Dr. ZAKIR HUSAIN COLLEGE, ILAYANGUDI

Dr. ZAKIR HUSAIN COLLEGE, ILAYANGUDI This is the Official Face Book Page of Dr.Zakir Husain College, Ilayangudi - 630 702. Janab. They found it difficult in getting the desired courses also. Ms. M.

There is a Chinese proverb which states, “If you plan for a year, sow the seed; If you plan for a decade, plant a tree and If you plan for a century, educate the people”. The founder members of this institution had this noble ideal in mind when they started this college. It is said that when a person crosses a river, he ought not to forget that he has left the other bank behind. This college has s

een the light of the day due to the Herculean efforts of some of the elders of Ilayangudi. Ameen Nainar Howth sounded the idea of establishing an Arts and Science College in Ilayangudi. The unique feature of this college was that unlike other colleges, this College was not started by any single rich man or business people. Rather, this college was started by the ordinary citizens who have the thirst to start an educational institution for higher education in their locality. A membership fee of Rs.11/- each was collected and every citizen of Ilayangudi has contributed for the emergence of the College. (At present, the membership fee was increased to Rs.3000 and today there are 550 members in the College Society). The yearning for a college in this area arose in the minds of the elders of Ilayangudi, when they had bitter experience in admitting their wards to colleges situated at far off places. Before the inception of the college in 1970, the people of Ilayangudi had to depend on Colleges at far off places like Jamal Mohamed College, Trichy, New College, Madras, or colleges at Madurai. The colleges in Sivagangai, Karaikudi and Ramanathapuram were not convenient for them due to some reasons or other. The position of the people in the interior villages was pathetic. Therefore, with the main objective of providing facility for higher education in Ilayangudi, this College was named after the great educationist, a devout scholar and the III President of India, Dr. Zakir Husain, in 1970. Ours is the 10th College started in Tamil Nadu by the efforts mostly of the Muslims of Tamil Nadu. Of the other nine, three are in North Arcot District, two in Chennai, one in Tanjore District, one in Trichy and two in Madurai District. This College has been established and is administered under Article 30 (1) of the Indian Constitution, by the Muslim Minority Community which has invested in them, all the funds required. This College was registered under the Societies Registration Act No.64 / 68. The Govt. of Tamil Nadu has permitted to open the College here vide its G.O. No.450 dt. 23.03.1971. Later it was registered in the name of “The Dr. Zakir Husain College Society” as per S. No. 8 of 1983 under the Societies Registration Act 27 of 1975. On April 28, 1970, His Excellency Sardar Ujjal Singh, Governor of Tamil Nadu, laid the foundation stone of the College building. The function was presided over by Dr. Meenakshi Sundaram, Vice-Chancellor of Madurai Kamaraj University. On July 1, 1970, the College began to function with three sections at the Pre-University level with 173 students. It was on July 5, 1970, the inauguration of the College was formally held. Quide-Millath Alhaj. Mohamed Ismail Shahib, M.P., presided. V.R. Nedunchezhian, Hon’ble Minister for Education, delivered the inaugural address. The first team of Management Committee was headed by Janab. V.K. Ibrahim Ali Ambalam. Without enough money, the college depended entirely on the donations given by philanthropists and people of Ilayangudi living in Chennai and various countries like Singapore, Malaysia, etc., to start the College. In the initial years of establishment of this College, the donations made to the College were made exempt from Indian Income Tax Act, 1961 vide the IT Commissioner’s Order No.C.212 (140) / 70 dt. 16.1.1971. Members were enrolled with Rs.11 each as contribution in 1969. The old students of Ilayangudi Higher Secondary School started ‘Aid College Club’. They staged a drama ‘Vithiyin Vilayattu’, under the auspices of the Old Boys Association of that school. The proceeds of the drama Rs.14500 had been given to the College for putting up cement sheets in the main building. Some philanthropists came forward to donate the land for the buildings and also for the University Endowment.”

The college remembers with pride those who donate in the initial period of establishment of the College with their money, lands and properties.

நம்ம ஊரு சூப்பர் - விழிப்புணர்வு நிகழ்ச்சிகல்லூரி முதல்வர் முனைவர் A. அப்பாஸ் மந்திரி அவர்கள் வழிகாட்டலின் படி, கல்லூரி ...
07/09/2022

நம்ம ஊரு சூப்பர் - விழிப்புணர்வு நிகழ்ச்சி

கல்லூரி முதல்வர் முனைவர் A. அப்பாஸ் மந்திரி அவர்கள் வழிகாட்டலின் படி, கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் மற்றும் இளையான்குடி ஊராட்சி ஒன்றியம் இணைந்து 06/09/2022 அன்று "நம்ம ஊரு சூப்பர்" என்னும் தலைப்பில் சுத்தமான குடிநீர், சுகாதாரம், திடக்கழிவு மேலாண்மை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரி துணைமுதல்வர் முனைவர் A. ஜஹாங்கிர் அவர்கள் தலைமையில் சிவகங்கை வட்டார மண்டல அலுவலர் திரு. R. பவுன்ராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர் திருமதி K. சாந்தி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் திரு. K. முத்துராஜ் ஆகியோர் சிறப்புவிருந்தினர்களாக கலந்துகொண்டு மத்திய, மாநில அரசின் திட்டங்களையும், அதனை கடைபிடிப்பதன் அவசியம் குறித்தும் எடுத்துரைத்தனர். நிகழ்வில் 280 மாணவ-மாணவியர், ஆசிரியர்கள், அலுவலர்கள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாட்டினை நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் முனைவர் S. அஸ்மத்து பாத்திமா, முனைவர் M. பீர் முஹம்மது, முனைவர் A. அப்ரோஸ் மற்றும் முனைவர் M. சேக் அப்துல்லா ஆகியோர் செய்திருந்தனர்.

முதலாமாண்டு வகுப்புகள் துவக்க விழாஇளங்கலை முதலாமாண்டு வகுப்புகள் துவக்க விழா 05/09/2022 அன்று நடைபெற்றது. தமிழ்த்துறை தல...
06/09/2022

முதலாமாண்டு வகுப்புகள் துவக்க விழா

இளங்கலை முதலாமாண்டு வகுப்புகள் துவக்க விழா 05/09/2022 அன்று நடைபெற்றது. தமிழ்த்துறை தலைவர் முனைவர் P. இப்ராஹிம் வரவேற்றார். கல்லூரி ஆட்சிக்குழு செயலர் ஹாஜி V.M. ஜபருல்லாஹ் கான் தலைமையுரையாற்றினார். கல்லூரி முதல்வர் முனைவர் A. அப்பாஸ் மந்திரி அவர்கள் மாணவ-மாணவியருக்கு கல்லூரி விதிமுறைகள் குறித்து எடுத்துரைத்தார். மேலும் கல்லூரியில் மாணவ-மாணவியருக்கு அளிக்கப்படும் திறன்மேம்பாட்டு பயிற்சி குறித்து பேசினார். கல்லூரி ஆட்சிக்குழு உறுப்பினர் ஜனாப் J. அபூபக்கர் சித்திக், சுயநிதி பாடப் பிரிவு இயக்குனர் முனைவர் A. ஷபினுல்லாஹ் கான், டாக்டர் சாகிர் உசேன் கல்வியியல் கல்லூரி முதல்வர் திரு. M.M. முஹம்மது முஸ்தபா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். கல்லூரி உடற்கல்வி இயக்குனர் முனைவர் S. காளிதாசன் உடற்கல்வித்துறையில் மாணவ-மாணவியருக்கு வழங்கப்படும் பயிற்சிகள் குறித்து விளக்கினார். நிகழ்வில் கல்லூரி ஆட்சிக்குழு பொருளாளர் ஜனாப் S.A.M. அப்துல் அஹது, ஆட்சிக்குழு உறுப்பினர்கள் ஜனாப் K.S.H. சிராஜுதீன், ஜனாப் S.K.M. அப்துல் சலீம், ஜனாப் A. உஸ்மான் அலி, முதலாமாண்டு மாணவ-மாணவியர், பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர். இறுதியாக கல்லூரி துணைமுதல்வர் முனைவர் A. ஜஹாங்கிர் நன்றி கூறினார். நிகழ்வினை தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் திரு. K. அப்துல் ரஹீம் ஒருங்கிணைத்தார்.

தென்னிந்திய அளவிலான கால்பந்து போட்டிகள் நிறைவு விழாசிவகங்கை மாவட்டம், இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி இந்திய த...
29/08/2022

தென்னிந்திய அளவிலான கால்பந்து போட்டிகள் நிறைவு விழா

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி இந்திய திருநாட்டின் 75 வது சுதந்திர தின அமுத பெருவிழா (Azadi ka amrit mahotsav) முன்னிட்டு தென்னிந்திய அளவிலான கால்பந்துப்போட்டிகளை 27/08/2022 முதல் 29/08/2022 வரை மூன்று நாட்கள் நடத்தியது. கேரளா, கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டை சார்ந்த 20 அணிகள் இப்போட்டிகளில் பங்கேற்றனர். மழை காரணமாக கல்லூரி மைதானத்தை பயன்படுத்த இயலாத நிலையில் அனைத்து போட்டிகளும், இளையான்குடி, ஸ்டார் முஸ்லீம் கால்பந்தாட்ட மைதானத்தில் நடத்தப்பட்டது.

29/08/2022 அன்று நிறைவு விழாவில் கல்லூரி ஆட்சிக்குழு தலைவர் (பொறுப்பு) மற்றும் பொருளாளர் ஜனாப் S.A.M. அப்துல் அஹது தலைமைவகித்தார். கல்லூரி முதல்வர் முனைவர் A. அப்பாஸ் மந்திரி அவர்கள் வரவேற்றார். கல்லூரி ஆட்சிக்குழு செயலர் ஹாஜி V.M. ஜபருல்லாஹ் கான் தலைமையுரையாற்றினார். சிவகங்கை மாவட்டம், கண்டரமாணிக்கம் கிராமத்தை சார்ந்த முன்னாள் இந்திய கால்பந்தாட்ட வீரர் திரு. இராமன் விஜயன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு விளையாட்டு போட்டிகளை துவக்கிவைத்து, சிறப்புரையாற்றி, வெற்றி பெற்ற அணியினருக்கு வெற்றிக்கோப்பை, சான்றிதழ் மற்றும் ரொக்கப்பரிசுகளை வழங்கினார். இறுதி போட்டிகளில் கேரளா, ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரி அணி முதலிடம் பெற்று 7 அடி வெற்றி கோப்பையையும், ரூ. 25,000/- ரொக்கப்பரிசையும் வென்றனர். கோயம்புத்தூர், இரத்தினம் கல்லூரி அணி இரண்டாம் இடம் பெற்று 6 அடி வெற்றி கோப்பையையும், ரூ. 15,000/- ரொக்கப்பரிசையும் வென்றனர். கேரளா, திரிசூர், MD கல்லூரி அணி 5 அடி வெற்றி கோப்பையுடன், ரூ. 10,000/- ரொக்கப்பரிசு பெற்று மூன்றாம் இடம் பெற்றனர். நான்காம் இடத்தை இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி அணி கைப்பற்றி 4 அடி வெற்றிக்கோப்பையையும், ரூ. 5,000/- ரொக்கப்பரிசையும் பெற்றனர். பரிசளிப்பு விழாவில் சிறந்த வீரருக்கான பரிசை கோயம்புத்தூர், இரத்தினம் கல்லூரி அணி வீரர் முஹம்மது ஷானான் மற்றும் சிறந்த Goal Keeper பரிசை டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி அணி வீரர் ஆல்வின் பெற்றனர். நிகழ்வில் கல்லூரி ஆட்சிக்குழு உறுப்பினர் ஜனாப் J. அபூபக்கர் சித்திக், ஜனாப் K.S.H. சிராஜுதீன், ஜனாப் S.K.M. அப்துல் சலீம், சுயநிதி பாடப்பிரிவு இயக்குனர் முனைவர் A. ஷபினுல்லாஹ் கான், டாக்டர் சாகிர் உசேன் கல்வியியல் கல்லூரி முதல்வர் திரு. M.M. முஹம்மது முஸ்தபா மற்றும் இளையான்குடி, ஸ்டார் முஸ்லீம் கால்பந்தாட்ட குழு தலைவர் ஜனாப் முஹம்மது அலி, செயலாளர் ஜனாப் அப்துல் ரஜாக் மற்றும் நிர்வாகிகள், பேராசிரியர்கள், அலுவலர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர். விளையாட்டு போட்டிகளை கல்லூரி உடற்கல்வி இயக்குனர் முனைவர் S. காளிதாசன், உடற்கல்வி ஆசிரியர்கள் திரு. காஜா நஜிமுதீன், திருமதி N. வெற்றி, திருமதி K. ஜென்சி, திரு. V. கோகுல் ஆகியோருடன் இணைந்து இளையான்குடி, ஸ்டார் முஸ்லீம் கால்பந்தாட்ட குழுவினர் செய்திருந்தனர். போட்டிகளை கால்பந்து ரசிகர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கண்டுகளித்தனர்.

தென்னிந்திய அளவிலான கால்பந்து போட்டிகள் இரண்டாம் நாள்தென்னிந்திய அளவிலான கால்பந்துப்போட்டிகள் இரண்டாம் நாள் 28/08/2022 அ...
28/08/2022

தென்னிந்திய அளவிலான கால்பந்து போட்டிகள் இரண்டாம் நாள்

தென்னிந்திய அளவிலான கால்பந்துப்போட்டிகள் இரண்டாம் நாள் 28/08/2022 அன்று நடைபெற்றது. சிவகங்கை மாவட்ட ஆட்சியர் திரு. P. மதுசூதன ரெட்டி அவர்கள் கலந்துகொண்டு விளையாட்டு போட்டிகளை துவக்கிவைத்தார். கல்லூரி ஆட்சிக்குழு தலைவர் (பொறுப்பு) மற்றும் செயலர் ஜனாப் S.A.M. அப்துல் அஹது, கல்லூரி ஆட்சிக்குழு செயலர் ஹாஜி V.M. ஜபருல்லாஹ் கான், ஆட்சிக்குழு உறுப்பினர் ஜனாப் J. அபூபக்கர் சித்திக், கல்லூரி முதல்வர் முனைவர் A. அப்பாஸ் மந்திரி, சுயநிதி பாடப்பிரிவு இயக்குனர் முனைவர் A. ஷபினுல்லாஹ் கான் மற்றும் இளையான்குடி, ஸ்டார் முஸ்லீம் கால்பந்தாட்ட குழு தலைவர் ஜனாப் முஹம்மது அலி, செயலாளர் ஜனாப் அப்துல் ரஜாக் மற்றும் நிர்வாகிகள், பேராசிரியர்கள், அலுவலர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர். இரண்டாம் நாள் போட்டிகளில், இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி அணி, கேரளா, திரிசூர், Mar டினிசிஸ் கல்லூரி அணி, கேரளா, ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரி அணி மற்றும் கோயம்புத்தூர், இரத்தினம் கல்லூரி ஆகிய அணிகள் அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றன. போட்டிகளுக்கான ஏற்பாடுகளை கல்லூரி உடற்கல்வித்துறையுடன் இணைந்து இளையான்குடி, ஸ்டார் முஸ்லீம் கால்பந்தாட்ட குழுவினர் செய்திருந்தனர். போட்டிகளை கால்பந்து ரசிகர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கண்டுகளித்தனர்.

தென்னிந்திய அளவிலான கால்பந்து போட்டிகள் துவக்கம்தென்னிந்திய அளவிலான கால்பந்துப்போட்டிகள் 27/08/2022 அன்று நம் கல்லூரியில...
27/08/2022

தென்னிந்திய அளவிலான கால்பந்து போட்டிகள் துவக்கம்

தென்னிந்திய அளவிலான கால்பந்துப்போட்டிகள் 27/08/2022 அன்று நம் கல்லூரியில் துவங்கியது. கல்லூரி ஆட்சிக்குழு செயலர் ஹாஜி V.M. ஜபருல்லாஹ் கான், ஆட்சிக்குழு உறுப்பினர்கள் ஜனாப் K.S.H. சிராஜுதீன், ஜனாப் J. அபூபக்கர் சித்திக், கல்லூரி முதல்வர் முனைவர் A. அப்பாஸ் மந்திரி, டாக்டர் சாகிர் உசேன் கல்வியியல் கல்லூரி, முதல்வர் திரு. M.M. முஹம்மது முஸ்தபா மற்றும் இளையான்குடி, ஸ்டார் முஸ்லீம் கால்பந்தாட்ட குழு தலைவர் ஜனாப் முஹம்மது அலி, செயலாளர் ஜனாப் அப்துல் ரஜாக் மற்றும் நிர்வாகிகள் ஆகியோர் தலைமையில் துவங்கியது. முதல் சுற்று போட்டிகளில், காரைக்குடி, அழகப்பா பல்கலைக்கழக உடற்கல்வியியல் கல்லூரி, திருச்சி, தூய வளனார் கல்லூரி, திருச்சி, ஜமால் முஹம்மது கல்லூரி, மதுரை, சரஸ்வதி நாராயணன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர், கற்பகம் பல்கலைக்கழக அணி மற்றும் கோயம்புத்தூர், ரெத்தினம் கல்லூரி அணி ஆகியவை வெற்றி பெற்றன. போட்டிகளுக்கான ஏற்பாடுகளை கல்லூரி உடற்கல்வித்துறையுடன் இணைந்து இளையான்குடி, ஸ்டார் முஸ்லீம் கால்பந்தாட்ட குழுவினர் செய்திருந்தனர். போட்டிகளை மாணவர்கள், கால்பந்து ரசிகர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கண்டுகளித்தனர்.

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் இணைக்கும் சிறப்பு முகாம்கல்லூரி முதல்வர் முனைவர் A. அப்பாஸ் மந்திரி அவர்களின் வழிகாட்ட...
25/08/2022

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் இணைக்கும் சிறப்பு முகாம்

கல்லூரி முதல்வர் முனைவர் A. அப்பாஸ் மந்திரி அவர்களின் வழிகாட்டலின் படி, வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் இணைக்கும் சிறப்பு முகாம் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் மற்றும் இளையான்குடி, தாலுகா அலுவலகத்துடன் இணைந்து 25/08/2022 அன்று நடைபெற்றது. சிறப்பு முகாமில் தாசில்தார் திரு. K. அசோக் குமார், மண்டல துணை வட்டாச்சியர் திரு. முத்துவேல், சாலைகிராமம் துணை வட்டாச்சியர் திரு. பிரபாகரன், கிராம நிர்வாக அலுவலர்கள் திரு. சதீஷ் குமார் மற்றும் திரு. ராமகிருஷ்ணன் மற்றும் தேர்தல் அதிகாரி திருமதி. லதா ஆகியோர் கலந்துகொண்டனர். முகாமில் 750 மாணவ-மாணவியர் பங்குபெற்று பயன்பெற்றனர். முகாமினை நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் முனைவர் M. பீர் முஹம்மது, முனைவர் A. அப்ரோஸ் மற்றும் முனைவர் M. சேக் அப்துல்லா ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.

புதிய தொழில்முனைவோருக்கான கடன் வசதிகள் குறித்த கருத்தரங்கம்தமிழக அரசின் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவன...
22/08/2022

புதிய தொழில்முனைவோருக்கான கடன் வசதிகள் குறித்த கருத்தரங்கம்

தமிழக அரசின் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், கல்லூரி தொழில்முனைவோர் மேம்பாட்டு கழகம் மற்றும் காரைக்குடி, அழகப்பா பல்கலைக்கழக தொழில்முனைவோர் மேம்பாட்டு கழகம் இணைந்து 22/08/2022 அன்று புதிதாக தொழில் துவங்கும் தொழில் முனைவோருக்கான கடன் வசதிகள் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் S. நாசர் வரவேற்றார். கல்லூரி துணைமுதல்வர் முனைவர் A. ஜஹாங்கிர் தலைமையுரையாற்றினார். சிறப்புவிருந்தினராக சருகனி, இதயா கல்லூரி, தொழில்முனைவோர் மேம்பாட்டு கழக ஒருங்கிணைப்பாளர் திருமதி R. ஜெயந்தி மற்றும் காரைக்குடி, அழகப்பா பல்கலைக்கழக, தொழில்முனைவோர் மேம்பாட்டு கழக, கள ஒருங்கிணைப்பாளர் திரு. J. அருமை ரூபன் ஆகியோர் கலந்துகொண்டு சிறு, குறு தொழில் முனைவோருக்கு அரசு மற்றும் தனியார் கடன் உதவி நிறுவனங்கள் குறித்து பேசினர். 120 மாணவ-மாணவியர், ஆசிரியர்கள், அலுவலர்கள் கலந்துகொண்டனர். இறுதியாக வணிகவியல் துறை உதவிப்பேராசிரியர் முனைவர் R. அப்துல் முத்தலிப் நன்றி கூறினார்.

நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்புநாட்டு நலப்பணித்திட்டத்தின் சார்பாக நல்லிணக்க நாள் உறுதி மொழி (Sadbhavana Diwas) நிகழ்வு 1...
18/08/2022

நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்பு

நாட்டு நலப்பணித்திட்டத்தின் சார்பாக நல்லிணக்க நாள் உறுதி மொழி (Sadbhavana Diwas) நிகழ்வு 18/08/2022 அன்று நடைபெற்றது. கல்லூரி துணை முதல்வர் முனைவர் A. ஜஹாங்கீர் அவர்கள் தலைமையில் மாணவ-மாணவியர், ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் நல்லிணக்க நாள் உறுதிமொழி எடுத்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாட்டினை நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் முனைவர் S.அஸ்மத் பாத்திமா, முனைவர் M. பீர் முகமது, முனைவர் A. அப்ரோஸ், முனைவர் M. சேக் அப்துல்லா ஆகியோர் செய்திருந்தனர்.

போதைப்பொருள் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு போட்டிகள்நாட்டு நலப்பணித்திட்டம் சார்பாக 17/08/2022 அன்று போதைப்பொருள் தடுப்ப...
17/08/2022

போதைப்பொருள் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு போட்டிகள்

நாட்டு நலப்பணித்திட்டம் சார்பாக 17/08/2022 அன்று போதைப்பொருள் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு போட்டிகள் நடைபெற்றன. கல்லூரி முதல்வர் முனைவர் A. அப்பாஸ் மந்திரி அவர்கள் போட்டிகளை துவக்கிவைத்து போதைப் பொருள்களால் ஏற்படும் தீமைகள் குறித்து பேசினார். சிறப்பு விருந்தினராக திருச்சி, CARE தன்னார்வலர் திரு. A. சித்திக் அவர்கள் கலந்துகொண்டு மாணவ-மாணவியர் வளர்த்துக்கொள்ளவேண்டிய நல்ல பண்புகள் குறித்து கலந்துரையாடினார். ஓவியம், கட்டுரை, பேச்சுப்போட்டி, வாசகம் எழுதுதல் உள்ளிட்ட போட்டிகளில் 53 மாணவ-மாணவியர் பங்குபெற்றனர். நிகழ்வினை நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் முனைவர் S. அஸ்மத்து பாத்திமா, முனைவர் M. பீர் முஹம்மது மற்றும் முனைவர் A. அப்ரோஸ் ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

76 வது சுதந்திர தின விழா76 வது சுதந்திர தின விழா 15/08/2022 அன்று நடைபெற்றது. கல்லூரி ஆட்சிக்குழு தலைவர் (பொறுப்பு) மற்ற...
15/08/2022

76 வது சுதந்திர தின விழா

76 வது சுதந்திர தின விழா 15/08/2022 அன்று நடைபெற்றது. கல்லூரி ஆட்சிக்குழு தலைவர் (பொறுப்பு) மற்றும் பொருளாளர் ஜனாப் S.A.M. அப்துல் அஹது தலைமையேற்றார். கல்லூரி முதல்வர் முனைவர் A. அப்பாஸ் மந்திரி அவர்கள் வரவேற்றார். கல்லூரி செயலர் ஹாஜி V.M. ஜபருல்லாஹ் கான் வாழ்த்துரை வழங்கினார். சிறப்பு விருந்தினராக சென்னை, ஹாஜி T.M.A. ஹபிபுல்லா அவர்கள் கலந்துகொண்டு (கல்லூரி ஆரம்பித்து 52 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு புதிதாக அமைக்கப்பட்டுள்ள) 52 அடி உயரம் கொண்ட கம்பத்தில் தேசிய கொடியேற்றி, தேசிய மாணவர் படை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பள்ளி மாணவ-மாணவியருக்கு நடத்தப்பட்ட விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் முனைவர் T. தினேஷ் கோல்டு கேப்ரியல் அவர்கள் சுதந்திர தினத்தைப் பற்றி உரையாற்றினார். நிகழ்வில் கல்லூரி ஆட்சிக்குழு உறுப்பினர்கள் ஜனாப் K.S.H. சிராஜுதீன், ஜனாப் S.K.M. அப்துல் சலீம், சுயநிதி பாடப்பிரிவு ஒருங்கிணைப்பாளர் முனைவர் A. ஷபினுல்லாஹ் கான், டாக்டர் சாகிர் உசேன் கல்வியியல் கல்லூரி முதல்வர் திரு. M.M. முஹம்மது முஸ்தபா, காரைக்குடி, 9 TN (Bn), தேசிய மாணவர் படை அதிகாரி, ஜூபைதார் திரு. ஜோபின் மாத்தியூ, இளையான்குடி ஊர் பொதுமக்கள், பேராசிரியர்கள், அலுவலர்கள், மாணவ-மாணவியர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். நிகழ்வினை தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் திரு. K. அப்துல் ரஹீம் ஒருங்கிணைத்தார். நிகழ்வினை நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் முனைவர் S. அஸ்மத்து பாத்திமா, முனைவர் M. பீர் முஹம்மது, முனைவர் A. அப்ரோஸ், முனைவர் S. சேக் அப்துல்லா மற்றும் உடற்கல்வி இயக்குனர் முனைவர் S. காளிதாசன் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.

Address

Dr. ZAKIR HUSAIN COLLEGE
Ilayangudi
630702

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Sunday 9am - 5pm

Telephone

+916369316050

Alerts

Be the first to know and let us send you an email when Dr. ZAKIR HUSAIN COLLEGE, ILAYANGUDI posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Dr. ZAKIR HUSAIN COLLEGE, ILAYANGUDI:

Shortcuts

Share

Category