14/07/2020
முதல்வன் !
************
நமது கல்வி மையத்தின் வேண்டுகோளை ஏற்று
மதுரை மாவட்டம், பேரையூர் வட்டம், சேடபட்டி ஒன்றியம், வண்டப்புலி ஊராட்சியை சேர்ந்த திருமாணிக்கம் காமாட்சி அம்மன் கோவிலை குலதெய்வமாகக் கொண்ட
திரு வரதராஜ்அகமுடையார் மாரியம்மாள் இணையரின் புதல்வன் செல்வன் அருண்குமார் தனது பழைய எட்டாம் வகுப்பு புத்தகங்களை முதல் ஆளாக பரிசாக அளித்துள்ளார் !
மையத்தின் சார்பாக உறவினர்
திரு போடி செல்லப்பன் அவர்கள் பெற்றுக் கொண்டார் !
மருதரசர்களின் திருப்பெயரால் வாழ்த்துக்கள் தம்பி !
23/06/2020
உறவுகளுக்கு ஓர் அன்பு வேண்டுகோள் !
நமது கல்வி மையத்தில் நடைபெறும் TNPSC தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்பில் பயிலும் மாணவர்களுக்கு,
ஆறாம் வகுப்பிலிருந்து பனிரெண்டாம் வகுப்பு வரை உள்ள அரசுப் பள்ளி பாடங்களே பாட திட்டத்தில் உள்ளதால்,
நமது குழந்தைச் செல்வங்கள் கடந்தாண்டு படித்த பழைய புத்தங்கங்களை(தமிழ் மற்றும் ஆங்கில வழி )நமது கல்வி மையத்திற்கு கொடுத்து உதவுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம் !
மதுரை சுற்று வட்டார உறவுகள் அழைத்தால் நேரில் வந்து பெற்று கொள்கிறோம் !
தொடர்பு எண்கள்
98947 21741
96592 61272
நன்றி
28/04/2020
இன்று பிறந்தநாள் காணும் நமது கல்வி மைய ஆசிரியர் திரு ஈஸ்வரன் என்ற முனீஸ்வரன் அவர்களுக்கு மருதரசர்களின் திருப்பெயரால் நல்வாழ்த்துக்கள் !
11/04/2020
25 பேருக்கு மட்டும் 12000 to 18000 ரூபாய் மாத வருமானத்துடன் நிரந்திர உறுதி செய்யப்பட்ட வேலை வாய்ப்புகள் இறகுகளால் உருவாக்கப்பட்டுள்ளன. விருப்பமுள்ளவர்கள் [email protected]ற்கு இமெயில் அனுப்பவும். 7868087337 க்கு வாட்ஸ்அப் செய்யவும்.
29/03/2020
ஊடரங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், பலர் தங்களின் தேவைகளுக்காக வெளியே செல்லும்போது, காவல் துறையினர் மற்றும் வருவாய்த் துறையினரின் கெடுபிடிகளுக்கு ஆளாகும் சூழல் ஏற்படுகிறது. இதை உணர்ந்த கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் கிரண்குராலா, அத்தியாவசியத் தேவைகளுக்காக வீட்டிலிருந்தபடியே வெளியே செல்வோருக்கு ஈ-பாஸ் முறையில் அனுமதி வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார்.
அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் அத்தியாவசியத் தேவைகளுக்காக வெளியே செல்லவேண்டிய கட்டாயம் ஏற்படும் பட்சத்தில், https://epasskki.in/ என்ற இணைய முகவரியை தங்களது ஆண்ட்ராய்டு போனில் டைப் செய்து, அதில் தங்களது செல்போன் எண்ணை டைப் செய்தால், ஓடிபி எனும் ரகசியக் குறியீட்டு எண் கிடைக்கும்.
அதைச் சரிபார்த்த பின், எந்தத் துறை, என்ன தேவைக்காக, எங்கு செல்லவேண்டும், விண்ணப்பதாரரின் பெயர், வெளியே செல்வதற்கான ஏதேனும் ஆவணம் இருப்பின் அதன் எண், எங்கிருந்து எங்கு செல்லவேண்டும், எந்த வகையான வாகனம், வாகனப் பதிவெண், அலுவலக போன் எண், மற்றும் விலாசம் ஆகியவற்றை ஆன்லைன் விண்ணப்பத்தில் பூர்த்தி செய்து அனுப்பிய பின், மீண்டும் ஒரு குறுஞ்செய்தி வரும். அந்த குறுஞ்செய்தியில் விண்ணப்பதாரரின் விண்ணப்பம் அலுவலர்களால் பரிசீலிக்கப்படுகிறது. எனவே விண்ணப்பத்தில் தெரிவிக்கப்பட்ட ஆவணங்களுடன் நீங்கள் பயணிக்கத் தயாராக இருக்கும்படி குறிப்பிடப்பட்டிருக்கும்.
அதையடுத்து அலுவலர்களால் பரிசீலிக்கப்பட்டு, செல்போனிற்கு மீண்டும் அனுமதி ஒப்பம் கிடைத்தவுடன் அதைக் கொண்டு, அவர்கள் பயணிக்கும் வகையில் செயலி உருவாக்கப்பட்டுள்ளது
28/03/2020
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நிதியுதவி செய்யுங்கள் என்று இந்திய பிரதமர் மோடி வேண்டுகோள் வைத்திருக்கிறார்...
உதவ விரும்புபவர்கள்,
#தமிழ்நாடு #முதலமைச்சர் #நிவாரண_நிதி கணக்குக்கு அனுப்புங்கள்...
தமிழ்நாட்டு மக்களின் நிதியுதவி,
தமிழ்நாட்டு மக்களுக்கு பயன்படட்டும்...
28/03/2020
சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவுகள்
27/03/2020
நெல்லை வாசிகள் கவனத்திற்கு....