் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

NSS Orientation programme was organised for the first year students of Sadakathullah Appa College. Dr. Samuel Chelliah, ...
29/06/2024

NSS Orientation programme was organised for the first year students of Sadakathullah Appa College. Dr. Samuel Chelliah, Regional Director, NSS, Chennai, was the resource person who delivered the special address. He highlighted the motto of NSS which is the development of character through social service. The talk was very impressive and the students were motivated to join NSS.

மறைந்த பேராசிரியரின் புத்தகங்கள் கல்லூரி நூலகத்திற்கு வழங்கல்பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் பணிபுரிந்து...
25/06/2024

மறைந்த பேராசிரியரின் புத்தகங்கள் கல்லூரி நூலகத்திற்கு வழங்கல்

பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் பணிபுரிந்து மறைந்த பொருளியல் துறை தலைவர் மற்றும் உதவி பேராசிரியருமான மர்ஹூம் முனைவர் ஷேக் தம்பி அவர்களின் மனைவி ரிகானா பர்வீன் அவர்கள் ஷேக் தம்பி அவர்கள் பயன்படுத்திய ஏராளமான புத்தகங்களை கல்லூரியின் நூலகத்திற்கு அவர்களின் தகப்பனார் வாயிலாக இன்று நன்கொடையாக அளித்தார்கள். அதை நாம் கல்லூரியின் முதல்வர் முனைவர் சே.மு.அப்துல் காதர் மற்றும் நமது கல்லூரியின் நூலகர் முனைவர் சரவணகுமார் அவர்கள் பெற்றுக்கொண்ட காட்சி உடன் நம் கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் செய்யது முகமது காஜா மற்றும் வணிகவியல் துறை உதவி பேராசிரியை முனைவர் எட். பிரியதர்ஷினி

The Graduation Day, Sadakathullah Appa College – 09.03.2024The Graduation Day of Sadakathullah Appa College (Autonomous)...
13/03/2024

The Graduation Day, Sadakathullah Appa College – 09.03.2024

The Graduation Day of Sadakathullah Appa College (Autonomous) was held ceremoniously on 09 March, 2024 at 6.30 p.m. Nine hundred and sixty four candidates who belong to the 2019-2022 Batch received their Degrees from the Honourable Chief Guest of the grand occasion, Prof. P.K. Abdul Azis, Former Vice-Chancellor, Aligarh Muslim University, Uttar Pradesh.
The Proceedings of the ceremony began with Qirath by Dr. S. A. Mohamed Rafeek, Assistant Professor of Arabic. Principal Dr. S. M. Abdul Kader welcomed the guests and the gathering. Honourable Secretary of the College Managing Committee, Alhaj T.E.S Fathu Rabbani Sahib offered Felicitations. President of the College Managing Committee, Alhaj. Wavoo. S. Seyed Abdur Rahman, Honourable Members of the College Managing Committee, Alhaj. M.K.M. Mohamed Nazar, Er. L.K.M.A. Muhammad Nawab Hussain, Alhaj. P.S.M. Ilyas and Prof. S. Abubucker were also present at the Ceremony.
Prof. P.K Abdul Azis while delivering the Graduation Day Address in a vivacious manner, praised and congratulated the College Managing Committee for their tremendous guidance and support behind the effective functioning of the Institution. "The College has been in safe hands, and it will be in the same safe hands for the years to come," he remarked while heaping praise on the College Managing Committee. During his address, he pointed out the transformation of the students from being without any responsibilities to becoming a responsibile citizens. Now, they have to contribute to the growth of the Nation he added. He insisted that the Graduates should not stop with this achievement and they should register for higher studies and research. By undertaking quality research, the development and growth of this Nation in the fields of Science and Technology can be ensured. He also pointed out that, Former Prime Minister of India, Pandit Jawaharlal Nehru founded the Technological Infrastructure of our Nation after Independence. He also recalled with diligence, the contributions of Former Prime Minister, Shrimathi Indira Gandhi, Agricultural Scientist, Thiru M.S Swaminathan and Chairman of the National Knowledge Commission, Thiru Sam Pitroda in taking our Nation to the next-level in various realms. He insisted that the Graduates should work together in teams beyond religious, cultural and borders, to take the Nation in a Growth Trajectory. He applauded the Institution’s remarkable feats in the Golden Jubilee Year such as NAAC Reaccreditation with A++ Grade(3.56 CGPA), Rank Band 151-200 in NIRF Rankings and the Extension of Autonomous Status up to 2033. He requested the College Managing Committee to guide the Faculty of the Institution to introduce New Programmes and develop research infrastructure of the Institution. He concluded his speech by remarking Reading and Quality Research Publications are Passports for the better career of every Graduate. Dr. A. Shakul Hamid, Head of the Department of Computer Science, submitted the report of the candidates who did not receive the Degrees. Dr. S. Mahadevan, Head of the Department of Tamil was the Master of the Ceremony.

பாளை  கல்லூரியில் பயின்றோர் பேரவை நிகழ்ச்சிபாளை, சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியின் பயின்றோர் பேரவை - ஆண்டுக் கூட்டம் கல்...
24/02/2024

பாளை கல்லூரியில் பயின்றோர் பேரவை நிகழ்ச்சி

பாளை, சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியின் பயின்றோர் பேரவை - ஆண்டுக் கூட்டம் கல்லூரி கலையரங்கில் இன்று (24.02.2024) சனிக்கிழமை நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் இயற்பியல் துறைத் தலைவர் முனைவர் முஹம்மது ரோஷன் கிராஅத் ஓதினார்.
வேதியியல் துறைத்தலைவர் மற்றும் பயின்றோர் பேரவையின் செயலர் முனைவர் ஏ. செய்யது முகம்மது வரவேற்புரை வழங்கினார்.
ஆட்சிக்குழு உறுப்பினரும் பயின்றோர் பேரவையின் பொதுச்செயலாளருமானஅல்ஹாஜ்எம்.கே.எம். முஹம்மது நாசர் தலைமையுரை ஆற்றினார்.கல்லூரி முதல்வர் முனைவர் (பொறுப்பு) ஏ. சாகுல் ஹமீது மற்றும் பயின்றோர் பேரவைத் தலைவர் பி. செய்யது உமர் சாஜித் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். மேலும் இந் நிகழ்விற்கு கல்லூரியின் முன்னாள் மாணவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான முத்துக்கருப்பன், மற்றும் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் தூத்துக்குடி மாவட்டத்தின் சிறப்பு துணை ஆட்சியர் ஹபீப் ரஹ்மான் மற்றும் ஆலங்குளம் வட்டாட்சியர் ஒசானா பெர்னாண்டோ ஆகியோர்
நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்களாகத் கலந்து கொண்டு தங்கள் கடந்த கால கல்லூரி நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டனர்.மேலும் தம்பி ஏஜென்சி அதிபர் ஹாஜி ஏ.அப்துல் ஹக் , கல்லூரியின் முன்னாள் பேராசியர்கள்
முனைவர் எம்.கமாலுதீன், முனைவர் பி.ஏ. அப்துல் கரிம், முனைவர் ஷாஹிர்தா பேகம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர். பேரவையின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் எம்.சேக் முஹைதீன் பாதுஷா, பயின்றோர் பேரவை செயல்பாட்டு செயலாளர் காயல்பட்டினம் அப்துல் காதர், பயின்றோர் பேரவை துணைத் தலைவர் ஆரிப் சுல்தான், முஸ்லிம் மேல்நிலைப் பள்ளி தாளாளர் எல்.கே.எஸ்.மீரான் மைதீன் வழக்கறிஞர்கள் மதார் முகைதீன், மாரியப்பகாந்தி , கல்லூரி பேராசிரியர்கள் முனைவர் நசீர் அகமது, முனைவர் முஹைதீன் பாதுஷா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கல்லூரியின் நிர்வாகக் குழு ஆலோசகர் பி. ஏ. அப்துல் கரிம் அவர்கள் நிதிநிலை அறிக்கையை வாசித்தார். பயின்றோர் பேரவைப் பொருளாளரும் கல்லூரியின் துணை முதல்வருமான முனைவர் எஸ்.எம்.ஏ.செய்யது முஹம்மது காஜா அனைவருக்கும் நன்றி கூறினார். வரலாற்றுத் துறைப் பேராசிரியர் முனைவர் அப்துல் அஜீஸ் மற்றும் பேராசிரியர் சுப்ரியா ஆகியோர் இந்நிகழ்வினை தொகுத்து வழங்கினார்கள். இந்த நிகழ்ச்சியில் 200க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

https://www.youtube.com/live/gWlgDtOS3HQ?si=FQ2jiCYSiDNVylRuSadakathullah Appa College-Annual Alumini- நிகழ்வினை 24.02.2...
23/02/2024

https://www.youtube.com/live/gWlgDtOS3HQ?si=FQ2jiCYSiDNVylRu

Sadakathullah Appa College-Annual Alumini- நிகழ்வினை 24.02.2024 காலை 10.00 முதல் நேரலையில் காண மேற்கண்ட இணைப்பை பயன்படுத்துங்கள்

Address

Sadakathullah Appa College, Rahmath Nagar, Tirunelveli/627011
Tirunelveli
627011

Opening Hours

Monday 8am - 6pm
Tuesday 8am - 6pm
Wednesday 8am - 6pm
Thursday 8am - 6pm
Friday 8am - 6pm

Alerts

Be the first to know and let us send you an email when Sadakathullah Appa College - Autonomous posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Sadakathullah Appa College - Autonomous:

Shortcuts

Share

Category