MLWA Hr Sec School, Madurai

MLWA Hr Sec School, Madurai

Share

Run by KSR Education Charity Trust. Most Awarded and 8 Years Consecutive Centum resulted School.

14/05/2026
Photos from MLWA Hr Sec School, Madurai's post 09/05/2026

மதுரை மீனாட்சியம்மன் திருக்கல்யாணத்தை முன்னிட்டு ….
இன்று (28.04.2026) நமது பள்ளியில் காலை 9:30 மணியளவில் பள்ளி நிர்வாகத்தின் சார்பாக பொதுமக்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது

Photos from MLWA Hr Sec School, Madurai's post 09/05/2026

நேற்றைய தினம் (25.04.2026) நம் பள்ளியின் முன்னால் மாணவர் திரு.விஸ்வநாதன் அவர்கள் UK விலிருந்து இந்தியா வந்து நம் பள்ளியை பார்வையிட்டு வியந்து வாழ்த்திய தருணம்

Photos from MLWA Hr Sec School, Madurai's post 09/05/2026

இன்று (17.04.2026) ஆசிரியர்கள் கூட்டம் நடைபெற்றது

09/05/2026

இன்று 16.04.2026 த. பிரேம குமாரி நினைவு அறக்கட்டளை சார்பாக ...

எதிர்வரும் 2026 -27 ஆம் கல்வி ஆண்டிற்கான நம்பள்ளியில் தேர்ந்தெடுக்கப்பட்ட 25 மாணவர்களுக்கான புத்தாடைகள் வழங்குவதற்காக ரூபாய் 25000 ரொக்க பணம் பள்ளிச் செயலர் அவர்களின் முன்னிலையில் பள்ளி தலைமை ஆசிரியரிடம் வழங்கப்பட்டது

உடன் த. பிரேம குமாரி நினைவு அறக்கட்டளையின் தலைவர் .எஸ் ஈஸ்வரன் அவர்கள் செயலர் .ஆர் உதயகுமார் அவர்கள் மற்றும் பொருளாளர்.எஸ் .கிருஷ்ணமூர்த்தி அவர்கள்

இவர்களுக்கு பள்ளி நிர்வாகம், தலைமை ஆசிரியர், உதவித் தலமை ஆசிரியர்கள், ஆசிரிய பெருமக்கள்,மாணவச் செல்வங்கள் சார்பாக மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றோம்.🙏

Photos from MLWA Hr Sec School, Madurai's post 09/05/2026

இன்று 07.04.2026 MLWA மேல்நிலைப் பள்ளியில், சுமார் 1000 மாணவர்கள் தினமும் சுகாதாரமான, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் அருந்துவதற்காக RO system அமைத்துக் கொடுத்த அம்மையப்பர் ஹோட்டல் உரிமையாளரும், தமிழ் மாநில காங்கிரஸ் மாவட்ட செயலாளருமான உயர்திரு மாணிக்கவாசகம் அவர்கள் முன்னிலையில் மதுரை, அண்ணாநகர், கந்தசாமி கொத்தனார் உயர்நிலைப் பள்ளியின் தாளாளரும், தமிழ் மாநில காங்கிரஸ் மாவட்ட தலைவருமான உயர்திரு K.நடராஜன் அவர்கள் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் திட்டத்தினை தொடங்கி வைத்தார்.

இவர்களுக்கு பள்ளி நிர்வாகம், தலைமை ஆசிரியர், உதவித்தலமை ஆசிரியர்கள், ஆசிரிய பெருமக்கள்,மாணவச் செல்வங்கள் சார்பாக மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றோம்.

Photos from MLWA Hr Sec School, Madurai's post 26/01/2026

மூவர்ணக் கொடி வானிலாட
முன்னோர் தியாகம் நெஞ்சில் கூட
மதங்கள் கடந்த மனித நேயம் மண்ணின் பெருமை பாடும் கீதம் அரசியலமைப்பு சட்டம் தந்த நாள்

26 .1 .26 அன்று 77வது குடியரசு தின விழா MLWA மேல்நிலைப் பள்ளியில் (Run by KSR Education Charity Trust) வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

பள்ளிச் செயலாளர் அவர்கள் உயர்திரு .K.நாகசுப்பிரமணியன். அவர்கள் முன்னிலை வகித்தார்.

வழக்கறிஞர் உயர்திரு .B. கிருபாகர் அவர்கள் தேசியக் கொடியினை ஏற்றி வைத்து மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையினை ஏற்றுக் கொண்டார்.

மாணவர்களுக்கு பயனுள்ள கருத்துக்களையும் வழங்கினார்.

தலைமை ஆசிரியர். உயர்திரு எம்.முத்து செல்வம் அவர்கள் வரவேற்புரை வழங்கினார்.

மேல்நிலை பிரிவு உதவி தலைமை ஆசிரியை திருமதி .கனக லதா . நிகழ்ச்சியினைத் தொகுத்து வழங்கினார்.

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக உயர் திரு.N. சௌந்தர பாண்டியன் அவர்கள் செயல்பட்டார்.

மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது

குடியரசு தின விழாவினை பற்றி மாணவர்கள் உரை நிகழ்த்தினார்.

நன்றி உரையினை B.விஜயலட்சுமி உதவி தலைமை ஆசிரியர் இடைநிலை பிரிவு அவர்கள் வழங்கினார்

நாட்டுப் பண்ணுடன் விழா இனிதே நிறைவு பெற்றது.

Photos from MLWA Hr Sec School, Madurai's post 21/01/2026

காணும் காட்சியாவும் நெஞ்சில் பதிக்கும் கடவுள் தந்த உன்னத ஓவியம் நம் பார்வை
என்பதை நினைவு கூறும் வகையில்

இன்று (21.01.26) MLWA மேல்நிலைப் பள்ளி ( Run by KSR Education Charity Trust ) மற்றும் வாசன் ஐ கேர் மருத்துவமனையும் இணைந்து நம் பள்ளியில் நடத்திய 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கும் & ஆசிரிய பெருமக்களுக்கும் கண் பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது

கண்பார்வையில் குறைபாடுள்ள மாணவர்களுக்கு கண் கண்ணாடிகள் பரிந்துரை செய்யப்பட்டது

நன்றி

Photos from MLWA Hr Sec School, Madurai's post 11/01/2026

கடந்த 09.01.2026 அன்று நம் பள்ளியில் நடைபெற்ற 74 வது ஆண்டு விழாவில்....

2025 - 2026 ஆம் கல்வியாண்டில் Best E - Content Creator award நம் பள்ளி நிர்வாகத்தின் சார்பாக

திரு.சாலை அருள் பாண்டி - தமிழ் ஆசிரியர் (6 - 8 வகுப்பு)

திருமதி.K. உமா மஹேஸ்வரி - அறிவியல் பட்டதாரி ஆசிரியர் (9 - 10 வகுப்பு)

திரு.R.கணேஷ் குப்புசாமி - முதுகலை தாவரவியல் ஆசிரியர் (11 - 12 வகுப்பு)

வழங்கப்பட்டது

Photos from MLWA Hr Sec School, Madurai's post 11/01/2026

MLWA மேல்நிலைப் பள்ளியின் 74 ஆவது ஆண்டு விழா (NEXORA@MLWA2k26) ( 9.01.26) அன்று கொண்டாடப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டத்தின் முதன்மை கல்வி அலுவலராக பணியாற்றி ஓய்வு பெற்ற திரு.வே. திருப்பதி அவர்கள் தலைமையேற்று மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
பள்ளிச் செயலர் உயர்திரு. செயலர்.கி .நாகசுப்ரமணியன் M.sc.,M.phil .M.Ed.,M.L.I.S. அவர்கள் முன்னிலை வகித்தார்.
மதுரை மாவட்டத்தின் மாவட்ட கல்வி அலுவலர் உயர்திரு .U.P செந்தில்குமார்.M.A. B.Ed .M.phil. அவர்கள். மாணவர்களுக்கு சிறப்புரை வழங்கியும், பரிசுகள் அளித்தும் கௌரவப்படுத்தினார்.

சூலம் சுமந்த சிவனும் சிலுவை சுமக்கட்டும்
இயேசுநாதரும் மாதம் இருமுறை ஏகாதசி விரதம் இருக்கட்டும்.
அல்லாவின் பெருமை பற்றி ஆழ்வார்கள் பாடட்டும்
அரியும் அரனும் ஒன்று என்று அப்துல்லா கூறட்டும்.

எம்மதமும் சம்மதமே என்பதனை நிரூபிக்கும் வகையில் சிறப்பு விருந்தினர்கள் அனைவரையும் மாணவர்கள், இந்து கிறிஸ்தவம் முஸ்லிம் மும் மதத்தை உணர்த்தும் வேடமணிந்து வரவேற்றது மிக அருமையாக இருந்தது.

இவ்வாண்டின் ஆண்டறிக்கையினை எம் பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு.மு. முத்துச்செல்வம்
M.sc.M com.,M.Ed.M .phil. D.TEd அவர்கள் சமர்ப்பித்தார்.

நம் பள்ளிக்கான புதியதாக www.mlwahss.com என்ற வலைதளம் தொடங்கப்பட்டது

இனிவரும் காலங்களில் எம் பள்ளிச் செயலர் அவர்களின் அறிவுறுத்தலின்படி எம் பள்ளி வலைதள பக்கத்தில் எம் பள்ளி ஆசிரியர்களால் தயாரிக்கப்படவுள்ள E - கன்டென்ட் (6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை தமிழ் வழி & ஆங்கில வழி) விவரங்கள் பதிவேற்றம் செய்யப்படும்

நிகழ்ச்சியினைத் தொகுத்து நம் பள்ளியின் மேல்நிலை உதவி தலைமை ஆசிரியை திருமதி கு.
கனகலதா. M.A.B.Ed.M.phil அவர்கள் வழங்கினார்கள்.

வரவேற்புரையினை நம் பள்ளியின் உயர்நிலை உதவி தலைமை ஆசிரியர் திரு என். சௌந்தரபாண்டியன் M.A.B.Ed.M.phil அவர்கள் தொகுத்து வழங்கினார்.

மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

மேலும் சிறப்பு விருந்தினர்களுக்கும், கல்வி முகமை உறுப்பினர்களுக்கும் பொன்னாடை அணிவிக்கப்பட்டு, நினைவு பரிசுகளும் வழங்கப்பட்டது.

பத்தாம் வகுப்பிலும் பன்னிரண்டாம் வகுப்பிலும் தங்கள் பாடங்களில் 100% தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டும், பரிசுகளும் வழங்கப்பட்டது.

சிறந்த மாணவர்களுக்கும், NMMS தேர்வில் வெற்றி பெற்ற 5 மாணவர்கள், சென்ற கல்வி ஆண்டில் ஆண்டு பொதுத் தேர்வில் முதல் 3 மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்ட து.

ஆறு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பள்ளியிலும் மாணவர்களில் சிறந்த நன் மாணக்கர்களுக்கான விருதுகளும் அளிக்கப்பட்டது.

பள்ளியின் இடைநிலை உதவி தலைமை ஆசிரியை திருமதி பி. விஜயலட்சுமி.M Sc.,MEd, Mphil
அவர்கள் நன்றியுரை வழங்கினார்.

நாட்டு பண்ணுடன் விழா இனிதே நிறைவு பெற்றது. நன்றி

Want your school to be the top-listed School/college in Madurai?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address

9, Raja Mill Road, Maninagaram
Madurai
625001

Opening Hours

Monday 8am - 6pm
Tuesday 8am - 6pm
Wednesday 8am - 6pm
Thursday 8am - 6pm
Friday 8am - 6pm
Saturday 8am - 6pm