நம்ம ஊரு விவசாயம் - Namma Ooru Vivasayam

நம்ம ஊரு விவசாயம் - Namma Ooru Vivasayam

Share

விவசாயத்தை வளர்ப்போம்!
தேசத்தை காப்போம்

30/08/2023

ஒரு மாதம் ஆன நாட்டுக்கோழி குஞ்சு விற்பனைக்கு உள்ளது... விலை ₹90 ரூபாய் தொடர்புக்கு: 8883939399
இடம்: கொட்டாம்பட்டி,மதுரை மாவட்டம்

தமிழ்நாடு முழுவதும் டெலிவரி வசதி உள்ளது. குறைந்தது 100 எண்ணிக்கை வாங்க வேண்டும்...

#short #shortvideo #status #countrychickencurry #countryfarmss #poultry #youtube #instagram 30/08/2023

ஒரு மாதம் ஆன நாட்டுக்கோழி குஞ்சு விற்பனைக்கு உள்ளது... விலை ₹90 ரூபாய் தொடர்புக்கு: 8883939399
இடம்: கொட்டாம்பட்டி,மதுரை மாவட்டம்

தமிழ்நாடு முழுவதும் டெலிவரி வசதி உள்ளது. குறைந்தது 100 எண்ணிக்கை வாங்க வேண்டும்...

#short #shortvideo #status #countrychickencurry #countryfarmss #poultry #youtube #instagram ஒரு மாதம் ஆன நாட்டுக்கோழி குஞ்சு விற்பனைக்கு உள்ளது... விலை ₹90 ரூபாய் தொடர்புக்கு: 8883939399இடம்: கொட்டாம்பட்டி,மதுரை .....

Photos 22/05/2017

#இயற்கை_விவசாயிகள்_நேரடி_விற்பனை_நிலையம்_அமைக்க_விருப்பம்_உள்ளவர்கள்_தேவை...

இயற்கை விவசாயிகளா ஒருங்கிணைந்து நஞ்சில்லாத உணவுப்பொருட்களை நுகர்வோருக்கு நேரடியாக விற்பனை செய்யும் முயற்சியில், #தமிழக_பாரம்பரிய_விவசாயிகள்_பாதுகாப்பு_சங்கம் மற்றும் #ஐந்திணை_வேளாண்_கல்வி_மற்றும்_ஆராய்ச்சி_அறக்கட்டளை இணைந்து துவங்க இருக்கும். இயற்கை விவசாயிகள் தற்சார்பு முறையில் விளைவிக்கும் பொருட்களை நேரடியாக நுகர்வோருக்கு விற்பனை செய்ய தமிழகம் முழுவதும் பகுதி வாரியாக மற்றும் (அப்பார்ட்மென்ட்) குடியிருப்பு பகுதிகளில் சிறியமுதலீட்டில் அனைத்து உணவுப்பொருட்களும் விற்பனை செய்வதற்கு, விருப்பம் உள்ளவர்கள் தேவை...
பொருட்கள் விபரம்: காயிகறி வகைகள் (மலைக்காய்கறிகளும்) பழங்கள், நாட்டு மாட்டு பால், அரிசி, பருப்பு வகைகள், சிறுதானியங்கள், மரசெக் எண்ணெய்கள், தேங்காய் மற்றும் இதுபோன்ற வேளாண் உணவுப் பொருட்கள்...

விருப்பம் உள்ளவர்கள் தொலைபேசி எண்ணில் மட்டும் தொடர்பு கொள்ளவும் No Comment = Only Cell This Number 8883939399

மேலூர் அருண்
தமிழகபாரம்பரிய விவசாயிகள் பாதுகாப்பு சங்கம்
Cell:8883939399

Photos 13/05/2017

#இயற்கை_விவசாயிகள்_நேரடி_விற்பனை_நிலையம்_அமைக்க_விருப்பம்_உள்ளவர்கள்_தேவை...

இயற்கை விவசாயிகளா ஒருங்கிணைந்து நஞ்சில்லாத உணவுப்பொருட்களை நுகர்வோருக்கு நேரடியாக விற்பனை செய்யும் முயற்சியில், #தமிழக_பாரம்பரிய_விவசாயிகள்_பாதுகாப்பு_சங்கம் மற்றும் #ஐந்திணை_வேளாண்_கல்வி_மற்றும்_ஆராய்ச்சி_அறக்கட்டளை இணைந்து துவங்க இருக்கும். இயற்கை விவசாயிகள் தற்சார்பு முறையில் விளைவிக்கும் பொருட்களை நேரடியாக நுகர்வோருக்கு விற்பனை செய்ய தமிழகம் முழுவதும் பகுதி வாரியாக மற்றும் (அப்பார்ட்மென்ட்) குடியிருப்பு பகுதிகளில் சிறியமுதலீட்டில் அனைத்து உணவுப்பொருட்களும் விற்பனை செய்வதற்கு, விருப்பம் உள்ளவர்கள் தேவை...
பொருட்கள் விபரம்: காயிகறி வகைகள் (மலைக்காய்கறிகளும்) பழங்கள், நாட்டு மாட்டு பால், அரிசி, பருப்பு வகைகள், சிறுதானியங்கள், மரசெக் எண்ணெய்கள், தேங்காய் மற்றும் இதுபோன்ற வேளாண் உணவுப் பொருட்கள்...

விருப்பம் உள்ளவர்கள் உங்கள் பெயர் ஊர் மாவட்டம் மற்றும் தொலைபேசி எண் ஆகிய விபரங்களை வாட்ஸ்அப் 8883939399 எண்ணில் பதிவு செய்யவும் தொடர்புக்கு...

மேலூர் அருண்
தமிழகபாரம்பரிய விவசாயிகள் பாதுகாப்பு சங்கம்
Cell:8883939399
Whatsapp:8883939399

Profile pictures 06/04/2017
Photos from நம்ம ஊரு விவசாயம் - Namma Ooru Vivasayam's post 04/01/2017

விவசாய,வியாபார பெருமக்களே,அரசு ஊழியர்களே ,அயல்நாட்டில் வாழும் நண்பர்களே ,தகவல் தொழில்நுட்பத்தில் பணிபுரியும் இளைஞர்களே,

நீங்கள், நமது நாட்டின் சுற்றுசுழல் பாதுகாப்பின் மீது அக்கறை உள்ளவரா ???

உங்கள் வீட்டின் மீதும்&நமது நாட்டின் வரும்கால சந்ததியினர் மீது அக்கறை கொண்டவரா ???

நீங்கள் செய்துகொண்டிருக்கும் பணியை தொடர்ந்துகொண்டே நீங்களும் இயற்கை விவசாயம், மரம் வளர்ப்பு ,கால்நடை வளர்ப்பு என, அது ஒரு சிறிய இடம் என்றாலும் ஏக்கர் கணக்கில் என்றாலும் உங்களுடைய ஆர்வத்தை பொறுத்து ஒருங்கிணைத்த பண்ணையம் அமைத்திடுங்கள் , ஒருங்கிணைந்த பண்ணையம் அமைத்து கூடுதல் வருமானமும் ,மன அமைதியும் ,வருங்கால பண தேவைக்கான சிறந்த பாதுகாப்பான முதலிடகவும் அமைத்து கொள்ளுங்கள்... நாங்கள்

விவசாயம் மற்றும் மர வளர்ப்புக்கு தகுதியானமண்வளம் தண்ணீர் வசதி சாலைவசதி கொண்ட வளமான நிலங்களை தேர்வுசெய்து வாங்கி கொடுத்தல்,இயற்கை விவசாயம் செய்து மேம்படுத்தல் பற்றி தொடர் ஆலோசனை ஒத்துழைப்பு வழங்குதல் ,தோட்டத்தில் மண் பரிசோதனை, தண்ணீர் பரிசோதனை ,பல்வேறு வகையான கல் வேலி முள் வேலி,பல்வேறு வகையான சோலார்வேலி ,பல்வேறு வகையான ரெடிமேட் காம்பௌன்ட் வேலி அமைத்தல்,

பல்வேறு வகையான வேலிஅமைதல்,மின்சார வசதி இல்லாத இடங்களில் கூட சூரிய ஒளி மூலம் இயங்கும் சோலார் பம்ப் செட் அமைத்து தண்ணீர் வசதி ஏற்படுத்தல் ,சோலார் மின் விளக்கு அமைதல்,நிறுவனங்களுக்கு வீடுகளுக்கு சூரிய ஒளி மூலம் மின்வசதி ஏற்படுத்துதல் , ,மேலும் தோட்டத்தில் தண்ணீர் வசதி யை அதிகரிக்கவும் ,சிக்கனமாக பயன்படுத்தகூடிய அனைத்து வசதிகள் பற்றிய ஆலோசனை வழங்குதல் ,மண்ணிற்கு ஏற்ற அனைத்து வகையான வனமரம்,பழ மரங்கள் என கலப்பு மர வளர்ப்பு ,தெளிப்பு நீர் மற்றும் சொட்டு நீர் பாசனம் அமைப்பு,தொலை தூரத்தில் வேறு ஒரு பணியில் இருந்தாலும் அதனையும் செய்து கொண்டு அலைபேசி மூலம் ஆணை இட்டு இயக்கி தானியங்கி கருவிமுலம் தோட்டங்களுக்கு தண்ணீர் வழங்கும் முறை அமைதல்,CCTV அமைப்பு அமைத்து தொலை தூரத்தில் வேறு ஒரு பணியில் இருந்தாலும் அதனையும் செய்து கொண்டு அலைபேசி மூலம் நிறுவனத்தை வீட்டை தோட்டத்தை கண்காணிக்கும் முறை அமைதல்,அனைத்து விதமான விவசாயகருவிகள் மானியத்தில் பெற்று தருதல்,பரண்மேல் ஆடு வளர்ப்பு,தமிழக மற்றும் இந்திய நாட்டு மாடு வளர்ப்பு ,நாட்டுகோழி வளர்ப்பு,மீன் வளர்ப்பு ஆலோசனை வழங்குதல் அமைப்பு ஏற்படுத்துதல்,திவன சாகுபடி பற்றிய ஆலோசனை ,ஊடுபயிர் சாகுபடி ,இயற்கை விவசாயம் செய்ய செய்ய மண்புழு உரம் தயாரிப்பு,பஞ்சகவியா தயாரித்தல் ,இயற்கை பூச்சிவிரட்டி தயாரித்தல் அமைப்பு ஏற்படுத்துதல் பயிற்சி மற்றும் ஆலோசனை வழங்குதல்,பரண்மேல் ஆடு,மாடு மற்றும் கோழி செட் அமைதல் ஆர்வம் உள்ள இளைஞர்களுக்குஎந்நேரமும் இயற்கை விவசாயம் மர வளர்ப்பு ஆலோசனை வழங்குதல் ,தகுதிக்கு ஏற்ப வங்கிகடன் உதவி ஏற்பாடு செய்து தருதல்,மத்திய மாநில அரசுகள் வழங்கும் பல்வேறு வகையான விவசாய மானியம்கள் பெற்று தருதல் என ஒருங்கிணைத்த பண்ணையம் அமைத்திட அணுகவும்...

மேலூர் அருண்
ஐந்திணை வேளாண் கல்வி மற்றும் ஆரய்ச்சி அறக்கட்டளை
Cell:8883939399
Whatsapp Number 8883939399
Email : [email protected]

Mobile uploads 08/07/2015

இந்தியாவிற்கு ராசயன உரம் விற்கும் எந்த நாட்டிற்கும்,...

நம்மால் ராசயன உரத்தால் விளைந்த காய்கறிகளை ஏற்றுமதி செய்திட முடியாது

- நம்மாழ்வார்

Mobile uploads 31/05/2015

கரும்பு நட்டேன் விற்கவில்லை,
கம்பு நட்டேன் விற்கவில்லை,
நெல் நட்டேன் விற்கவில்லை.
கடைசியில்
கல் நட்டேன் விற்றுவிட்டது....

-விவசாயி

Photos from நம்ம ஊரு விவசாயம் - Namma Ooru Vivasayam's post 19/05/2015

ஏக்கருக்கு 2.5 லட்சம்...
இயற்கை மாதுளை தரும் இனிப்பான லாபம்!

'திட்டமிட்டு முறையான தொழில்நுட்பங்களைச் செயல்படுத்தினால், விவசாயம் போல கொட்டிக் கொடுக்கும் தொழில் வேறு எதுவும் இல்லை’ என்பதை நிரூபித்து வருகிற விவசாயிகள் பலர் உண்டு. இப்படிப்பட்டவர்களை 'பசுமை விகடன்’ தொடர்ந்து அடையாளம் காட்டி வருகிறது. இந்த வரிசையில் இணைகிறார்... கேரள மாநிலம், எர்ணாகுளம் பகுதியைச் சேர்ந்த குரியன் ஜோஸ். இவர், இயற்கை முறையில் மாதுளை சாகுபடி செய்து மகத்தான லாபம் ஈட்டி வருகிறார்.
தமிழகத்தின் தேனி மாவட்டம், கூடலூர் அருகேயுள்ள கழுதைமேடு பகுதியில், பொட்டல்காடாக இருந்த நிலத்தை வாங்கி, கடந்த ஐந்து ஆண்டுகளில் கடின உழைப்பின் மூலம் எழில்கொஞ்சும் தோட்டமாக மாற்றியிருக்கிறார், குரியன் ஜோஸ். வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள், தங்களின் பயணத்தினூடே இவருடைய பண்ணையையும் பார்வையிட வருமளவுக்கு, இயற்கை விவசாயத்தை முன்னெடுத்திருக்கிறார்... குரியன்.
தென்மேற்குப் பருவக்காற்று சிலுசிலுக்கும் கூடலூர்-குமுளி தேசிய நெஞ்சாலையில், ஏழாவது கிலோ மீட்டரில் இருக்கிறது, தம்மனம்பட்டி விலக்கு. வலது பக்கம் பிரியும் தார் சாலையில், மூன்றரை கிலோ மீட்டர் தூரம் பயணித்தால் வருகிறது, கழுதைமேடு. சுற்றிலும் மலைகளால் சூழப்பட்ட இயற்கை எழில்கொஞ்சும் பள்ளத்தாக்கு. வேலியில் பச்சைநிற நிழல் வலை சுற்றப்பட்ட 'ஹார்வெஸ்ட் ஃபிரஷ்’ பண்ணை வரவேற்கிறது.

கொஞ்சும் தமிழ் கலந்த மலையாளத்தில் நம்மிடம் பறையத் தொடங்கிய குரியன், ''எர்ணாகுளத்துல எக்ஸ்போர்ட் பிசினஸ் செய்றேன். இருந்தாலும், கிருஷி (விவசாயம்) ஆர்வம் உண்டு. குமுளி, மூணாறுனு கேரளாவை ஒட்டிய பகுதியா இருக்கறதால தேடி அலைஞ்சு இந்த இடத்தை வாங்கினேன். தண்ணிக்கு பஞ்சம் இல்லை. சூழல் அதிகம் மாசுபடாத பகுதி. சுற்றிலும் மலைப்பகுதியா இருக்கறதால பாக்கவே ரம்யமா இருக்கும். அஞ்சு வருஷத்துக்கு முன்ன வாங்கும்போது பொட்டல்வெளி. இன்னிக்கு எப்படி மாறி இருக்குனு பாருங்க.
இந்த இடத்தை வாங்கினதும் இயற்கை விவசாயம்தான்னு முடிவு செஞ்சேன். மொத்தம் இருக்கிறது 35 ஏக்கர். இதுல கிட்டத்தட்ட 30 ஏக்கர்ல 10 ஆயிரம் மாதுளை செடிகள் இருக்கு. இதுல, 7 ஆயிரத்து 500 செடிகள்ல மகசூல் வந்துட்டு இருக்கு. ரெண்டு ஏக்கர்ல பப்பாளி இருக்கு. மத்த இடங்கள்ல பண்ணைக் குட்டை, மாட்டுக் கொட்டகை, பேக்கிங் ரூம், பணியாளர் குடியிருப்பு, பண்ணை வீடு, பறவைகளுக்கான கொட்டகை கள் இருக்கு. இதை முழுமையான ஒருங்கிணைந்தப் பண்ணையா வடிவமைச்சிருக் கோம்'' என்றபடி, மாதுளைத் தோட்டத்துக்குள் அழைத்துச் சென்றார்.

''முழுக்க இயற்கை முறையிலதான் விளைவிக்கிறேன். அதனால, பழம் வெடிச்சு கீழே விழுந்துடுது. காய்களோட தோல் சொறிசொறியா இருக்கு. நம்ம ஆளுங்க கடைக்கு போனதும் 'பளபள’னு இருக்கற பழங்களைத்தான் முதல்ல எடுக்குறாங்க. ஆனா, அது ரசாயனத்துல விளைஞ்சதுங்கிறதை யோசிக்கறதில்ல. எங்க பழங்களை ஆரம்பத்துல வாங்கத் தயங்கினவங்க, உறிச்சுப் பாத்தவுடனே ஆச்சர்யமாகிடுவாங்க. அவ்வளவு தெளிவா, அழகான முத்துக்களோட ரத்தச் சிவப்புல இருக்கும். ருசியும் பிரமாதமா இருக்கும். இதைத் தெரிஞ்சுகிட்ட பிறகு, இப்ப கேரளாவுல இருக்கற கடைகள்ல எங்க பழத்துக்கு தனி கிராக்கி ஏற்பட்டுப் போச்சு. வெளிநாட்டு ஆர்டரும் கிடைச்சிருக்கு'' என்ற குரியன், ஒரு பழத்தைப் பறித்து உடைத்து காண்பித்தார். ரத்தச் சிவப்பில் சிரித்தன, மாதுளை முத்துக்கள். எடுத்து வாயில் போட்டவுடன், அசரடித்தது சுவை.
தொடர்ந்தவர், ''இந்த ரகத்துக்கு பேரு பக்வா. 12 அடிக்கு 10 அடி, 10 அடிக்கு 10 அடினு ஒவ்வொரு பகுதியிலும் வெவ்வேறு இடைவெளியில நடவு செஞ்சிருக்கோம். உலகளவுல இயற்கை முறையில மாதுளை சாகுபடி செய்ற நுட்பங்களை இன்டர்நெட் மூலமாகவும், சில வேளாண் அறிஞர்கள், ஆலோசகர்கள் மூலமாகவும் தெரிஞ்சுக்கிட்டு செயல்படுத்துறோம். மாதுளை ஒரு மென்மையான பயிர். இதை, கைக்குழந்தையைப் பராமரிப்பது போல பராமரிக்கணும். மாதுளை விவசாயத்தோட வெற்றி, தோல்வி ரெண்டுமே பராமரிப்புலதான் அடங்கியிருக்கு.

'மாதுளையை வெச்சேன்... மகசூல் கிடைக்கல’னு புலம்புறவங்களைப் பாத்திருக்கேன். தண்ணி பாய்ச்சி, உரம் வெச்சா மட்டும் போதாது. எதிர்பார்த்தபடி பழம் கிடைக்கணும்னா... ஒவ்வொரு கட்டத்துலயும் அதுக்கு செய்ய வேண்டிய சாகுபடி முறைகளை, தொழில்நுட்பங்களைத் தெளிவா தெரிஞ்சுக்கிட்டு செய்யணும். நான் அதை சரியா செய்றதால உழைப்புக்கு ஏத்த ஊதியம் கிடைக்குது. ஒரு செடிக்கு வருஷத்துக்கு 200 ரூபாய் செலவாகுது. ஒரு செடியில இருந்து 10 கிலோ பழம் கிடைக்குது. ஒரு கிலோ சராசரியா 120 ரூபாய் வீதம், பத்து கிலோவுக்கு 1,200 ரூபாய் கிடைக்கும். செலவு 200 ரூபாய் போக, ஒரு செடி மூலமா வருஷத்துக்கு 1,000 ரூபாய் லாபம். 7 ஆயிரத்து 500 செடி மூலமா 75 லட்ச ரூபாய் லாபமா கிடைக்குது. ஏக்கருக்கு சராசரியா 2.5 லட்சத்துக்குக் குறையாம லாபம் வருகிறது'' என்று லாப கணக்குச் சொல்லி மகிழ வைத்தார், குரியன் ஜோஸ்.

பண்ணையை முழுக்கப் பராமரிப்பவர், அதன் மேலாளர் ஜான் தாமஸ். அவரிடம் பேச்சுக் கொடுத்தபோது, ''எங்க பண்ணையில கேரளாவோட பாரம்பரிய ரகமான காசர்கோடு குட்டை, தமிழ்நாட்டோட பாரம்பரிய மாடான காங்கேயம்னு நாட்டு மாடுங்க பத்து இருக்கு. இந்த மாடுகளோட சிறுநீர், சாணத்தை வெச்சி ஜீவாமிர்தத்தை நாங்களே தயாரிச்சுக்கிறோம். பண்ணைக் கழிவுகள், தென்னை நார்க் கழிவை வெச்சி கம்போஸ்ட் தயாரிக்குறோம். மாட்டுச் சாணத்தைப் பயன்படுத்தி சமையல் எரிவாயு உற்பத்தி செய்றோம். எல்லா மரங்களுக்கும் மூடாக்கு போட்டிருக்கோம். தொழுவுரத் தையும், உயிரிப் பூச்சி கொல்லியையும் வெளியில இருந்து வாங்கிக்குவோம். அதனால சாகுபடிச் செலவு குறையுது. எங்க பண்ணைக்கு ஆர்கானிக் சான்றிதழும் இருக்கு'' என்ற ஜான் தாமஸ், மாதுளை சாகுபடி முறைகளைச் சொன்னார். அது இங்கே பாடமாக விரிகிறது.

'மாதுளை, களிமண்ணைத் தவிர அனைத்து மண்ணிலும் வளரும். 10 அடிக்கு 10 அடி இடைவெளியில் நடுவது சிறந்த முறை. 2 அடி சதுரம், 2 அடி ஆழத்துக்குக் குழியெடுத்து ஆறவைத்து... ஒவ்வொரு குழியிலும், 10 கிலோ தொழுவுரம், 5 கிலோ மண்புழு உரம் போட்டு செடியை நடவு செய்ய வேண்டும். மூன்று மாதங்களுக்கு ஒரு முறை, ஒவ்வொரு செடிக்கும் 5 கிலோ மண்புழு உரம் வைத்து வரவேண்டும். மூன்றாம் மாதத்தில் இருந்து, வாரம் ஒரு முறை சொட்டு நீர்ப் பாசனத்துடன், ஏக்கருக்கு 200 லிட்டர் ஜீவாமிர்தக் கரைசலைக் கலந்து கொடுக்க வேண்டும். ஆறு மாதங்களில் செடிகளில் பூ எடுக்கத் தொடங்கும். ஆனால், அந்தப் பூக்களை உதிர்த்துவிட வேண்டும். குறைந்தது 24 மாதங்கள் முடிந்த பிறகே, காய்ப்புக்குவிட வேண்டும். அதற்கு முன்பாக காய்க்கவிட்டால், செடியின் வளர்ச்சி தடைபடும். ஆறாவது மாதம் செடியில் அதிகக் கிளைகள் இருக்கும். இந்தச் சமயத்தில், நன்கு தடிப்பான, வாளிப்பான நான்கு கிளைகளை மட்டும் வைத்துக்கொண்டு, மற்றவற்றைக் கவாத்து செய்ய (கழித்துவிட) வேண்டும். செடிகள் காய்க்க ஆரம்பிக்கும் வரை, ஆறு மாதங்களுக்கு ஒரு தடவை கவாத்து செய்ய வேண்டும். காய்க்க ஆரம்பித்த பிறகு, ஆண்டுக்கு ஒரு முறை கவாத்து செய்தால் போதுமானது.
ஒரு மாதம் ஒய்வு!
பூக்க ஆரம்பித்ததில் இருந்து, 160 முதல் 180 நாட்கள் கழித்துதான் பழத்தை அறுவடை செய்ய முடியும். ஒவ்வோர் ஆண்டும் செடிகளுக்கு ஓய்வுகொடுக்க வேண்டும். டிசம்பர் மாதத்தில் தண்ணீர் கொடுக்காமல், செடியை வாட விட வேண்டும். ஒரு மாதம் தண்ணீர் இல்லாமல் காய்ந்து போன நிலையில் இருக்கும்போது... ஜனவரி மாதம் தண்ணீரைக் கொடுக்க வேண்டும். இப்படி வாடவிட்டு தண்ணீர் கொடுப்பதால், செடியில் அதிக பூக்கள் பூத்து, நல்ல மகசூல் கிடைக்கும். ஜனவரி மாதத்தில் தண்ணீர் கொடுத்த பிறகு, பூக்கும் பூக்கள் காயாக மாறி, ஜூலை மாதத்தில் அறுவடைக்கு வரும். அதிலிருந்து, நவம்பர் மாதக் கடைசி வரை அறுவடை செய்யலாம். பிறகு ஓய்வு கொடுத்துவிட வேண்டும்.

மாதுளையை அதிகம் தாக்குவது, பழ ஈக்கள் மற்றும் சில பாக்டீரியாக்கள்தான். இதற்கு பயோ மருந்து அல்லது மூலிகைப் பூச்சிவிரட்டி தெளித்துக் கட்டுப்படுத்தலாம். சோலார் விளக்குப் பொறிகள், மஞ்சள் ஒட்டு அட்டைகள் வைத்தும் பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம். பழங்களில் சில நேரங்களில் கருப்புநிறத் துளைகள் இருக்கும். ''ஃப்ரூட் போரல்’ எனப்படும் இத்தாக்குதலைச் சமாளிக்க, 200 லிட்டர் தண்ணீரில், தலா 500 கிராம் டிரைக்கோ-டெர்மா விர்டி, சூடோமோனஸ் ஆகியவற்றைக் கலந்து தெளிக்கலாம்'' என்றார், ஜான் தாமஸ்.
பண்ணைச் சுற்றுலா!
தான் மட்டும் இயற்கை விவசாயம் செய்தால் போதாது. இந்தப் பகுதி விவசாயிகள் மற்றும் அனைத்து விவசாயிகளையும் இயற்கை விவசாயத்துக்கு மாற்ற வேண்டும். இயற்கை விளைபொருட்களின் அருமையை நுகர்வோர்கள் உணர்ந்துகொள்ளச் செய்ய வேண்டும் என்பது குரியனின் நோக்கம். இதற்காக, 'இயற்கை விவசாயப் பண்ணைச் சுற்றுலா’ திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறார். யார் வேண்டுமானாலும், இந்தப் பண்ணையில் வந்து தங்கி, தோட்டத்தில் பழங்களைப் பறித்து ருசித்துச் செல்லலாம். குழந்தைகளுக்கு இயற்கையுடனான பிணைப்பை ஏற்படுத்தலாம். மாட்டுவண்டி மூலமாக, இந்தப் பள்ளத்தாக்குப் பகுதியை சுற்றிவரலாம் என்பதற்காக, மதிய உணவு, மாட்டு வண்டிப் பயணம், பண்ணை வீடு என அனைத்தையும் ஏற்பாடு செய்திருக்கிறார். இதற்காகக் குறைந்த கட்டணத்தையே வசூல் செய்கிறார். வெளிநாட்டினர் பலரும் இதற்காகவே இங்கே ஆர்வத்துடன் வருகிறார்களாம், இயற்கை விவசாயத்தின் அருமையை உணர்ந்த வர்களாக!

தொடர்புக்கு,
குரியன் ஜோஸ்,
செல்போன்: 093886-10249,
ஜான் தாமஸ் (மேலாளர்),
செல்போன்: 95780-72722

Mobile uploads 19/05/2015

வறட்சிக்குப் பெயர் பெற்ற ராமநாதபுரம் மாவட்டத்தில் பழத்தோட்டம்: வளமான பூமியாக மாற்றிய பஞ்சாப் விவசாயிகள்

வானம் பார்த்த பூமியான ராமநாத புரம் மாவட்டத்தில் பழத்தோட் டங்கள் அமைத்து வளமான பூமி யாக மாற்றி நல்ல விளைச்சல் கண்டுள்ளனர் பஞ்சாப் விவசாயி கள்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டத்தில் உள்ளது லாந்தை ஊராட்சி. ராமநாதபுரத்தில் இருந்து பார்த்திபனூர் சென்று, அங்கிருந்து அபிராமம் என மாறிமாறி பேருந்து பயணம். அபிராமத்தில் இருந்து லாந்தை கிராமத்துக்கு பேருந்து கள் இல்லாததால் ஷேர் ஆட்டோ வில் சாலையின் இருபுறமும் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை சீமை கருவேலம் மரங்கள் சூழ்ந் திருப்பதை பார்த்தவாறு, லாந்தை ஊராட்சியை நெருங்கியதும் முற்றிலும் புதிய உலகில் நுழைந் ததைப்போல வரவேற்கிறது பஞ்சாப் விவசாயிகளின் அகல் சேவா பழத்தோட்டம்.

பழத்தோட்டத்தில் நுழைந்ததும் 66 வயதான சரப்ஜி சிங் கையில் இருந்த மண்வெட்டியை முந்திரி மரம் அருகே வைத்துவிட்டு அழகிய தமிழில் வணக்கம் கூறி வரவேற் றார். `ரொம்ப தூரத்தில் இருந்து வந்திருக்க... தாகமாக இருக்கும்… முதலில் தோட்டத்து முந்திரி பழம் சாப்பிடு... பொறுமையாக பேசுவோம்’ என்று உபசரித்துவிட்டு பேசத் தொடங்கினார்.

`மொத்தம் 300 ஏக்கர் நிலம். இதில் பஞ்சாபை சேர்ந்த 20 பேர் விவசாயம் செய்றோம். மாம்பழம், பலாப்பழம், கொய்யா, நெல்லி, சப்போட்டா, தென்னை, முந்திரி, சீதா, மாதுளை, எலுமிச்சை, ஈச்சம்பழம், பப்பாளி என இப்பகுதியில் நன்கு வளரக்கூடிய வகைகளை தேர்ந்தெடுத்து, கடந்த 5 ஆண்டுகளாக வளர்த்து வருகி றோம்.

இது தவிர தர்ப்பூசணி, வெள்ளரி எனப் பருவத்துக்கேற்ற தோட்டப் பயிர்களையும் வளர்க்கிறோம் என மூச்சு விடாமல் பேசிக்கொண்டே, தோட்டங்களை சுற்றிக் காட்டினார் சரப்ஜி சிங்.

ஒரு கி.மீ. நடந்த பின்னர், டிராக்டரில் இருந்து இறங்கி வந்து வரவேற்ற 60 வயதான தர்சன் சிங், 'ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இந்த இடத்துக்கு நானும், நண்பர் மன்மோகன் சிங்கும் முதலில் வந்தோம். இந்த இடம் முழுவதும் கருவேலம் மரங்களாக அப்போது இருந்தது. ஜே.சி.பி. இயந்திரம் மூலம் சுத்தம் செய்யவே 3 மாதம் ஆயிடுச்சு. ஆரம்பத்தில் உள்ளூர் கிராம மக்கள் கருவேல மரங்களை அகற்றி விட்டு சிங்குகள் என்ன செய்யப் போறாங்கன்னு கேலியாக பேசினர்.

கொஞ்சம் கொஞ்சமா மரங்கள் வளர ஆரம்பிச்சு போன வருஷம் மாம்பழம் 6 டன், கொய்யா 3 டன், பப்பாளி, பலாப்பழம், முந்திரி ஆகியவை 5 டன் என்று உற்பத்தி செய்த பழங்களை ஏற்றுமதி செய்தோம்.

பின்பு உள்ளூர் கிராம மக்கள் தங்களோட நிலங்களில் உளுந்து, மிளகாய், கடலைன்னு நம்பிக்கை யோட விவசாயம் செய்ய ஆரம் பிச்சிருக்காங்க. இப்ப எங்கள் தோட்டத்தில் பத்து உள்ளூர் விவசாயிகளுக்கும் வேலை கொடுத் திருக்கிறோம்’ என்றார்.

பஞ்சாப் விவசாயத்துக்கு பெயர் பெற்ற மாநிலம். இருந்தும் தமிழகத் தில் மிகவும் வறட்சியான ராமநாதபு ரத்தை ஏன் தேர்ந்தெடுத்தீர்கள் எனக் கேட்டதற்கு தர்சன் சிங் மீண்டும் பேசத் தொடங்கினார்.

பஞ்சாபில் ஒரு ஏக்கர் விவ சாய நிலம் குறைந்தது ரூ. 20 லட் சத்தில் இருந்து ஆரம்பிக்கும். இங்கே அதே விலையில் 10 ஏக்கர் நிலம் வாங்க முடியும். பழத்தோட்டத்துக்கு தேவையான தண்ணீரை கிணறுகள் அமைத்து, அதில் இருந்து சொட்டுநீர் பாசன முறைகளை பயன்படுத்துறோம். கிடைக்கும் மழை நீரை குளம் அமைத்தும் சேகரித்துக் கொள் வோம். மண்ணில் வறட்சி என்று எதுவும் கிடையாது. பாலைவன மாகவே இருந்தாலும் அங்கேயும் சில தாவரங்களும், மரங்களும் வளரும். வறட்சி நம் மனதில்தான் இருக்கக்கூடாது என அர்த்தமாய் சிரித்தார் தர்சன் சிங்.

Want your school to be the top-listed School/college in Madurai?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address

Madurai