JNU TAMIL

JNU TAMIL Special Centre for Tamil Studies
Room no. 427, SSS-III, JNU, NewDelhi - 110067

நேற்று (10.08.2026) ஜேஎன்யு, சிறப்புநிலைத் தமிழ்த் துறையில் பேராசிரியர் பெ.க. பெரியசாமி ராஜா அவர்கள் "அறம் தமிழ்க் கருத்...
11/08/2026

நேற்று (10.08.2026) ஜேஎன்யு, சிறப்புநிலைத் தமிழ்த் துறையில் பேராசிரியர் பெ.க. பெரியசாமி ராஜா அவர்கள் "அறம் தமிழ்க் கருத்தாக்கம்" எனும் தலைப்பில் உரையாற்றினார். அறம் என்னும் சொல் குறித்த கருத்துக்கள் சங்க காலம் முதல் தற்காலம் வரை பல்வேறு படிநிலைகளில் பயின்று வருவதை விளக்குவதாக அவர் உரை அமைந்தது.

அன்புடையீர், வணக்கம். ஜேஎன்யு,  சிறப்புநிலைத் தமிழ்த்துறை ஒருங்கிணைக்கும் உரையமர்விற்கு அன்புடன் அழைக்கிறோம்.தலைப்பு அறம...
07/08/2026

அன்புடையீர்,

வணக்கம்.

ஜேஎன்யு, சிறப்புநிலைத் தமிழ்த்துறை
ஒருங்கிணைக்கும் உரையமர்விற்கு அன்புடன் அழைக்கிறோம்.

தலைப்பு
அறம் தமிழ்க் கருத்தாக்கம்

உரையாளர்
திருமிகு பெ.க. பெரியசாமி ராஜா

🗓 10.08.2026
திங்கட்கிழமை

⏰ மதியம் 02.00 மணி

📍 447 - திருவள்ளுவர் அரங்கம்,SSS-III, ஜேஎன்யு.

இன்று (30.07.2026) ஜேஎன்யு, சிறப்புநிலைத் தமிழ்த்துறையில் முனைவர் அரிமளம் சு. பத்மநாபன் "சிலப்பதிகாரத்தில் இசையும் நாடக ...
30/07/2026

இன்று (30.07.2026) ஜேஎன்யு, சிறப்புநிலைத் தமிழ்த்துறையில் முனைவர் அரிமளம் சு. பத்மநாபன் "சிலப்பதிகாரத்தில் இசையும் நாடக உத்திகளும்" எனும் தலைப்பில் உரையாற்றினார். சிலப்பதிகாரத்தில் பயின்று வந்துள்ள பல்வேறு உத்திகளையும், இசை நுணுக்கங்களையும், நாடகப் பண்புகளையும் கவனப்படுத்துவதாக அவரது உரை அமைந்தது. இந்நிகழ்வில் பேராசிரியர் செம்மொழி க. ராமசாமி அவர்களும் கலந்து கொண்டு சிறப்பு செய்தார்.

அன்புடையீர், வணக்கம். ஜேஎன்யு,  சிறப்புநிலைத் தமிழ்த்துறை ஒருங்கிணைக்கும் உரையமர்வு         சிலப்பதிகாரத்தில் இசையும் நா...
29/07/2026

அன்புடையீர், வணக்கம்.

ஜேஎன்யு, சிறப்புநிலைத் தமிழ்த்துறை
ஒருங்கிணைக்கும் உரையமர்வு

சிலப்பதிகாரத்தில் இசையும் நாடக உத்திகளும்: முற்றிலும் புதிய அணுகுமுறை

உரையாளர்

முனைவர் அரிமளம் சு. பத்மநாபன்

🗓 30.07.2026, வியாழக்கிழமை
⏰ காலை 10.30 மணி
📍 447 - திருவள்ளுவர் அரங்கம்,SSS-III, ஜேஎன்யு

படிப்பது எழுதுவது உதவுவது ஆகியவற்றில் முழுமையாக ஈடுபட்டுத் தம் ஆய்வைக் குறிப்பிட்ட கால எல்லையில் நிறைவு செய்த ஆய்வாளர் த...
20/07/2026

படிப்பது எழுதுவது உதவுவது ஆகியவற்றில் முழுமையாக ஈடுபட்டுத் தம் ஆய்வைக் குறிப்பிட்ட கால எல்லையில் நிறைவு செய்த ஆய்வாளர் திரு.கா.விக்னேஷ் அவர்களுக்குப் பாராட்டுகள்.

06/07/2026
ஜே.என். யு சிறப்பு நிலைத் தமிழ்த் துறையில் முதுகலைத் தமிழ் பயின்ற மாணவர் திரு. செல்வகணேசன் அவர்களுக்கு மத்திய அரசின் உள்...
25/06/2026

ஜே.என். யு சிறப்பு நிலைத் தமிழ்த் துறையில் முதுகலைத் தமிழ் பயின்ற மாணவர் திரு. செல்வகணேசன் அவர்களுக்கு மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தில் மொழிபெயர்ப்பாளர் பணி வாய்ப்புக் கிடைத்துள்ளது.

ஜே.என். யு, சிறப்பு நிலைத் தமிழ்த் துறையில் 2023 ஆம் ஆண்டு முதுகலைத் தமிழ் தொடங்கப்பட்டது. அதில் முதல் அணி மாணவருள் ஒருவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அவருடைய பணி சிறக்க வாழ்த்துகிறோம்.

02/06/2026

வணக்கம்

நம் தமிழ்ப்பிரிவில் முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்ட ஆய்வாளர் முனைவர் நரேஷ் அவர்களுக்குப் பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரி நாட்டார் வழக்காற்றியல் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றும் அரிய வாய்ப்புக் கிடைத்துள்ளது.

அறிஞர் லூர்து ஐயா போன்று பங்களிப்பார் என்ற நம்பிக்கை உள்ளது.

ஒவ்வொரு நாளுக்குமான கற்றலைத் திட்டமிட்டு நிறைவு செய்யும் இயல்பினர். எந்த வகையான சலனத்திற்கும் இடமளிக்கா மன உறுதி வாய்ந்தவர்.

இன்று (04.04.2026) ஜேஎன்யு, சிறப்புநிலைத் தமிழ்த்துறையில் ரவிசுப்ரமணியன் எழுதி இயக்கிய நிலம்+நீதி = கிருஷ்ணம்மாள் ஜெகந்ந...
04/04/2026

இன்று (04.04.2026) ஜேஎன்யு, சிறப்புநிலைத் தமிழ்த்துறையில் ரவிசுப்ரமணியன் எழுதி இயக்கிய நிலம்+நீதி = கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் ஆவணப்படம் திரையிடப்பட்டு அப்படத்தின் இயக்குநர் ரவிசுப்ரமணியனுடன் கலந்துரையாடல் நடைபெற்றது. நிகழ்விற்கு முன்பாக, ஆவணப்படத்தின் தயாரிப்பாளர் டி.கே. சந்திரன் மற்றும் புது தில்லி, தேசிய காந்தி அருங்காட்சியகத்தின் இயக்குநர் அண்ணாமலை ஆகியோர் உரையாற்றினர்.

இன்று (03.04.2026) ஜேஎன்யு, சிறப்புநிலைத் தமிழ்த்துறை ஒருங்கிணைத்த நிகழ்வில் எழுத்தாளர் பிருந்தா சாரதி எழுதி இயக்கிய கவி...
03/04/2026

இன்று (03.04.2026) ஜேஎன்யு, சிறப்புநிலைத் தமிழ்த்துறை ஒருங்கிணைத்த நிகழ்வில் எழுத்தாளர் பிருந்தா சாரதி எழுதி இயக்கிய கவிக்கோ: கவிஞர்களின் கவிஞர் எனும் ஆவணப்படம் திரையிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஆவணப்படத்தின் இயக்குநர் பிருந்தா சாரதியுடன் கலந்துரையாடலும் நடைபெற்றது.

Address

Delhi

Alerts

Be the first to know and let us send you an email when JNU TAMIL posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to JNU TAMIL:

Shortcuts

Share