09/05/2026
ரத்தனா மெட்ரிக் பள்ளி 100% தேர்ச்சி பெற்று சாதனை
பண்ருட்டி ரத்தனா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ மாணவிகள் நடந்து முடிந்த பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் 100 சதவீகித தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். பன்னிரெண்டாம் வகுப்பில் G.லாவண்யா என்ற மாணவி 600 க்கு 585 மதிப்பெண்கள் பெற்று முதல் இடத்தையும் H.முகமது பர்கான் என்ற மாணவர் 600 க்கு 573 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடத்தையும் K.ராகவி என்ற மாணவி 600 க்கு 570 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடத்தையும் பெற்று சாதனை படைத்தனர்.இச்சாதனை படைத்த மாணவர்களுக்கு பள்ளியின் நிறுவனர் திரு மாயகிருஷ்ணன் அவர்களை பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். மேலும் 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் 500 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தனர். கணினி அறிவியல் பாடத்தில் 9 மாணவர்கள் 100 க்கு 100 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தனர். இச்சாதனை படைத்த மாணவ மாணவிகளையும் இவ்வெற்றிக்கு உறுதுணையாய் விளங்கிய ஆசிரிய பெருமக்களையும் பள்ளியின் தாளாளர் திரு ராமகிருஷ்ணன், பள்ளியின் முதல்வர் திரு ரவி மற்றும் பள்ளியின் இயக்குநர்கள் திரு தேவநாதன் மற்றும் திரு பாலகிருஷ்ணன் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் ஸ்ரீதர் ஆகியோர் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
08/05/2026
Congratulations to all the students on this outstanding achievement, and a special thanks to all the teachers for their dedication and contribution to this success.💐
21/03/2026
*ரத்தனா பள்ளியில் ரமலான் திருநாள் சிறப்பு தொழுகை*
_இஸ்லாமியர்கள் பங்கேற்பு_
பண்ருட்டி ரத்தனா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ரமலான் திருநாளையோட்டி நோன்பு பெருநாள் சிறப்பு திடல் தொழுகை நிகழ்வு நடைபெற்றது. இதில் பண்ருட்டியில் உள்ள 100 க்கும் மேற்பட்ட இஸ்லாமிய பெருமக்கள் கலந்துகொண்டு ரமலான் திருநாளில் அல்லாஹ்வை வேண்டி சிறப்பு தொழுகை செய்தனர். இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் பள்ளி நிர்வாகம் சார்பாக செய்யப்பட்டது. மேலும் இஸ்லாமிய உறவுகள் அனைவருக்கும் ரமலான் திருநாள் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.
28/02/2026
*தேசிய அறிவியல் தின விழா*
_ரத்தனா பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவில் சாதனை_
இன்று *28.02.2026* தேசிய அறிவியல் தினத்தை கொண்டாடும் வகையில் செயின்ட் ஆன்ஸ் பொறியியல் கல்லூரி அங்கு செட்டிப் பாளையத்தில் மாவட்ட அளவிலான மாபெரும் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இதில் ரத்தனா பள்ளியில் பயிலும் மாணவர்கள் பங்கேற்று பல்வேறு நவீன அறிவியல் பயன்பாடுகள் சார்ந்த கண்காட்சி படைப்புகளை காட்சி படுத்தினர்.இதில் கடலூர் மாவட்டத்திலிருந்து 60க்கும் மேற்பட்ட பள்ளி,கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர். நமது பள்ளியை சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் *ரேஹித் மற்றும் விக்னேஷ்* ஆகியோர் *மாவட்ட அளவில்* *மூன்றாம் பரிசு* பெற்று சாதனை படைத்தனர். சாதனை படைத்த மாணவர்களுக்கும், ஊக்கமளித்த ஆசிரியர்களுக்கும் பள்ளி நிர்வாகம் சார்பாக பாராட்டி வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
06/02/2026
“We extend our hearty welcome to all for the 16 kg day celebration👶
28/01/2026
*தேசிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கண்காட்சி- ரத்தனா பள்ளி மாணவர்கள் பங்கேற்பு*
பண்ருட்டி போக்குவரத்து காவல்துறை சார்பாக நடத்தப்பட்ட தேசிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கண்காட்சியில் ரத்தனா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். இதில் சாலை பாதுகாப்பு மற்றும் விபத்து தடுப்பு குறித்து பல்வேறு பிரிவுகளின் கீழ் 70 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று தங்கள் படைப்புக்களை கண்காட்சியில் காட்சிப்படுத்தினர்.இதில் சிறந்த படைப்புக்களை பாராட்டி மாணவர்களுக்கு பரிசுகளும்,பதக்கங்களையும் சான்றிதழ்களையும் வழங்கப்பட்டது. மேலும் இந்த தேசிய சாலை பாதுகாப்பு சார்ந்த கண்காட்சியில் பெரும்பாலான மாணவர்களை பங்கேற்க செய்து சிறந்த படைப்புகளையும், நல்ல ஒத்துழைப்பையும் வழங்கியமைக்காக *பள்ளி முதல்வர் திரு ரவி* அவர்களை பாராட்டி பண்ருட்டி *போக்குவரத்து காவல் துறை *துணை* *ஆய்வாளர் திரு.முரளி** அவர்கள் பொன்னாடை அணிவித்து நன்றி தெரிவித்தார்.