14/12/2024
மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்களுக்கு,
வணக்கம்! நான் செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்குளத்தூர் ஒன்றியத்தில் மண்ணிவாக்கம்- விரிவு பகுதியில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறேன். என் பெயர் செ. பாரதி. எங்கள் பள்ளியில் 195 மாணவர்கள் கல்வி பயில்கிறார்கள். ஆறு ஆசிரியர்கள் பணிபுரிகின்றோம். கல்வி சிறந்த தமிழ்நாட்டில் பணிபுரியும் நாங்கள், தமிழக அரசின் வழிகாட்டுதலின்படியும், கல்வி அதிகாரிகளின் ஆலோசனையின்படியும் சிறப்பாக பணியாற்றி சிறந்த மாணவச் செல்வங்களை உருவாக்கி வருகிறோம். வாய்ப்பு இருப்பின் தாங்கள் எங்கள் மாணவர்களின் கற்றல் திறனை ஆய்வு செய்யவும், அறிவுரை வழங்கவும் எங்கள் பள்ளிக்கு வருகை தருமாறு ஆசிரியர்கள் சார்பாகவும், பள்ளி மேலாண்மைக் குழுவின் சார்பாகவும் பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.