Pioneer Mills Higher Secondary School

Pioneer Mills Higher Secondary School Pioneer Mills Higher Secondary School
Jothipuram (Po)
Coimbatore - 641047
Tamil Nadu
Tel:+91 422 2895084

10/11/2016
Near ksb
13/12/2015

Near ksb

09/09/2013

நம் முன்னோர்களின் கட்டடிடகலைக்கு இதுவும் ஒரு சான்று...!

இது நம்ம இந்தியாவில தாங்க, ராஜஸ்தானில் உள்ள அபனேரி என்ற கிராமத்தில் 1200 வருசத்துக்கு முன்பு கட்டிய தான் இந்த "சான்ட் ஃபோரி" என்னும் படிக்கட்டு கிணறு....

இந்த கிணறு 3500 படிகளை கொண்டது.

via; Aarthika

Visit our Page -► தமிழால் இணைவோம்

05/09/2013

அஷ்டாங்க யோகப் பயிற்சிகள்

அஷ்டமா சித்தி என்று மரபாகக் கருதப்படும் எட்டுத் திறமைகளை அடைந்தவர்கள் சித்தர்கள் ஆவர். இவை இயற்கை அளித்த திறமை கள் எனவும் அற்புதத் தன்மை உடையன என்றும் கருதப்படுகின்றன. இவ்வாறான அஷ்டமா சித்திகளைச் சித்தர்கள் அஷ்டாங்க யோகப் பயிற்சிகளால் பெற்றனர். அத்தகைய சித்திக ளை த் திருமந்திரம் விளக்குகிறது.

அஷ்டாங்க யோகப் பயிற்சிகள்

1. அணிமா
2. மஹிமா
3. லஹிமா
4. கரிமா
5. பிராத்தி
6. பிரகாமியம்
7. ஈசத்துவம்
8. வசித்துவம்

“அணுவினும் நுண்ணுருவு கொளல் அணிமாவாம்,அவற்றின்
அதி வேகத்து இயங்கியும் தோய்வற்ற உடல் லகிமா,
திணிய பெருவரை என மெய் சிறப்புறுகை பகிமா,
சிந்தித்த பலம் எவையும் செறிந்துறுகை பிராத்தி,
பிணை விழியர் ஆயிரவரொடும் புணர்ச்சி பெறுகை
பிரகாமி,ஈசிதை மாவலியும் அடி பேணி
மணமலர் போல் எவராலும் வாஞ்சிக்கப்படுகை
வசி வசிதை வலியாரால் தடுப்பரிய வாழ்வே!”

1. அணிமா:

பெரிய ஒரு பொருளை தோற்றத்தில் சிறிய தாகக்காட்டுவது/ ஆக்குவது. பிருங்கி முனிவ ர் முத்தேவர்களைமட்டும் வலம் வருவதற்கா க சிறு வண்டாக உருமாறினார் என்ற செய்தி அணிமா என்ற சித்தைக் குறிக்கும்.

2. மஹிமா:

சிறிய பொருளைப் பெரிய பொருளாக்குவது. வாமன அவதாரத்தில் திருமால் இரண்டடியால் மூவுலகை அளந்ததும், கிருஷ்ண பரமா த்மா அர்ஜூனனுக்கு விஸ்வரூப தரிசனம் காட்டி உலகமே தன்னுள் அடக்கம் என்று காட்டியதும் மஹிமா என்னும் சித்தாகும்.

3. லஹிமா:

கனமான பொருளை இலேசான பொருளா க ஆக்குவது. திருநாவுக் கரசரை சமயப் பகை காரணமாக கல்லில் கட்டி கடலில் போட்ட போது கல் மிதவையாகி கடலில் மிதந்தது லஹிமா ஆகும்.

4. கரிமா:

இலேசான பொருளை மிகவும் கனமான பொருளாக ஆக்குவது. அமர்நீதி நாயனாரி டம் கோவணம் பெறுவதற்காக இறைவன் வந்த போது, ஒரு கோவணத்தின் எடைக்கு தன்னிடமுள்ள எல்லா பொருட்களை வைத்தும் தராசுத் தட்டு சரியாகாமல் கடை சியாக தானும் தன் மனைவியும் ஏறி அமர்ந்து சரிசெய்த சித்தி கரிமா.

5. பிராத்தி:

எவ்விடத்திலும் தடையின்றி சஞ்சாரம் செய்வது. திருவிளையாடற் புராணத்தில் “எல்லாம்வல்ல சித்தரான படலம்” என்னும் பகுதியில் சிவன் ஒரே சமயத்தில் நான்கு திசைகளிலும் காட்சியளித்த தாக வரும் சித்தி பிராத்தி.

6. பிரகாமியம்:

வேண்டிய உடலை எடுத்து நினைத்தவரிடத்தில் அப்போதே தோன் றுதல். அவ்வையார் இளவயதி லேயே முதுமை வடிவத்தைப் பெற்றதும், காரைக் கால் அம்மையார் தன்னுடைய அழகான பெண் வடிவத்தை மாற்றி பேய் வடிவம் பெற்றதும் பிரகாமியம் என்னும் சித்தா கும்.

7. ஈசத்துவம்:

ஐந்து தொழில்களை நடத்துதல். திருஞான சம்பந்தர் பூம்பாவைக்கு உயிர் கொடுத்து எழுப்பி யமை ஈசத்துவம் எனும் சித்தாகும்.

8. வசித்துவம்

ஏழுவகைத் தோற்றமாகிய தேவ, மானிட, நரக, மிருக, பறப்பன, ஊர்வன, மரம் முதலிய வற்றைத் தம்வசப்படுத்துதல். திருநாவுக்க ரசர் தம்மைக் கொல்வதற்காக வந்த யானையை நிறுத்தியதும், ராமர் ஆலமரத்தி லிருந்து ஒலிசெய்து கொண்டிருந்த பறவை களின் ஓசை யை நிறுத்தியதும் வசித்துவம் எனும் சித்தாகும்

via Sendhura Pandiyan

Visit our Page -► தமிழால் இணைவோம்

05/09/2013

கருவூர்ச் சித்தரால் வடிவமைக்கப்பட்டு, மன்னன் இராச ராச சோழனால் கட்டப்பட்ட, தமிழனின் கட்டிடக்கலையைப்பறைசாற்றும் கோவிலின் பெருமை!

உலகின் அதிசயம் எனக் கூறப்படும் இத்தாலியில் உள்ள பைசா கோபுரம் மூன்று கட்டமாக 177 வருடங்கள் கட்டப்பட்டது. இந்தக் கட்டிடத்தை முதலில் கட்டும் போது, இதன் கீழ் உள்ள மண்ணை சோதிக்காமல், ஒரு கட்டிடம் கட்டுவதற்கான அடிப்படை விசயங்களை கூட கடைப்பிடிக்காமல் கட்டிட அடித்தளத்தை மிகவும் மோசமாக கட்டினர்.இதனால் இந்த கட்டிடம் சாயத்தொடங்கியது, இரண்டாம் தளம் கட்டும் போது போர் மூண்டதால் இதன் கட்டுமானம் சிறிது காலம் நிறுத்தி வைக்கப்பட்டு பின்னர் தொடங்கியதும் ஓரளவிற்கு இதன் அடித்தள மண் இதற்கு ஒத்துழைத்தது. இதனால் மூன்றாவது தளத்தை அமைக்க முடிந்தது.

ஒரு கேவலமான கட்டுமானத்திற்கு எடுத்துக்காட்டான ஒரு கட்டிடம்உலக அதிசயப்படியலில் இன்றும் உள்ளது !

(AUG 8TH 1173 -1372) தஞ்சையில் உள்ள சித்தர்களின் கட்டிடக்கலைக்குபெயர் போன ராஜா ராஜா சோழனால் கட்டப்பட 216 அடி உலகையே மிரளச்செய்யும் தஞ்சை பெரிய கோயில் வெறும் 12 ஆண்டுகளில் கட்டப்பட்டது.

இதன் கோபுரத்தில் உள்ள ஒரே ஒரு பாறை 80டன் (80,000 கிலோ) எடை கொண்டது. உலகையே வியக்க வைக்கும் இந்த 1000 ஆண்டுகளுக்கு மேலாக கம்பீரமாக நிற்கும் கட்டிடம். இப்போதுள்ள எந்தத் தொழில் நுட்பமும் இல்லாத அந்தக் காலத்தில் எப்படி கட்டப்பட்டது? என்பது உலகுக்கே வியப்பாக உள்ளது.வியப்பை மட்டுமே பதிலாய் வைத்துள்ள தஞ்சை பெரிய கோயில் போன்ற கட்டிடம் உலக அதிசய பட்டியலில் இடம் பெறவில்லை!

சிலநேரங்களில் வெளியில் உள்ளதை பற்றி வியப்படையும் நாம், அதைக்காட்டிலும்சிறப்பாக உள்ள, தமிழனின் பெருமைகளை பற்றிமறந்து விடுகின்றோம்.

Visit our Page -► தமிழால் இணைவோம்

05/09/2013

தமிழன் சாதித்த கட்டிடக்கலை!

உங்கள் கையால் தொடலாம், உருட்டலாம், முழு உருளையையும் பிடிக்கலாம் ஆனால் வெளியே எடுக்க முடியாது. கோவில் என்பது வழிபாட்டிற்கான இடம் மட்டுமல்ல. அது ஒரு கலைக்கூடம்.

இடம்: திருவாசி, திருச்சி அருகில்


You can touch, hold , rotate but you cannot take out. Our temples are not only for spritual and religious activities. It's an art gallery.

Plave: Thiruvaasi - Near Trichirapalli

Visit our Page -► தமிழால் இணைவோம்

05/09/2013

தேன்!

Visit our Page -► தமிழால் இணைவோம்

05/09/2013

கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டத்தை சேர்ந்த அப்துல் மாலிக் என்ற இந்த ஆசிரியர் தினந்தோறும் ஆற்றில் இறங்கி டியூப் மூலம் கரையை கடந்து, பள்ளிக்கு சென்று பாடம் நடத்துகிறார்.

பஸ் மூலம் சென்றால் 3 மணி நேரம் ஆகும் என்று ஆற்றின் வழியாக 15 நிமடத்தில் பள்ளிக்கு சென்று பாடம் எடுக்கிறார்.

இன்று அவர் ஆற்றை கடந்து பள்ளிக்கு சென்ற போது ஏரளமான மாணவர்கள் வாழ்த்து அட்டையுடன் காத்திருந்து அவருக்கு அசிரியர் தின வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

ஜாஹாங்கீர் என்ற ஏழு வயது மாணவனிடம் பெரியவனாகி என்னவாவாய் என்று கேட்டதற்கு ’மாலிக் சார்’ மாதிரி ஆசிரியர் ஆவேன் என்று கூறியுள்ளான்.

இன்று ஒரு சில ஆசிரியர்கள் காலையில் பள்ளிக்கு சென்று கையெழுத்து போட்டதோடு சரி பிறகு எங்கு போனார் என்று யாருக்குமே தெரியாது,ஒரு சில ஆசிரியர்கள் 12 மணிக்கு மேல் தான் பள்ளிக்கே வருவர்.இப்படிப்பட்ட ஆசிரியர்களிடையே அப்துல் மாலிக்கின் சேவையை பாராட்டத் தான் வேண்டும்.

-Ilayaraja Dentist

Visit our Page -► தமிழால் இணைவோம்

Address

Coimbatore
641047

Telephone

+914222895084

Website

Alerts

Be the first to know and let us send you an email when Pioneer Mills Higher Secondary School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category