07/03/2026
வாழ்த்துகள்🌹
காரமடை வித்யா விகாஸ் பள்ளியில் படித்த மாணவி குடிமை தேர்வில் வெற்றி😍
அன்னுார் விவசாயி மகள் யு.பி.எஸ்.சி., தேர்வில் அசத்தல்👍
யு.பி.எஸ்.சி., தேர்வில் அன்னுார் விவசாயி மகள் தேசிய அளவில் 448வது இடம் பிடித்துள்ளார்.
கோவை அன்னூர் அருகே கீழ்கதவுகரை, கோழிப்பண்ணை தோட்ட விவசாயி சந்திரசேகர், மோதிலா தம்பதியின் இளைய மகள் சத்திய பிரியா. இவர் அன்னுாரில் செயின்ட் மேரிஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு வரையும் பின்னர் காரமடை வித்ய விகாஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 வரையும் படித்துள்ளார்.
திருச்சியில் உள்ள அன்பில்தர்மலிங்கம் வேளாண் கல்லுாரியில் 2019 முதல் 2023 வரை பி.எஸ்.சி., (வேளாண்மை) படித்துள்ளார். சென்னை, அண்ணா நகரில் உள்ள அறம் ஐ.ஏ.எஸ்., அகாடமியில் கடந்த ஒன்றரை ஆண்டாக பயிற்சி பெற்றுள்ளார்.
சத்திய பிரியா கூறுகையில், "முதல் நிலை தேர்வு இரண்டு முறை எழுதினேன். மெயின் தேர்வு மற்றும் நேர்காணல் முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றுள்ளேன். அகாடமியில் ஏராளமான மாதிரி தேர்வுகளை நடத்தினர். செய்தித்தாள்கள் மற்றும் என்.சி.இ.ஆர்.டி., புத்தகங்கள் தேர்ச்சிக்கு உதவின," என்றார்.
📍 Karamadai, Coimbatore
📞 94877 21999 | 94885 13699
🌐 www.vvinscbse.ac.in