Govt School Karaiyappatti

Govt School Karaiyappatti The smart school

  #நியாயம்_வழங்குங்கள்_யுவர்_ஆனர்...இனிமேல் மூவர் குழு அமைத்தால் தான் உண்மை விளங்குமா ? அந்த ஒரு நபர் குழு என்னவாயிற்று?...
08/03/2024



#நியாயம்_வழங்குங்கள்_யுவர்_ஆனர்...

இனிமேல் மூவர் குழு அமைத்தால் தான் உண்மை விளங்குமா ? அந்த ஒரு நபர் குழு என்னவாயிற்று?

சுமார் பத்து நாட்களாக மனதாலும் உடலாலும் வருந்தி தங்கள் போராட்டத்தின் பயணத்தை மேற்கொண்டு வரும் ஆசிரியர்களுக்கு கல்வி அமைச்சர் வேண்டுகோள் வைத்துள்ளார்.

தேர்வு காலத்தில் மாணவர்கள் இருக்கின்றனர் என்று இப்போது தான் அவருக்கு தெரிகிறதா எனத் தெரியவில்லை. பத்தாயிரம் ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு செல்லவில்லையே ... அதனால் மாணவர்களது கற்றல் என்னவாகும் ... எத்தகைய பிரச்சனைகள் இருந்தால் ஆசிரியர்கள் இப்படியான போராட்டக்களத்தில் இறங்குவார்கள் என்ற சிந்தனை ஏன் இவருக்கும் சார்ந்த கல்வி அலுவலர்களுக்கும் தெரியவில்லை?

மாவட்டம் தோறும் பெற்றோர்களை சந்திக்கிறோம் என விழா எடுத்து வருகிறார்களே , அதற்கு ஆசிரியர்களை வரவழைக்கிறார்களே ,
கலைத்திருவிழா நடத்துகிறார்களே, அதற்கு ஆசிரியர்களை அனுப்புகிறார்களே...
அப்போது கல்வி பாதிக்கப்படாதா என்று கேட்கிறார் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஒரு இடைநிலை ஆசிரியர். நியாயமான கேள்வி.

திருப்பூர் மாவட்டத்தில் ஊத்துக்குளி என்ற இடத்தில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியர் மட்டும் எல்லாக் குழந்தைகளையும் ஒன்றாக அமர வைத்து இந்த பத்து நாட்களும் பார்த்துக் கொண்டு இருக்கிறாராம். அது அந்த மாவட்டத்தின் சிறந்த பள்ளிகளுள் ஒன்று , மாணவர்கள் எண்ணிக்கையும் அதிகம். அங்கு பணிபுரியும் அனைத்து இடைநிலை ஆசிரியர்களும் மாவட்டத்தின் முதன்மைக் கல்வி அலுவலகத்தில் போராட்டத்தில் இருப்பதால் ஒற்றைத் தலைமை ஆசிரியர் மட்டுமே இருக்கிறார் என்று பெற்றோர் ஒருவர் கூறினார்.

நியாயமான முறையில் உட்கார்ந்து பேசினால் இந்த பிரச்சனை 15 நிமிடத்தில் முடிந்து விடக் கூடிய ஊதியப் பிரச்சனை.

சம வேலைக்கு சம ஊதியம் என்பது அனைவருக்குமான சமூக நீதி. அதை வழங்க இத்தனை இடையூறுகளை உருவாக்குகிறதே துறையும் அரசும்.

ஊடகங்களால் ஒரு ஐந்து நிமிடத்தில் இந்த பிரச்சனையைத் தெளிவாகக் காட்ட முடியும் போது அரசு தரப்பில் ஏன் வருடக்கணக்கில் இழுத்து அடிக்கின்றனர்?

இதே ஆசிரியர்கள் டிசம்பர் மாதம் இதே காரணத்திற்காகப் போராட்டம் செய்த போது முதல்வர் கவனத்திற்கு சென்றது தானே.

அத்தனை திட்டங்கள் வகுத்து , அவற்றுக்கு கோடிக் கணக்கில் நிதி ஒதுக்குகிறீர்களே , யாரோ தன்னார்வலர்களும் தனியார் அமைப்புகளும் அந்த நிதியைப் பெறுகின்ற போது, இப்படி உழைக்கும் ஆசிரியர்களை மதிக்காமல் அந்த ஆசிரியர்களின் ஊதியத்தில் நீதியை நிலைநாட்டாமல் அவர்கள் வயிற்றில் அடிப்பது எந்த விதத்தில் சமூக நீதி ?

ஒரு காலத்தில் ஆசிரியர் சமூகம் பெற்ற ஊதியம் மிகவும் குறைவு. போராட்டத்தில் நின்று எத்தனையோ தியாகங்கள் செய்து தான் இந்த ஊதியம் பெற்று வருகின்றனர் இன்றைய ஆசிரியர்கள். அன்றைய போராட்டங்களை முன்னெடுத்த ஆசிரியர்களில் குறிப்பாக இன்றைய தொடக்கக் கல்வி ஆசிரியர்கள்
(இடைநிலை ஆசிரியர்கள்) ஆனால் அன்று எட்டாம் வகுப்பு வரை கற்பித்த இடைநிலை ஆசிரியர்கள் தான் இன்றியமையாத பங்கு வகித்தனர் என்பதை யாரும் மறுக்க முடியாது. அவர்கள் போட்ட அடித்தளம் தான் இன்றுள்ள அனைத்து ஆசிரியர்களின் ஊதிய விகிதங்கள் என்பதை நினைவில் கொண்டு எல்லா ஆசிரியர் அமைப்புகளும் அவர்களுக்கு தோள் கொடுக்க வேண்டும்.

பள்ளிக் கல்வித் துறையின் மாண்புமிகு அமைச்சருக்கு, அறிக்கை தரவே ஒன்பது நாட்கள் பிடிக்கிறது அதே போல
இன்னும் அறிக்கை மட்டுமே கொடுத்து பிரச்சனையைத் தீர்க்க முடியும் என்று புதியதாக யாரை நம்ப வைப்பது எனத் தெரியவில்லை.

கல்வியின் அடித்தளம் என்பது ஆசிரியர்களையும் சேர்த்துதான் என அரசு உணர வேண்டும்.

இடைநிலை ஆசிரியர்கள் கோரிக்கையை உண்மையாகவே காது கொடுத்துக் கேட்டு நியாயம் வழங்குங்கள் யுவர் ஆனர் 😞.

*சு.உமா மகேஸ்வரி*
அசத்தும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் அமைப்பு

https://youtu.be/UHFOczJGzeo
30/04/2021

https://youtu.be/UHFOczJGzeo

Online Class Link @ Description - மாலை 8 மணிக்கு ஆன்லைன் வகுப்பு Zoom class link @ Descriptionகதை -பாட்டு -விடுகதை- புதிர் -ஜாலியா படிக்கலாம் வாட்சப் குழ....

பணிநிறைவு வாழ்த்து💐💐💐💐💐💐💐——வணக்கம்.கரையப்பட்டி அங்கன்வாடியில்கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாகசிறப்பாக பணியாற்றியதிருமதி.இராஜே...
31/03/2021

பணிநிறைவு வாழ்த்து
💐💐💐💐💐💐💐
——
வணக்கம்.
கரையப்பட்டி அங்கன்வாடியில்
கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக
சிறப்பாக பணியாற்றிய
திருமதி.இராஜேஸ்வரி அம்மா
அவர்கள் இன்றுடன் (31.3.2021)
பணி ஓய்வு பெறுகிறார்கள்.
நம் பள்ளியில் கடந்த ஆண்டு
மாணவர் சேர்க்கையின்போது
நம்முடன் இணைந்து மிகச்சிறப்பாக
பணியாற்றினார். வரும் காலங்களில்
அவர் நல் உடல்நலம் பெற்று
பெருவாழ்வு நீடூழி வாழ வாழ்த்தி
வழியனுப்புகிறோம்.
தேர்தல் முடிந்தபின்
நம் பள்ளியில் பிரிவு உபச்சார விழா
நடைபெறும்.
பொதுமக்கள், பெற்றோர் மற்றும் பள்ளி ஆர்வலர்கள் சார்பாக அம்மா அவர்களுக்கு
அவர்களின் பணியினைப்பாராட்டி
நன்றி தெரிவிக்கிறோம்.
பல்லாண்டு வாழ்க நலமோடு.
💐💐💐
-
அன்புடன்,
தலைமை ஆசிரியர்,
இடைநிலை ஆசிரியர்,
இதர பணியாளர்கள்,
மாணவர்கள்,பெற்றோர் மற்றும் பொதுமக்கள்,
ஊ.ஒ.ஆரம்பப்பள்ளி,
கரையப்பட்டி, அரிமளம்,
புதுக்கோட்டை மாவட்டம்.

https://youtu.be/7EynRV1Hwo8ஆரோபிந்தோ(Aurobindo&HDFC)வழங்கிய ‘புதுமை ஆசிரியர்களுக்கான பயிற்சி’-நம் பள்ளி ஆசிரியர்கள் பயி...
29/03/2021

https://youtu.be/7EynRV1Hwo8
ஆரோபிந்தோ
(Aurobindo&HDFC)
வழங்கிய ‘புதுமை ஆசிரியர்களுக்கான பயிற்சி’
-நம் பள்ளி ஆசிரியர்கள் பயிற்சியில் கலந்துகொண்டதன் விளைவாக இந்த வீடியோ ஆரோபிந்தோ தளத்தில்
Role Model School என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ளது.
நம் கிராம பள்ளியின் பெருமைக்கும்,
நமது மக்களின் பங்களிப்பிற்கும் ஆதரவிற்கும்
அடுத்த அங்கீகாரமாக
நம் பள்ளிக்கு
அல்லது ஆசிரியர்களுக்கு மேலும் ஒரு அங்கீகாரம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.
இந்த வீடியோவை முழுமையாக பார்த்து லைக், கமென்ட் செய்ய வேண்டுகிறேன்.
மேலும் நம் கிராம இளைஞர்கள் அனைவரின் கவனத்துக்கு கொண்டுசெல்ல வேண்டுகிறேன்.
More views & more likes will give us some credits.
Please share....
-அன்புடன் உங்கள் ஆசிரியர்,
S.விஜயராஜ்

https://youtu.be/dp2KPDfEscQ
18/03/2021

https://youtu.be/dp2KPDfEscQ

அரசுப்பள்ளியில் 1-6 வகுப்பு படிக்கும் மாணவர்களுக்குஆன்லைன் வகுப்பு-தினமும் மாலை 8 மணிக்கு ஆன்லைன் வகுப்பு-கீழே ....

நண்பர்களே! இதை அதிகம் சேர் செய்யுங்கள்!-அரசுப்பள்ளியில் 1-6 வகுப்பு படிக்கும் மாணவர்களுக்குஆன்லைன் வகுப்பு-தினமும் மாலை ...
17/03/2021

நண்பர்களே! இதை அதிகம் சேர் செய்யுங்கள்!
-
அரசுப்பள்ளியில் 1-6 வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு
ஆன்லைன் வகுப்பு-
தினமும் மாலை 8 மணிக்கு ஆன்லைன் வகுப்பு
-கீழே உள்ள லிங்க் அழுத்தி வகுப்பில் பங்கேற்கவும்.
1-6 வகுப்பு மாணவர்கள்
https://us04web.zoom.us/j/73303962519?pwd=R2NIUHgvQTVOak4xOEFwRzFISEZOdz09

Online Class Day 1
https://youtu.be/rO5Xqojf5HY

Day 2
https://youtu.be/gDh0vUw2kao

Day 3
https://youtu.be/1nOYVqQ4Hrk

Day 4
https://youtu.be/Hgfw7OrOJtk

Day 5
https://youtu.be/9ANIeNliCN0

ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கரையப்பட்டி - நடத்தும் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க விரும்புகிறீர்களா?
இந்த Google Form படிவத்தை நிரப்பவும.
https://forms.gle/krC38b8sjm8thqgz6

தினமும் மாலை 8.00 மணிக்கு
Zoom meeting App இல்
ஆன்லைன் வகுப்பு நடைபெறும்.

ஆன்லைன் வகுப்பு வாட்சப் குழுவில் இணையவும்.
https://chat.whatsapp.com/IsK2Yiaiu8L8Z9RETVzivR

Online Education channel link
https://youtube.com/channel/UCWEZcdT9c06K7p7Wxgw4ecg
சேனலை subscribe செய்துகொள்ளவும்.

USEFUL CLASSROOM IDEAS YOU'LL WANT TO TRY We've created classroom ideas for the schools, teachers and students to make your teaching and studying fun and ea...

அரசுப்பள்ளிநமது பள்ளிநமது கிராமம் நமது பெருமை
11/02/2021

அரசுப்பள்ளி

நமது பள்ளி
நமது கிராமம்
நமது பெருமை

Profit - Loss - Percentage l இலாபம் - நட்டம் - சதவீதம் -NMMS-TNPSC & CLASS 5 MATHS
11/02/2021

Profit - Loss - Percentage l இலாபம் - நட்டம் - சதவீதம் -NMMS-TNPSC & CLASS 5 MATHS

Profit - Loss - Percentage l இலாபம் - நட்டம் - சதவீதம் -NMMS-TNPSC & CLASS 5 MATHS

NMMS EXAM - MAT - SAT - INTRO & EXPLANATION
25/01/2021

NMMS EXAM - MAT - SAT - INTRO & EXPLANATION

About NMMS EXAM -MAT - SATHow to crack NMMS Exam?To arrest the dropout rate of students at Class 8 and encourage them to continue their education at the seco...

Address

Karaiyappatti
Arantangi
622202

Alerts

Be the first to know and let us send you an email when Govt School Karaiyappatti posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Govt School Karaiyappatti:

Shortcuts

Share

Category