21/08/2026
தமிழகத்தில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கான IPAA போட்டியானது அனைத்து மண்டலங்களிலும் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது. இன்று(20.08.2026) திருச்சி மண்டலத்திற்கான ஆண்கள் மற்றும் பெண்களுக்கான டேபிள் டென்னிஸ் போட்டியானது அரியமங்கலம், சேசசாயி இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி கல்லூரியில் நடைபெற்றது. ஆண்களுக்கான போட்டியில் 20 பாலிடெக்னிக் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர். போட்டியில் நமது ஜெ. ஜெ. பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பான முறையில் விளையாடி முதல் இடத்திற்கான கோப்பையை வென்றார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வெற்றியின் மூலம் மண்டலங்களுக்கு இடையிலான மாநில அளவிலான போட்டிக்கு நமது கல்லூரி அணியானது தகுதி பெற்றுள்ளது.
பெண்களுக்கான போட்டியில் 10 கல்லூரி அணிகள் கலந்து கொண்டது. அந்த போட்டியில் நமது கல்லூரி அணியானது 4 வது இடத்தை பிடித்தது.