GHSS VNKL Alumni Association பழைய மாணவர்கள் சங்கம்

  • Home
  • GHSS VNKL Alumni Association பழைய மாணவர்கள் சங்கம்

GHSS VNKL Alumni Association பழைய மாணவர்கள் சங்கம் A group of people who have graduated from a school

https://youtu.be/7XnVuM5i5vY
16/08/2023

https://youtu.be/7XnVuM5i5vY

தென்னக இரயில்வே GDCE தேர்விற்கு விண்ணப்பிப்பது எவ்வாறு

நம் பள்ளி!            நம் பெருமை!!வன்னிக்கோனேந்தல் அரசு மேல்நிலைப் பள்ளியில் தீவிர மாணவர் சேர்க்கை ஒரு புறம் மற்றொரு புற...
13/06/2022

நம் பள்ளி!
நம் பெருமை!!

வன்னிக்கோனேந்தல் அரசு மேல்நிலைப் பள்ளியில் தீவிர மாணவர் சேர்க்கை ஒரு புறம்

மற்றொரு புறம் கோடை விடுமுறை முடிந்து பள்ளிக்கு வரும் மாணவர்களை தலைமையாசிரியர் திருமதி வசந்தி டீச்சர் அவர்கள் தலைமையில் வரவேற்று இனிப்புகள் வழங்கினர்

( நம்ம பள்ளிக்கு தான் வந்தோமா? அல்லது வேறு தனியார் பள்ளிக்கு வந்தோமா என்று மாணவர்களுக்குள் சந்தேகம் எழும் அளவுக்கு சிறப்பான வரவேற்பு ஏற்பாடு )

வாருங்கள் முன்னாள் மாணவர்களே நம் பள்ளிக்கு பெருமை சேர்ப்போம்!

பள்ளி தலைமையாசிரியரின் பணி அறிந்து கைபேசி மூலம் தொடர்பு கொண்டு பாராட்டிய சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் அன்பு அண்ணன் திரு ராஜா அவர்களுக்கு

வன்னிக்கோனேந்தல் அரசு மேல்நிலைப் பள்ளி முன்னாள் மாணவர் பேரவை சார்பாக நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதோடு

இந்த பள்ளியின் வளர்ச்சியில் உங்கள் பங்களிப்பும் இருக்க வேண்டும் என்பது என் போன்ற முன்னாள் மாணவர்களின் விருப்பம் மற்றும் அன்பு வேண்டுகோளாக உள்ளது!

நமது பள்ளியின் முன்னாள் உதவி தலைமை ஆசிரியர் மற்றும் இயற்பியல் ஆசிரியராக பணியாற்றி பதவி உயர்வின் அடிப்படையில் தலைமை ஆசிரி...
10/02/2022

நமது பள்ளியின் முன்னாள் உதவி தலைமை ஆசிரியர் மற்றும் இயற்பியல் ஆசிரியராக பணியாற்றி பதவி உயர்வின் அடிப்படையில் தலைமை ஆசிரியராக தூத்துக்குடி மாவட்டம் ராமானுஜம் புதூர் அரசு உயர்நிலை பள்ளியில் சிறப்பாக பணிபுரிந்து தமிழ்நாடு அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருதைப் பெற்ற மதிப்பிருக்குரிய ஆசிரியர் திருமதி S.M. வசந்தி M.Sc, M.Ed, M.Phil அவர்கள் தற்போது நமது பள்ளிக்கு விருப்ப மாறுதல் பெற்று தலைமை ஆசிரியராக வந்துள்ளார். அன்னையின் சீரிய பணியில் எங்கள் பகுதி மாணவர்கள் சிறப்பாக கல்வியில் சிறந்து விளங்கி பள்ளியும் சிறந்த பள்ளி என்ற பெயரை பெற்றுத்தருவார்கள் என்று வாழ்த்தி வணங்குகிறேன்.

18/02/2019
சமீபத்தில் வெளியான பிளஸ்-2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவிகளை வைத்து விளம்பரம் செய்யக்கூடாது என தமிழக அரசு த...
17/05/2017

சமீபத்தில் வெளியான பிளஸ்-2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவிகளை வைத்து விளம்பரம் செய்யக்கூடாது என தமிழக அரசு தனியார் பள்ளி நிர்வாகத்தினருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

🔸 தமிழகத்தில் இந்த ஆண்டு பிளஸ்2 தேர்வு முடிவு கடந்த 12ந்தேதி வெளியானது.

🔸 இந்த ஆண்டு முதன்முறையாக தேர்வு முடிவுகள் கிரேடு முறையில் வெளியிடப்பட்டது.

🔸 இதன் காரணமாக முதல், இரண்டாவது மற்றும் மூன்றாவது மாணவ, மாணவிகள் யார் என்பது விளம்பரப்படுத்து வது தடுக்கப்பட்டது.

🔸 மாணவ மாணவிகளிடையே ஏற்படும் வேறுபாட்டை களைவதற்காக இந்த முறை நடைமுறைப்படுத்துவதாக கூறப்பட்டது.

🔸 இந்நிலையில் ஒருசில பள்ளிகளில், தங்கள் பள்ளியில் படித்து அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளின் பேனர் வைத்து ஆள் பிடிக்க தொடங்கி உள்ளனர்.

🔸 பல தனியார் பள்ளிகளில் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.

🔸 இதன் காரணமாக பள்ளிகளுக்கு தமிழக பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

🔸 அதில், 10 மற்றும் 12-ம் வகுப்புகளில் அதிக மதிப்பெண்கள் பெறும் மாணவர்களை வைத்து விளம்பரம் செய்யக்கூடாது என்றும், விளம்பர பதாகைகளை வைப்பதற்கும் , ஊடகங்களில் விளம்பரம் செய்வதற்கும் அரச தடை விதித்துள்ளதாகவும், மீறி பேனர் வைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

🔹 10, 12-ஆம் வகுப்பு தேர்வில் முதல் 3 இடங்களை அறிவிக்கும் நடைமுறையை கைவிட வேண்டும் என்று தனியார் பள்ளிகளுக்கு தமிழ்நாடு மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் அறிவுறுத்தியுள்ளார்.

🔹 2016-2017 ஆம் ஆண்டு முதல் பொது தேர்வில் முதல் 3 இடங்களை அறிவிக்கும் நடைமுறை இல்லை என்றும் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அரசாணை எண்.91-ஐ கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

🔹மேலும் ஒரு சில மாணவர்களின் பெயர்கள், புகைப்படத்தை நாளிதழ், ஊடகங்களில் வெளியிடக்கூடாது என்று மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் கூறியுள்ளார்.

16/03/2017

கம்ப்யூட்டர் சயின்ஸ் தேர்வில் கறுப்பு மை: தேர்வுத்துறை உத்தரவு.
பிளஸ் 2 கம்ப்யூட்டர் சயின்ஸ் தேர்வில் இந்தாண்டு ஓ.எம்.ஆர்., ஷீட்டில் கறுப்பு நிற பால் பாயின்ட் பேனாவால் மட்டுமே விடை நிரப்ப வேண்டும்' என தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.இத்தேர்வு நாளை (மார்ச் 17) நடக்கிறது. 150 மதிப்பெண்கள் வினாக்களில், 75 ஒரு மதிப்பெண்
வினாக்கள் 'அப்ஜெக்டிவ்' வகையாக கேட்கப்படும். இதற்கான விடைகள்,

தேர்வு அறையில் வழங்கப்படும் ஓ.எம்.ஆர்., ஷீட்டில் நிரப்ப வேண்டும். கடந்தாண்டு புளு அல்லது கறுப்பு நிற பால் பாயின்ட் பேனாக்களால் மாணவர்கள் விடை நிரப்பலாம் என அறிவுறுத்தப்பட்டது. ஆனால், இந்தாண்டு கறுப்பு நிற பால் பாயின்ட் பேனாவால் மட்டும் தான் நிரப்ப வேண்டும் என்ற புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 'ஆன்சர் கீ' வெளியிடப்படுமா: பொது தேர்வுக்கு பின், மாணவர் நலன் கருதி அனைத்து தேர்வு வினாக்களுக்கும், 'ஆன்சர் கீ' விவரம், ஆன்லைனில் தேர்வுத்துறையால் வெளியிடப்படும். ஆனால், கம்ப்யூட்டர் சயின்ஸ் தேர்வுக்கு மட்டும் இதுவரை வெளியிடப்படவில்லை.

மேலும் மறுமதிப்பீட்டின் போது விடைத்தாள் புகைப்பட நகல் கேட்டு விண்ணப்பித்தால் 'தியரி' பகுதிக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. 75 மதிப்பெண் பகுதியான 'ஓ.எம்.ஆர்., ஷீட்' நகல் வழங்குவதில்லை. எனவே, இந்தாண்டு முதல் 'ஆன்சர் கீ' வெளியிட்டு, ஓ.எம்.ஆர்., ஷீட் புகைப்பட நகல் வழங்க வேண்டும் என மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
கல்விக் கதிர்

01/03/2017

இன்று (02-03-2017)பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவிருக்கும் அரசு மேல்நிலைப்பள்ளி-வன்னிக்கோனேந்தல் மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் முன்னால் மாணவர்கள் சங்கம் சார்பாக வாழ்த்துக்கள்.........All the best !!!!

05/09/2016

Happy teachers day!

07/08/2016

பணி உயர்வு பெற்று தலைமை ஆசிரியராக நம் பள்ளிக்கு வரவிருக்கும் மதிப்பிற்குரிய ஐயா திரு.ஜான் பிரிட்டோ அவர்களை வருக! வருக! என வரவேற்கிறோம். அவரது கல்வி பணி சிறக்க வாழ்த்துக்கள்.

I want the same........
04/07/2016

I want the same........

முன்னாள்  மாணவர்கள் சந்திப்பு மற்றும் இந்த கல்வியாண்டில்(2015-2016) பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொது தே...
30/06/2016

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு மற்றும் இந்த கல்வியாண்டில்(2015-2016) பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வில் முதல் மூன்று மதிப்பெண் பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினர் நமது பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்ற வெங்கடாசலம் ( சிறப்பு தமிழ் ) அவர்கள் மாணவர்களுக்கு சொற்பொழிவாற்றிய போது

Address

Sankaran Kovil To Tirunelveli Main Road

627951

Website

Alerts

Be the first to know and let us send you an email when GHSS VNKL Alumni Association பழைய மாணவர்கள் சங்கம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Want your school to be the top-listed School/college?

Share