01/06/2023
#வன்னி_குலோபகாரி
புன்னமை தியாகராய நாயகர்
_________
செங்கற்பட்டு மாவட்டம் சீர்வாடி அருகேயுள்ள புன்னமை என்னும் கிராமத்தில் முருகப்ப நாயகர் அவர்களுக்கு மகனாக 1840ல் பிறந்தார்.
கட்டிட மேஸ்திரி, கான்ட்ராக்டராக இருந்தார். மேலும் சென்னை முத்தியால்பேட்டையில் இரும்பு வாணிகமும் செய்தார். தான் ஈட்டிய பெரும் செல்வத்தை கொண்டு, ஆன்மீகத்தொண்டு, கல்வித்தொண்டு, குலத்தொண்டு என புண்ணிய காரியங்கள் பல செய்துள்ளார்.
அத்திப்பாக்கம் வெங்கடாசல நாயகருடன் இணைந்து சமூக தொண்டுகள் பல செய்துள்ளார்.
1891ஆம் ஆண்டு திருக்கழுகுன்றத்தில் ஆரம்ப பள்ளியை ரூபாய் 4000 செலவழித்து இலவச கல்வி சாலையாக தொடங்கினார்.
வன்னியகுல க்ஷத்ரிய பிள்ளைகள் படிக்க காஞ்சிபுரத்திலும் ஆரம்ப கல்வி நிலையத்தை தொடங்கினார்.
1903ஆம் ஆண்டு மதுராந்தகத்தில் வன்னிய மாணவர்கள் கல்வி பயில ரூபாய் 3000 செலவிட்டு இலவச பள்ளியை தொடங்கினார்.
இப்பள்ளியில் படிக்கும் மாணவர்களை கண்ணென காத்து வளர்க்க வேண்டுமென ஆசிரியர்களுக்கு ஆலோசனை கூறுவார்.
ஏழை மாணவர்கள் படித்து முன்னேற வேண்டுமென, திருக்கழுக்குன்றம், காஞ்சிபுரம், மதுராந்தகம் ஆகிய மூன்று ஊர்களில் தொடக்கக்கல்வி பயில, தம் சொந்த செலவில் கல்வி நிறுவனங்களை தொடங்கிய புன்னமை தியாகராய நாயகர்,
சென்னை வன்னியகுல க்ஷத்ரிய மகா சங்கத்திடம், ரூபாய் 8000 ஒப்படைத்து 17.01.1894 ல் விருப்பாவனம் எழுதினார். ரூபாய் 8000த்தில் வரும் வட்டியை கொண்டு கல்வி சாலைகளை பராமரிக்குமாறு உயிலில் (சிலாசனம்) குறிப்பிட்டுள்ளார்.
தம் குடும்பத்தின் சந்ததியாரில் ஒருவரை சேர்த்துக்கொண்டு, இந்த தருமத்தை பழுதுவராமல் செய்ய வேண்டுமென திருக்கழுக்குன்றத்தில் கல்வெட்டில் (சிலாசனம்) எழுதியுள்ளார்.
இதை செய்ய தவறினால், சிவ துரோகம் செய்தவர் போகும் பாவத்திற்கு உள்ளாவார்கள், இது சத்தியம், சத்தியம் கடவுள் துணை என்றும் கல்வெட்டில் பொறித்துள்ளார்.
நாயகர் அவர்கள் நாட்டியிருக்கும் பெரியதோர் சிலாசாசனங்களையும், குலாபிமானத்தையும் பார்வையிட்ட மகா சங்கத்தார் " வன்னி குலோபகாரி " என்ற பட்டத்தை ஐயா புன்னமை தியாகராய நாயகர் அவர்களுக்கு மாலை மரியாதையோடு சூட்டி மகிழ்ந்தார்கள்.
" அன்னயாவினும் புண்ணியங்கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் " என்றதற்கேற்ப ஏழைகள் படிக்க, மூன்று கல்வி நிறுவனங்களை நிறுவிய வள்ளல் புன்னமை தியாகராய நாயகர் 28.06.1906ஆம் ஆண்டு மறைந்தார்.
ஐயாவின் 114வது நினைவுநாளில் அவர் குல தர்மத்தை போற்றி வணங்கி, அவர் புகழை உலகம் முழுவதும் பரப்ப வேண்டாம், குறைந்தபட்சம் நம் சமூகத்தவர்களிடையே பரப்புங்கள் சொந்தங்களே. சொந்த சமூகமே அவரை யார் என்று கேட்கும் அளவுக்கு அவர் புகழ் மங்கி போயுள்ளது வேதனையளிக்கிறது.
இனியாவது, அவர் புகழை பரப்புவோம் சொந்தங்களே.
தகவல் திரட்டு - ஐயா கோ. பெரியண்ணன் அவர்கள்.
நன்றி - மஹரிஷி ஜம்பு ஆன்மீக மஹா சபா
📸 - விஜய் வீரமுண்டார்
வெளிக்கொணர்ந்தது - ஆண்ட பரம்பரை (சநாதன தர்மத்தை ஆதரிக்கும், அரசியல் சார்பற்ற, அக்நி குல க்ஷத்ரியர் வரலாற்று தளம்)