Pirians Foody

Pirians Foody Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Pirians Foody, Cooking school, M 15, Poonga Nagar,, Pudukkottai.

இந்த வலைப்பக்கம் மிகவும் சுவையான பரம்பரிய மற்றும் மேற்கத்திய உணவுப்பதார்த்தங்களை சமைப்பதற்கான செய்முறைகளை உரை, திரை மற்றும் குறும்பட வடிவில் அனைவரும் எளிதில் புரிந்துகொண்டு சமைக்க உதவும் ஒரு சிறப்பான பக்கமாகும்.

சிக்கன் புலாவ் (Chicken Pulao) என்பது பிரியாணியை விட செய்வதற்கு எளிதானது, அதே சமயம் சுவையில் சற்றும் சளைக்காதது. வாசனை ம...
04/03/2026

சிக்கன் புலாவ் (Chicken Pulao) என்பது பிரியாணியை விட செய்வதற்கு எளிதானது, அதே சமயம் சுவையில் சற்றும் சளைக்காதது. வாசனை மிகுந்த, உதிரி உதிரியான சிக்கன் புலாவ் செய்வதற்கான எளிய முறை இதோ 👇👇👇

🦋🦋 சிக்கன் புலாவ் ரெசிபி

🛒 தேவையான பொருட்கள்
✍️ 2 கப் பாஸ்மதி அரிசி (30 நிமிடம் ஊறவைத்தது)
✍️ 500 கிராம் சிக்கன்
✍️ 3 கப் தண்ணீர் (அல்லது 2.5 கப் தண்ணீர் + 0.5 கப் தேங்காய் பால்)
✍️ 2 பெரிய வெங்காயம் (நறுக்கியது)
✍️ 1 சிறிய தக்காளி (நறுக்கியது)
✍️ 5 பச்சை மிளகாய் (நெடுவாக கீறியது)
✍️ 1.5 மேசைக்கரண்டி இஞ்சி-பூண்டு விழுது
✍️ 1/4 கப் கெட்டித் தயிர்
✍️ ஒரு கைப்பிடி புதினா இலை
✍️ ஒரு கைப்பிடி கொத்தமல்லி இலை
✍️ 2 மேசைக்கரண்டி எண்ணெய்
✍️ 2 மேசைக்கரண்டி நெய்
✍️ 2 பிரியாணி இலை
✍️ 1 அங்குலம் இலவங்கப்பட்டை
✍️ 3 கிராம்பு
✍️ 3 ஏலக்காய்
✍️ 1 டீஸ்பூன் சோம்பு அல்லது ஷாஜீரா
✍️ உப்பு தேவைக்கேற்ப

👩‍🍳 செய்முறை

✍️ கனமான அடிப்பகுதியுள்ள பாத்திரத்தில் அல்லது குக்கரில் எண்ணெய் மற்றும் நெய் சேர்த்து காயவைக்கவும். அதில் பிரியாணி இலை, இலவங்கப்பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு சேர்த்து நன்றாக வாசனை வரும் வரை வதக்கவும்.

✍️ நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வெங்காயம் லேசாக பொன்னிறமாகும் வரை வதக்கவும். வெள்ளை புலாவ் வேண்டும் என்றால் கருப்பாக வறுக்க வேண்டாம்.

✍️ இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து 2 நிமிடம் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பின்னர் தக்காளி, புதினா, கொத்தமல்லி சேர்த்து மெலிதாகும் வரை சமைக்கவும்.

✍️ சிக்கன் துண்டுகள், தயிர், உப்பு சேர்த்து நன்றாக கலந்து, நடுத்தர சூட்டில் 5 முதல் 7 நிமிடம் வரை அரைவேகவைக்கும் வரை சமைக்கவும்.

✍️ 3 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். தண்ணீரை சுவைத்து சிறிது உப்பாக இருக்க வேண்டும்.

✍️ ஊறவைத்த அரிசியை வடித்து, கொதிக்கும் தண்ணீரில் சேர்த்து மெதுவாக ஒருமுறை மட்டும் கிளறவும்.

✍️ குக்கர் பயன்படுத்தினால், மூடி வைத்து நடுத்தர சூட்டில் 1 விசில் விடவும். பின்னர் தீயை குறைத்து 5 நிமிடம் வைத்து அணைக்கவும். அழுத்தம் இயல்பாக குறைய விடவும். பாத்திரம் பயன்படுத்தினால், மூடி வைத்து மெல்லிய தீயில் 12 முதல் 15 நிமிடம் வரை தண்ணீர் முழுவதும் உறிஞ்சும் வரை சமைக்கவும்.

✍️ 10 நிமிடம் ஓய்வெடுக்க விடவும். பின்னர் மெதுவாக முள்கரண்டியால் கிளறி பரிமாறவும்.

நீண்டநாள் நல் ஆயுளோடு வாழ ரகசிய உணவு(மருந்து)!பலரின்_பானை வயிற்றை flat ஆக்கவும் சிறந்த உணவு.--------------------------இத...
02/02/2026

நீண்டநாள் நல் ஆயுளோடு வாழ ரகசிய உணவு(மருந்து)!

பலரின்_பானை வயிற்றை flat ஆக்கவும் சிறந்த உணவு.
--------------------------

இதய பிரச்சினைகளுக்கு, (ரத்தக்குழாய் அடைப்பு, ஹார்ட் ஹட்டாக், பை பாஸ் சர்ஜரி, ஓப்பன் ஹார்ட் சர்ஜரி, இது சார்ந்த, ட்ரெட் மில், ஆன்ஜியோ கொடுமைகளில் இருந்து தப்பிக்க..)

உடல் உறிஞ்ச தகுதியில்லாத கழிவாக தேங்கியுள்ள கெட்ட கொழுப்பை கரைத்து வெளியேற்றவும்...

"நிறை மாத கர்பிணி" போன்ற தோற்றத்தை தரும் பலரின் பானை வயிற்றை flat ஆக்க்கவும்...

பச்சைபூண்டு மிக மிக சிறந்தது!

சிலர் இதை அப்படியே சாப்பிட முயற்சித்து,
அதில் உள்ள அமிலத்தன்மையின் வீரியம் தாங்கமுடியாமல் "சமைத்து_சாப்பிடுதல்" என்ற வசதியான குறிப்பை சாதகமாக்கி கொண்டு, முயற்சித்து, பயன் இல்லாமல் பாதியிலேயே விட்டு விடுவார்கள்!

பூண்டில் இருக்கும் ஒரு இயற்கை அமிலம் ஒப்பற்ற மருத்துவ குணம் உடையது!...

சமைத்தால், அதன் இயல்பு தன்மை வெகுவாக பாதிக்கப்படும்! இயற்கையாகவே, சமைத்து கெடாத பூண்டு துண்டங்களை நன்கு கடித்து உமிழ் நீரில் செரிமானம் செய்தலே,பூண்டை உணவாகவும், மருந்தாகவும் பயன்படுத்தும் சரியான முறையாகும்!

செய்முறை:
பத்து முழு பூண்டை உரித்து, தோல் நீக்கி, சிறு சிறு துண்டுகளாக்கி, சுத்தமான பருத்தி துணியில் 8லிருந்து12 மணி நேரம் நிழலில் காய வைத்த பின்,
அதனுடன் 5 முழு எலுமிச்சை பழங்களின் சாற்றோடு,
மூழ்கும் வரை தேன் ஊற்றி, குறைந்தது 50 நாட்கள் ஊரவைத்த பின், காலை மாலை 1/2 ஸ்பூன் பூண்டு துண்டங்களை ருசித்து ரசித்து சாப்பிட,
ஆரோக்யத்தை அருகிலேயே வைத்துக்கொள்ளலாம்!

சாப்பிட அவ்வளவு ருசியாகவும், அடுத்த நாள் தானாக உடலும் மனமும் நாடும் ஒரு பதார்த்தமாக விளங்கும்!

6 மாதத்திற்கு ஒரு முறையாவது 48 நாட்களுக்கு தொடர்ந்து சாப்பிட்டு வர, "எமதர்மன்" நமது பெயரை,
உடனடி காத்திருப்போர் பட்டியலில் இருந்து நீக்கிவிட்டு ,100 ஆவது வயதிற்குபின் வரும் superannuation retirement பட்டியலில் சேர்த்து விடுவார்!

குறிப்பு: இது மருந்தல்ல.. உணவு...!!!

5 வகையான சட்னி செய்வது எப்படி---1) தேங்காய் சட்னிதேவையான பொருட்கள்துருவிய தேங்காய் – 1 கப்பச்சை மிளகாய் – 2இஞ்சி – ½ டீஸ...
01/02/2026

5 வகையான சட்னி செய்வது எப்படி

---

1) தேங்காய் சட்னி

தேவையான பொருட்கள்

துருவிய தேங்காய் – 1 கப்

பச்சை மிளகாய் – 2

இஞ்சி – ½ டீஸ்பூன்

புளி – சிறிது

உப்பு – தேவையான அளவு

செய்முறை

1. எல்லா பொருட்களையும் மிக்ஸியில் சேர்த்து அரைக்கவும்.

2. தேவையெனில் சிறிது தண்ணீர் சேர்த்து சட்னி பதமாக்கவும்.

---

2) தக்காளி சட்னி

தேவையான பொருட்கள்

தக்காளி – 3

வெங்காயம் – 1

உலர் மிளகாய் – 3

பூண்டு – 3 பல்

எண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

செய்முறை

1. எண்ணெயில் உலர் மிளகாய், பூண்டு, வெங்காயம் வதக்கவும்.

2. தக்காளி சேர்த்து மென்மையாகும் வரை வதக்கவும்.

3. ஆறியதும் அரைத்து உப்பு சேர்க்கவும்.

---

3) புதினா சட்னி

தேவையான பொருட்கள்

புதினா இலை – 1 கப்

கொத்தமல்லி – ½ கப்

பச்சை மிளகாய் – 2

எலுமிச்சை சாறு – 1 டேபிள்ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

செய்முறை

1. எல்லா பொருட்களையும் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்.

2. பச்சை நிறத்தில் சட்னி தயார்.

---

4) வெங்காய சட்னி

தேவையான பொருட்கள்

பெரிய வெங்காயம் – 2

உலர் மிளகாய் – 4

புளி – சிறிது

எண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

செய்முறை

1. எண்ணெயில் உலர் மிளகாய், வெங்காயம் வதக்கவும்.

2. ஆறியதும் புளி, உப்பு சேர்த்து அரைக்கவும்.

---

5) பூண்டு சட்னி

தேவையான பொருட்கள்

பூண்டு – 10 பல்

உலர் மிளகாய் – 4

புளி – சிறிது

உப்பு – தேவையான அளவு

செய்முறை

1. பூண்டு, மிளகாய், புளி அனைத்தையும் அரைக்கவும்.

2. உப்பு சேர்த்து கெட்டியான சட்னியாக்கவும்.

5 வகையான பன்னீர் கிரேவி...🥘 1. பன்னீர் பட்டர் மசாலா (Paneer Butter Masala)தேவையான பொருட்கள்பன்னீர் – 200 கிராம் (சதுரமாக...
27/11/2025

5 வகையான பன்னீர் கிரேவி...

🥘 1. பன்னீர் பட்டர் மசாலா (Paneer Butter Masala)

தேவையான பொருட்கள்

பன்னீர் – 200 கிராம் (சதுரமாக நறுக்கவும்)

வெங்காயம் – 2

தக்காளி – 3

இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன்

பட்டர் – 2 டேபிள்ஸ்பூன்

மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்

மஞ்சள் தூள் – ¼ டீஸ்பூன்

கசூரி மேத்தி – 1 டீஸ்பூன்

கசகசா / முந்திரி விழுது – 2 டீஸ்பூன்

பால்/கிரீம் – ¼ கப்

உப்பு – தேவைக்கு

செய்முறை

1. தக்காளியை வதக்கி விழுது அரைக்கவும்.

2. ஒரு பானில் பட்டர் சூடானதும் வெங்காய விழுது, இஞ்சி பூண்டு விழுது வதக்கவும்.

3. தக்காளி விழுது, மிளகாய், மஞ்சள், உப்பு சேர்த்து நன்றாக கிளறவும்.

4. முந்திரி விழுது, கசூரி மேத்தி சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும்.

5. பன்னீர் துண்டுகள் சேர்த்து 3 நிமிடம் சமைக்கவும்.

6. இறுதியாக பால்/கிரீம் சேர்த்து அணைக்கவும்.

---

🥘 2. பன்னீர் திக்கா மசாலா (Paneer Tikka Masala)

தேவையான பொருட்கள்

பன்னீர் – 200 கிராம்

தயிர் – ½ கப்

மிளகாய், மஞ்சள், கரம் மசாலா – தலா 1 டீஸ்பூன்

எண்ணெய் – 3 டேபிள்ஸ்பூன்

வெங்காயம் – 2

தக்காளி – 3

கசகசா / முந்திரி விழுது – 2 டீஸ்பூன்

உப்பு – தேவைக்கு

செய்முறை

1. பன்னீரை தயிர் + மசாலாக்களில் 20 நிமிடம் ஊறவைத்து தோசைக்கல்லில் வறுக்கவும்.

2. ஒரு பானில் வெங்காயம், தக்காளி விழுது வதக்கவும்.

3. மிளகாய் தூள், கரம் மசாலா மற்றும் உப்பு சேர்க்கவும்.

4. முந்திரி விழுது சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும்.

5. வறுத்த பன்னீர் துண்டுகளை சேர்த்து மேலும் 3 நிமிடம் வேகவிடவும்.

---

🥘 3. பன்னீர் கோர்மா (Paneer Korma)

தேவையான பொருட்கள்

பன்னீர் – 200 கிராம்

வெங்காயம் – 2

தக்காளி – 2

இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன்

முந்திரி – 8

தேங்காய் பால் – ½ கப்

சோம்பு – ½ டீஸ்பூன்

மஞ்சள், மிளகாய் தூள் – தேவைக்கு

உப்பு – தேவைக்கு

செய்முறை

1. வெங்காயம் + தக்காளி + முந்திரி அரைத்து விழுது செய்யவும்.

2. ஒரு பானில் எண்ணெய் + சோம்பு தாளிக்கவும்.

3. விழுது, மஞ்சள், மிளகாய், உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.

4. தேங்காய் பால் சேர்த்து 3 நிமிடம் கொதிக்க விடவும்.

5. பன்னீர் சேர்த்து 5 நிமிடம் வேகவிட்டு இறக்கவும்.

---

🥘 4. பன்னீர் மிளகு கிரேவி (Pepper Paneer Gravy)

தேவையான பொருட்கள்

பன்னீர் – 200 கிராம்

வெங்காயம் – 2

தக்காளி – 2

இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன்

மிளகு தூள் – 2 டீஸ்பூன்

சீரகம் – 1 டீஸ்பூன்

மஞ்சள் தூள் – ¼ டீஸ்பூன்

உப்பு – தேவைக்கு

செய்முறை

1. சீரகம், வெங்காயம் வதக்கி இஞ்சி பூண்டு சேர்க்கவும்.

2. தக்காளி சேர்த்து நன்கு சுண்ட விடவும்.

3. மஞ்சள், மிளகு தூள், உப்பு சேர்க்கவும்.

4. தண்ணீர் ஊற்றி கொதித்ததும் பன்னீர் சேர்க்கவும்.

5. 5 நிமிடம் சமைத்து இறக்கவும்.

---

🥘 5. பன்னீர் பசலைக் கிரேவி (Paneer Palak Gravy – Palak Paneer)

தேவையான பொருட்கள்

பன்னீர் – 200 கிராம்

பசலைக் கீரை – 2 கப்

வெங்காயம் – 1

பச்சை மிளகாய் – 2

இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன்

சீரகம் – ½ டீஸ்பூன்

உப்பு – தேவைக்கு

செய்முறை

1. பசலைக் கீரையை கொஞ்சம் தண்ணீரில் வேக வைத்து அரைக்கவும்.

2. ஒரு பானில் எண்ணெய் சூடானதும் சீரகம் + வெங்காயம் வதக்கவும்.

3. இஞ்சி பூண்டு + பச்சை மிளகாய் சேர்க்கவும்.

4. கீரை விழுது + உப்பு சேர்த்து 3 நிமிடம் கொதிக்க விடவும்.

5. பன்னீர் சேர்த்து 5 நிமிடம் சமைக்கவும்.

சேலம் மட்டன் குழம்புதேவையான பொருட்கள்:மட்டன் - 3/4 கிலோசின்ன வெங்காயம் - 1/2 கிலோ (நறுக்கியது)தக்காளி - 1 (நறுக்கியது)மல...
04/05/2025

சேலம் மட்டன் குழம்பு

தேவையான பொருட்கள்:

மட்டன் - 3/4 கிலோ
சின்ன வெங்காயம் - 1/2 கிலோ (நறுக்கியது)
தக்காளி - 1 (நறுக்கியது)
மல்லி தூள் - 2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
பட்டை - 2
மிளகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
கசகசா - 1 டீஸ்பூன்
தேங்காய் - 1 மூடி (துருவியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன்
வரமிளகாய் - 10
கிராம்பு - 2
ஏலக்காய் - 2
பிரியாணி இலை - 1
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் மட்டனை நன்கு கழுவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் கழுவி வைத்துள்ள மட்டன், மஞ்சள் தூள், 1 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் உப்பு சேர்த்து, 1 கப் தண்ணீர் ஊற்றி, 5 விசில் விட்டு இறக்க வேண்டும். பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி வரமிளகாய், சிறிது கறிவேப்பிலை, சீரகம் மற்றும் மிளகு சேர்த்து வறுத்து, தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.

அதே வாணலியில் உள்ள எஞ்சிய எண்ணெயில் பாதி வெங்காயத்தை போட்டு வதக்கி இறக்க வேண்டும். அடுத்து, மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் சோம்பு, கசகசா, தேங்காய் சேர்த்து லேசாக வறுத்துக் கொள்ள வேண்டும். பின் வதக்கிய அனைத்தையும் தனித்தனியாக மிக்ஸியில் போட்டு, நைஸாக அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு அதே கடாயை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி, பட்டை, கிராம்பு, பிரியாணி இலை மற்றும் ஏலக்காய் சேர்த்து தாளிக்க வேண்டும். பின்னர் தனியாக எடுத்து வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து வதக்கி, மீதமுள்ள இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு 3-5 நிமிடம் வதக்கிவிட வேண்டும்.

வெங்காயம் நன்கு வதங்கியதும், அதில் நறுக்கிய தக்காளி சேர்த்து 2 நிமிடம் வதக்கி, பின் வேக வைத்துள்ள மட்டனை ஊற்றி, ஒரு கொதி விட வேண்டும். பின் அத்துடன் தேங்காய் கலவையை தவிர, அரைத்து வைத்துள்ள அனைத்தையும் சேர்த்து, உப்பு போட்டு நன்கு 10 நிமிடம் கொதிக்க விடவும். இறுதியில் நைஸாக அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவையை சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து 5-10 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கினால், அருமையான சேலம் மட்டன் குழம்பு ரெடி!!!....

Rose Ice Cream 🍦🌹Ingredients  - 2 cups heavy cream  - 1 cup whole milk  - 3/4 cup granulated sugar  - 1 tablespoon rose ...
03/05/2025

Rose Ice Cream 🍦🌹

Ingredients
- 2 cups heavy cream
- 1 cup whole milk
- 3/4 cup granulated sugar
- 1 tablespoon rose water
- 1/4 teaspoon pink food coloring (optional)
- 1 cup finely chopped rose petals (edible, optional)

Directions:
1. In a mixing bowl, combine heavy cream, whole milk, and sugar. Whisk until the sugar is dissolved.
2. Add rose water and food coloring (if using), and mix well.
3. If using, gently fold in the chopped rose petals.
4. Pour the mixture into an ice cream maker and churn according to the manufacturer's instructions until it reaches a soft-serve consistency.
5. Transfer to an airtight container and freeze for at least 4 hours or until firm.
6. Serve and enjoy your rose ice cream!

Salted Almond Ice Cream 🍦🌰Ingredients:- 2 cups heavy cream- 1 cup whole milk- 3/4 cup granulated sugar- 1 cup roasted al...
20/04/2025

Salted Almond Ice Cream 🍦🌰

Ingredients:
- 2 cups heavy cream
- 1 cup whole milk
- 3/4 cup granulated sugar
- 1 cup roasted almonds, chopped
- 1 teaspoon vanilla extract
- 1/2 teaspoon sea salt
- 1/2 cup almond milk (optional, for consistency)

Directions:
1. In a mixing bowl, whisk together heavy cream, whole milk, granulated sugar, and vanilla extract until the sugar is dissolved.
2. Stir in the chopped roasted almonds and sea salt.
3. If using, add almond milk for desired consistency.
4. Pour the mixture into an ice cream maker and churn according to the manufacturer's instructions until it reaches a soft-serve consistency.
5. Transfer the ice cream to a lidded container and freeze for at least 4 hours or until firm.
6. Serve and enjoy your salted almond ice cream!

Take something off this plate....
14/04/2025

Take something off this plate....

Homemade Peach Ice Cream Ingredients:- 2 pounds fresh peaches - peeled, pitted and chopped- 1 cup white sugar- 1 pint ha...
14/04/2025

Homemade Peach Ice Cream

Ingredients:
- 2 pounds fresh peaches - peeled, pitted and chopped
- 1 cup white sugar
- 1 pint half-and-half cream
- 1 14 oz. can sweetened condensed milk
- 1 12 fluid ounce can evaporated milk
- 1 teaspoon vanilla extract
- 2 cups whole milk, or as needed

Directions:
1. Dice peaches and mix with sugar in a bowl. Let it sit while you prepare the other ingredients.
2. In a separate bowl, combine half & half, sweetened condensed milk, evaporated milk, and vanilla. Then add the peaches and sugar mixture. Stir everything together.
3. Pour the mixture into a gallon ice cream freezer container. Add enough whole milk to fill the container up to the fill line, which is about 2 cups.
4. Follow the manufacturer's instructions to freeze the ice cream.
5. Cooling the container before adding the mixture will help the ice cream harden faster.

Homemade Cherry Vanilla Ice Cream 🍒🍦Ingredients:- 2 cups heavy cream- 1 cup whole milk- 3/4 cup granulated sugar- 1 tabl...
14/04/2025

Homemade Cherry Vanilla Ice Cream 🍒🍦

Ingredients:
- 2 cups heavy cream
- 1 cup whole milk
- 3/4 cup granulated sugar
- 1 tablespoon vanilla extract
- 1 cup fresh or frozen cherries, pitted and chopped
- 1/2 teaspoon salt
- Optional: additional cherries for serving

Directions:
1. In a mixing bowl, whisk together the heavy cream, whole milk, granulated sugar, vanilla extract, and salt until the sugar is fully dissolved and the mixture is smooth.
2. Add the chopped cherries and stir gently to combine.
3. Pour the mixture into your ice cream maker and churn according to the manufacturer's instructions until it reaches a soft-serve consistency.
4. Transfer the ice cream into an airtight container and freeze for at least 4 hours.
5. Serve scoops of ice cream and top with additional cherries if desired. Enjoy!

Address

M 15, Poonga Nagar,
Pudukkottai
622003

Website

Alerts

Be the first to know and let us send you an email when Pirians Foody posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category