29/08/2026
நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பேரழிவு குறித்து , இந்த ஆண்டுக்கான பஞ்சாங்கத்தில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது தற்பொழுது தெரிய வந்திருக்கிறது...
"சீனா அருகில் உள்ள தீபெத் பனிமலை உருக நேரும்..." என்று இந்த ஆண்டுக்கான பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே இது போன்ற ஒரு விஷயம் நடைபெறும் என்று
விஞ்ஞான அறிவுக்கு கூட எட்டாத பொழுது மெய்ஞான அறிவுக்கு எட்டி இருக்கிறது...
பஞ்சாங்கம் என்பது வானிலை சாஸ்திரம் இது சனாதன தர்மத்திற்கு மட்டுமே உரிய தனி சிறப்புகளில் ஒன்று.
இந்த ஆண்டில் இந்த தினத்தில் பௌர்ணமி என்றும் அமாவாசை என்றும் மிக துல்லியமாக கணிக்க கூடியதுதான் நமது சனாதன தர்மத்தின் பஞ்சாங்கம்.
ஒட்டுமொத்த மனித குலத்திற்கும் நவ கோள்களின் நகர்வுகள் குறித்து மிகத் துல்லியமாக குறித்து வைத்த சனாதன தர்மத்தின் மெய்ஞானிகளை இந்த நேரத்தில் நினைவுகூர்ந்து வணங்குகிறேன்...