Sutton & Morden Tamil School

Sutton & Morden Tamil School Welcome to Sutton & Morden Tamil School

05/09/2026
எங்கள் SMTS பாடசாலையின் Vocal மாணவிகள் கலந்து கொண்ட நிகழ்வு.மிக்க நன்றி Miss Dheeksh*tha Sendil ஆசிரியர்.
31/08/2026

எங்கள் SMTS பாடசாலையின் Vocal மாணவிகள் கலந்து கொண்ட நிகழ்வு.மிக்க நன்றி Miss Dheeksh*tha Sendil ஆசிரியர்.

25/06/2026
எமது சட்டன் & மோடன் தமிழ் பாடசாலையில் இன்று Art & Craft நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.மாணவர்கள் தங்களது கற்பனைத் திறனையு...
13/06/2026

எமது சட்டன் & மோடன் தமிழ் பாடசாலையில் இன்று Art & Craft நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

மாணவர்கள் தங்களது கற்பனைத் திறனையும் படைப்பாற்றலையும் வெளிப்படுத்தும் வகையில் அழகிய கைவினைப் படைப்புகளை உருவாக்கியிருந்தனர். தந்தையர் தினத்தை முன்னிட்டு மாணவர்கள் தயாரித்த வாழ்த்து மடல்களும் மிகவும் பாராட்டத்தக்கதாக அமைந்திருந்தன.

நிகழ்வின் விபரங்களும் படங்களும் பின்னர் பதிவிடப்படும்.

இந்நிகழ்வை வெற்றிகரமாக நடத்த உதவிய அனைத்து ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் மற்றும் பெற்றோர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்.

18/05/2026

மே 18 முள்ளிவாய்க்கால் நினைவாக எமது SMTS தமிழ் பாடசாலை நாடகக் குழுவினால் மாணவர்கள் செய்த இந்த நிகழ்வை, ஈழப்போரின் இறுதிக்கட்டத்தில் உயிரிழந்த ஆயிரக்கணக்கான தமிழ் பொதுமக்கள், போராளிகள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நினைவாக சமர்ப்பிக்கின்றோம். அவர்களின் தியாகமும் வேதனையும் என்றும் எமது நினைவுகளில் நிலைத்திருக்கும்.
ஆக்கம்:இந்து ஆசிரியர்

18-05-2026 “வலிநிறைந்த நினைவுகள்” முள்ளிவாய்க்கால் நினைவு நாள் என்பது 2009 ஈழப்போரின் இறுதிக்கட்டத்தில் உயிரிழந்த ஆயிரக்...
18/05/2026

18-05-2026
“வலிநிறைந்த நினைவுகள்”
முள்ளிவாய்க்கால் நினைவு நாள் என்பது 2009 ஈழப்போரின் இறுதிக்கட்டத்தில் உயிரிழந்த ஆயிரக்கணக்கான தமிழர் பொதுமக்கள், போராளிகள் மற்றும் காணாமல் போனோரைக் நினைவுகூரும் துயர்நாள் ஆகும். உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் இந்த நாளை அமைதியான அஞ்சலிகள், மெழுகுவர்த்தி ஏற்றல்கள், பிரார்த்தனைகள் மற்றும் நினைவேந்தல் நிகழ்வுகள் மூலம் கடைப்பிடிக்கின்றனர்.
அந்த இழப்பின் ஆழத்தையும், இன்னும் ஆறாத மனக்காயங்களையும் பிரதிபலிக்கிறது. பல குடும்பங்களுக்கு இது வெறும் வரலாற்று நினைவு அல்ல; இழந்த உறவுகள், அழிந்த வாழ்வுகள், சொல்ல முடியாத துயரங்கள் ஆகியவற்றின் உயிரோட்டமான நினைவாகவே உள்ளது.
“மண்ணில் மறைந்தாலும்
மனதில் மறையாதோர் நீங்கள்…
முள்ளிவாய்க்கால் மௌனத்தில்
இன்னும் கேட்கிறது உங்கள் குரல்.
வலியோடு வாழ்கிறோம்,
நினைவோடு நின்றிருக்கிறோம்.”
உயிரிழந்த அப்பாவி மக்களின் நினைவுகள் எங்கள் இதயங்களில் என்றும் நிலைத்திருக்கும். அவர்களின் துயரமும் தியாகமும் மறக்கப்படாது.
எழுத்து:✍️ மாலினி

SMTS பள்ளியால் Morden hall ல் நடைபெற்றது.

அனைவருக்கும் அன்பான வணக்கம்.நீங்கள் Zoom மூலம் வழங்கப்படும் இந்த ஒரு மணி நேரப் பயிற்சியில் கலந்து கொள்வது, உங்கள் வாழ்க்...
11/05/2026

அனைவருக்கும் அன்பான வணக்கம்.

நீங்கள் Zoom மூலம் வழங்கப்படும் இந்த ஒரு மணி நேரப் பயிற்சியில் கலந்து கொள்வது, உங்கள் வாழ்க்கை, எதிர்கால சந்ததி மற்றும் சுற்றுச்சூழலில் ஒரு நல்ல மாற்றத்தை உருவாக்கும்.

நமது மூளை எவ்வளவு செயல்திறனை இழந்திருந்தாலும், இந்தப் பயிற்சியை நீங்கள் கற்றுக்கொள்ளும் போது நிச்சயமாக உங்கள் வாழ்க்கை பலப்படும்.

அதுமாத்திரமல்லாமல், நீங்கள் வழங்கும் ஒவ்வொரு பங்களிப்பும் SMTS பாடசாலையின் அபிவிருத்திக்காக பயன்படுத்தப்படும் என்பது உறுதி.

ஆகையால், நீங்கள் இணைந்து கொள்ளுங்கள்; மற்றவர்களையும் இணைத்து கொள்ளுங்கள்.

மனதைப் பயிற்றுவித்து, வாழ்க்கையில் ஒரு நல்ல மாற்றத்தை கொண்டு வாருங்கள்.
அன்புடன் மாலினி

சட்டன் மோடன் தமிழ் பாடசாலையின் அதிகாரப்பூர்வமான பதக்கம் (Badge) இன்று ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டது.
09/05/2026

சட்டன் மோடன் தமிழ் பாடசாலையின் அதிகாரப்பூர்வமான பதக்கம் (Badge) இன்று ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டது.

SMTS பள்ளியில் இன்று மழலையர் வகுப்பு மாணவி.
25/04/2026

SMTS பள்ளியில் இன்று மழலையர் வகுப்பு மாணவி.

21/03/2026

Address

Parish Hall
Morden
SM45SR

Alerts

Be the first to know and let us send you an email when Sutton & Morden Tamil School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Sutton & Morden Tamil School:

Shortcuts

Share

Category