03/01/2021
அன்பார்ந்த மாணவர்களுக்கும் அன்புக்குரிய பெற்றோர்களுக்கும் இனிய மாலை வணக்கம்🙏
புதுச்சேரி பள்ளிக்கல்வி இயக்ககத்தின் சுற்றறிக்கை எண் : 2409 DSE/ HSW/ AC/ A1 /2020
நாள் : 31/12/2020 படி
நாளை 04/01/2021 திங்கட்கிழமை முதல் முதல் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை வகுப்புகள் ( ஐய வகுப்பு) தொடங்க உள்ளன.
LKG / UKG மாணவர்களுக்கு வகுப்புகள் கிடையாது.
காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மட்டுமே . ( அரை நாள் வகுப்புகள்)
திங்கள் முதல் சனிக்கிழமை வரை பள்ளிகள் இயங்கும்.
பெற்றோர்களின் அனுமதிக் கடிதம் பெற்று மாணவர்கள் பள்ளிக்கு வரலாம்.
காலை சிற்றுண்டி / பால்
மற்றும் மதிய உணவு இல்லை.
வருகைப் பதிவு கட்டாயம் இல்லை.
பெற்றோரிடம் விருப்பம் இருந்தால் மட்டும் மாணவர்கள் உரிய அனுமதி பெற்று தனி மனித இடைவெளி, முகக்கவசம் அணிந்து வரலாம்.
பள்ளியில் சுத்தமான, சுகாதாரமான வகுப்பறைகள் / கழிப்பிட வசதிகள் மற்றும் தேவையான பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
பள்ளியில் , மாணவர்களின் வெப்ப நிலை கண்டறியும் TEMPERATURE மானிட்டர் சாதனம் தயார் நிலையில் உள்ளது.
நம் பள்ளியில் போதுமான HAND சானிடைசர், HAND WASH வசதியும் தயார் நிலையில் உள்ளது.
ஒரு வகுப்பில் 20 மாணவர்கள் மட்டுமே அனுமதி.
ஒரு பெஞ்சில் உரிய இடைவெளியுடன் 2 மாணவர்கள் மட்டுமே அனுமதி.
பெற்றோர்/ மாணவர்கள் தவிர பள்ளி வளாகத்தில் அந்நியர்கள் நுழைய அனுமதி இல்லை.
நன்றி.
தங்கள் வருகையை அன்புடன் எதிர்நோக்கும்,
தலைமையாசிரியர்,
அரசு தொடக்கப் பள்ளி,
CBSE
கரையாம்புத்தூர்,
வட்டம் 4
புதுச்சேரி.