21/04/2018
ஆண்டு விழா மற்றும் மாணவர் மன்ற விழா
சேது பாஸ்கரா வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் கல்லூரி ஆண்டு விழா மற்றும் மாணவர் மன்ற தொடக்க விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. விழாவின் சிறப்பு விருந்தினர் இலங்கையின் மாநில கல்வி அமைச்சர் உயர்திரு. வி. எஸ். இராதாகிருஷ்ணன் அவர்கள் கலந்துகொண்டு பேசுகையில் தமிழ் மொழியின் பண்பினையும் தொன்மையையும் பற்றி அழகாக கூறினார். மேலும் நாட்டின் வளர்ச்சிக்கு வேளாண்மையின் பங்களிப்பும் அதன் வளர்ச்சிக்கு மாணவர்கள் ஈடுபாடுடன் செயலாற்ற வேண்டும் என்ற கருத்தினையும் அங்கு பதிவுசெய்தார். கல்லூரியின் முதன்மையர் திரு. ஜே.ஆர். கண்ணன் பாபு அவர்கள் கல்லூரியின் ஆண்டறிக்கையினை வெளியிட்டு மாணவர்மன்ற செயலாளர்களை அறிமுகம் செய்து வைத்தார். இவ்விழாவின் சிறப்பு அங்கமாக வேளாண் சோலை என்ற மாத இதழினை நபார்டு வங்கியின் முன்னாள் தலைமை மேலாளர் திரு. எஸ். நாகூர் அலி ஜின்னா அவர்கள் வெளியிட அதனை இலங்கை அமைச்சர் பெற்றுக்கொண்டார். அதனையடுத்து லயோலா கல்லூரியின் பேராசிரியர் திரு. ஜெ. ரங்கநாதன் அவர்கள் இன்றைய வேளாண் சூழ்நிழைகளைப் பற்றி எடுத்துரைத்தார். இக்கல்லூரியின் தளாளர் திரு. சேதுகுமணன் அவர்கள் தலைமை உரையாற்றி பரிசளிப்பு மற்றும் கலைநிகழ்ச்சிகளை தொடங்கி வைத்தார். மூன்றாமாண்டு மாணவர் திரு. எஸ். சுரேஷ் வரவேற்புரையும், செல்வி. எஸ். டி. நிவேதிதா நன்றியுரையும் நல்கினர்.