Naam-virumbum-thamizhagam

Naam-virumbum-thamizhagam

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Naam-virumbum-thamizhagam, Chennai.

Vikatan - Election Field | Tamil Nadu Assembly Election 2016 | Tamil Nadu Assembly Election 2016... 15/05/2016

2016 தமிழக சட்டமன்றத் தேர்தலின் அனைத்து தொகுதிகளின் பிரதான வேட்பாளர்களின் விபரம்... சுமார் 1500 வேட்பாளர்களின் விவரம் இதில் உள்ளது...

http://www.vikatan.com/election/election_2016.php
*************
நமது தொகுதி வேட்பாளர்களின் விவரங்களை பார்த்து போதிய அராய்ச்சி செய்து ஓட்டள்ப்போம் நன்பர்களே... நமது குடும்பத்தாரிடமும் கட்டாயமாக எடுத்து சொல்வோம்!!!
**********
வாக்குபதிவிற்க்கு இன்னும் ஒரே நாள் உள்ள நிலையில் இந்த விஷயத்தை whatsapp. Facebook, twitter இல் எவ்வளவு பகிர முடியுமோ பகிரவும்...

--
ஆதித்யன்

Vikatan - Election Field | Tamil Nadu Assembly Election 2016 | Tamil Nadu Assembly Election 2016...

08/04/2016

நாங்கள் "நாம் விரும்பும் தமிழகம்" என்கிற இயக்கம் நடத்துகின்றோம்.

"நாம் விரும்பும் தமிழகம்" பற்றி ஒரு சிறு அறிமுகம். ஒரு வரியில் இதன் குறிக்கோளை சொல்ல வேண்டும் என்றால் அது "தமிழகத்தில் நல்லாட்சி நடக்க வைப்பது". அதற்காக கீழ்கண்ட 14 கொள்கைகளை வரையருத்தோம்.

1. ஊழல் அற்ற அரசு
2. அரசாங்க ஊழியர்களின் கடமை தவறாமை. அவரவர் கடமையை செவ்வனே செய்தல்
3. பொது மக்களின் கடமை தவறாமை
4. சுத்தமான, சுகாதாரமான தமிழகம்
5. அனைத்து விதங்களில் ஒழுக்கம்
6. அரசியல் இல்லாத தரமான உண்மையான அரசாங்கம்
7. லஞ்சம் இல்லாமை
8. இயற்கையான முறையில் விவசாயம் மற்றும் அபரிவிதமான விவசாய வளர்ச்சி
9. இயற்கையை காப்பற்றுதல் (ஏரி, குளம், ஆறு, மரம், காடு, கடல் போன்றவை...)
10. அனைத்து துறைகளை கணிணி மயமாக்கல்
11. இன்னும் சிறந்த முறையில் அரசாங்க அதிகாரிகளை செயல் பட வைத்தல்
12. கணிணி மயமாக்கப்பட்ட புகார் பெட்டி அமைச்சகம்
13. அதிக பொருப்பில் Vigilance and Anti corruption அமைச்சகம்
14. சிறிய மற்றும் பெரிய அளவில் சுய தொழில் ஊக்குவிப்பு (சீனா எப்படி, குண்டூசி முதல் கைபேசி வரை நமது ஊரில் விற்கிறது) செய்து தமிழகத்தின் GDP யை மிக அதிக அளவிற்கு உயர்த்துதல்

எங்கள் இயக்கத்தில் எங்களது அலுவலக நன்பர்கள் மற்றும் இதர நன்பர்கள் சுமார் 20 பேர் இருக்கின்றனர். எப்படி களப்பணி ஆற்றுவது என சிந்தித்த போது தான் நல்லோர் வட்டம், சென்னை நெக்ஸ்ட், குத்தம்பாக்கம் இளங்கோ, லோக் சட்டா கட்சி போன்றோரின் தொடர்பு கிடைத்தது. அவர்களின் அறிவுரை படி எங்கள் கொள்கைகளுக்கேற்ற கீழ்கண்ட பணிகளை தற்போது செய்து வருகிறோம்.

1. இணைய வழி வாக்காளர் பதிவு முகாம். இதுவரை 3 இடங்களில் நடத்தி சுமார் 600 மக்களின் விண்ணப்பத்தை பதிவு செய்துள்ளோம். இவற்றில் 500 புதிய வாக்காளர்களும் 100 முகவரி மாற்றமும் அடங்கும். இது தவிர சுமார் 200 பேர்களின் சந்தேகங்களையும் வாக்காளர் பட்டியலில் அவர்கள் பெயர் உள்ளதா என்று சரிபார்த்தலையும் செய்துள்ளோம்.
2. எங்கள் இயக்க நன்பர்கள் இருக்கும் பகுதிகளில் உள்ள தெரு பிரச்சனைகளை, சென்னை மாநகராட்சி மற்றும் கழிவுநீர் வாரியத்திற்கு புகார் தெரிவித்து அவர்களிடம் தொடர்பு கொண்டு சரிபடுத்தி வருகிறோம். இதுவரை சுமார் 70 புகார்களை பதிவு செய்துள்ளோம். அவற்றில் 30 புகார்கள் மாநகராட்சி அதிகாரிகளால் சரிசெய்யப்பட்டுள்ளன.

இதில் முதல் பணியை இன்னும் 10 நாட்கள் செய்வோம். இரண்டாம் பணியை தொடர்ந்து செய்து கொண்டே இருப்போம். இவை தவிர, வேறு எந்த திசையில் பயணம் செய்ய முடியும் என்று சிந்தித்துகொண்டிருக்கிறோம். அதற்காக மற்ற இயக்கங்களின் கூட்டங்களுக்கு செல்வது மற்றும் இத்தகைய களப்பணியை செய்யும் மற்ற அன்பர்களையும் சந்திப்பது போன்ற பணிகளை செய்து வருகிறோம்.

இப்போது சென்னையை மையமாக கொண்டு நாங்கள் செயல் பட்டாலும் விரைவில் தமிழகம் முழுவது எங்கள் பணி ஆரம்பமாகும்.

இது போன்ற பணிகளை நாங்கள் பொது மக்களின் நலனிற்காகவும் பொது நன்மைக்காகவும் செய்தாலும், அது சேவை நோக்கத்தில் மட்டும் அல்ல. மிகப்பெறிய அரசியல் மாற்றத்தை எதிர் நோக்கியே அது அமையும். எங்களை சேவை நோக்கமுள்ள இயக்கம் என்று மக்கள் பார்க்க கூடாது. நல்லாட்சி நோக்கில் நியாயமான தர்மமான முறையில் பணிபுரியும் இயக்கம் என்றே தமிழக மக்கள் எங்களை அடையாளம் காண வேண்டும். நல்லாட்சிக்காக இப்போதே தேர்தலில் போட்டியிடுவது போன்று அவசரமாக செயல்படாமல், நிதானமாக மக்கள் மனதில் நியாயமான முறையில் இடம்பெற்று மற்றவர்களால் தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுக்க வேண்டும் என்று எண்ணம் கொண்டுள்ளோம்.

எங்கள் இயக்கம் மற்றும் எங்கள் செயல்கள் வெற்றி பெற தங்களை போன்ற நல்ல உள்ளம் கொண்ட மக்களின் ஆதரவும் வாழ்த்துக்களும் ஆலோசனையும் எங்களுக்கு எப்பொழுதும் வேண்டும்.

Photos 07/03/2016

Weekly Meet of Naam Virumbum Thamizhagam team at Mr. & Mrs. Adithyan's Residence. Attended by Mr. Radhakrishnan, Ms. Rajee, Vikash & Mohanraj (via skype).

Meeting was very fruitful one and various topics were discussed. Some of them were:

1. Progress on calling & taking a note of missed callers who were interested in supporting Puthiya Shakti Ani

2. Tambaram to Perungalathur - road side parapet wall not available - Siva to check

3. Discussion on Structuring of Naam Virumbum Thamizhagam to be initiated.

4. Plantation in Road dividers - Vikash to check

5. Called nearly 10 people who were interested in supporting Puthiya Sakthi Ani. Response was good.

6. To check the means of supporting People get new Bus passes thru Naam Virumbum Thamizhagam.

23/01/2016

Some members from our team 'Naam Virumbum Thamizhagam' are meeting Mr. Elango of Kuthambakkam tomorrow...

I will update the more details tomorrow here

23/01/2016

Sivakumar, Arun Balaji, Adithyan from our 'Naam Virumbum Thamizhagam' group attended ChennaiNEXT Meeting on 10-Jan-2016 (Sunday) at Guru Nanak College, Velachery

Details can be seen in the link

https://www.facebook.com/chennainext/

ChennaiNext Chennai NEXT is a citizen centric platform formed after the last year floods in Chennai.

Marina Cleaning on 03-Jan-2016 23/01/2016

This is an event organized by 'Turtle Talks' together with one or two other communities.

6 members from our team 'Naam Virumbum Thamizhagam' joined in that acivity

Want your school to be the top-listed School/college in Chennai?

Click here to claim your Sponsored Listing.

Location

Address

Chennai