TEDCUK

TEDCUK

Share

International Valartamil Exam Board
Finest Tamil – Widest Regard

Tamil Education Development Council was formed and operating with the purpose of serving Tamil children of United
Kingdom. We are a branch of TEDC, which manages Tamil education system in fourteen countries with
forty thousand students. Our main target is teaching our mother tongue Tamil and our cultural value
to our kids to enable them to integrate with the host community with our cultural ide

12/03/2026

தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவை ஐக்கிய இராச்சியக் கிளையின் மாபெரும் பரிசளிப்பு விழா 15.02.2026 - Event Highlight

Apply Now for 2026 Exams! https://tedc.org.uk/exam/

TEDC UK: Award Ceremony 2026 - Highlight video #tedc #tamil 07/03/2026

Event Highlight: தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவை ஐக்கிய இராச்சியக் கிளையின் மாபெரும் பரிசளிப்பு விழா 15.02.2026

Apply Now for 2026 Exams!

TEDC UK: Award Ceremony 2026 - Highlight video #tedc #tamil Enjoy the videos and music you love, upload original content, and share it all with friends, family, and the world on YouTube.

07/03/2026

தமிழர் கல்விமேம்பாட்டுப் பேரவையின் வளர்தமிழ் பொதுத்தேர்வு 2026 ஆம் ஆண்டிற்கான இணையத்தள விண்ணப்பப் படிவ இணைப்பு (Portal) திறக்கப்பட்டுள்ளது.

பள்ளி ஊடாகவோ அல்லது நேரடியாகவோ, தங்களது இணையத்தள விண்ணப்பங்களை 22-03-2026 க்கு முன்னர் 👉🏽 https://tedc.org.uk/exam/ என்ற எமது இணையத்தள முகவரி மூலம் பதிவு செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

முக்கிய அறிவிப்புகள்:

தேர்வுக் கட்டணங்கள்:
- பள்ளியூடாக விண்ணப்பித்தல் - £27
- தனியார் விண்ணப்பம் - £35
- மாணவர் அனுமதி அட்டை - £2

தேர்வு நாட்கள்:👉🏽 https://tedc.org.uk/calendar/

இருப்பினும், உங்களுக்கு ஏதேனும் ஐயப்பாடுகள் இருந்தால் அவற்றைத் தீர்ப்பதற்காக அடுத்த இரண்டு வாரங்களில் உதவி வழங்க நாங்கள் அணியமாக இருக்கின்றோம்.

Contact details
- Technical: 078 2649 3093
- General Enquiries: 077 7175 3525

நன்றி.
தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் ஐக்கிய இராச்சியக்கிளை

Photos from TEDCUK's post 28/02/2026

தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவை ஐக்கிய இராச்சியக் கிளையின் மாபெரும் பரிசளிப்பு விழா 15.02.2026. ஒரு சில பதிவுகள்.

28/02/2026

கருத்துக்களம் 23/தமிழ்ர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் 2026ம் ஆண்டிற்கான மாணவர், ஆசிரியர் மதிப்பளிப்பு நிகழ்வும் இளையோர் பணியும்.

https://www.youtube.com/live/XhRCih2Ircg?si=voskvBiljzpYrvoA

27/02/2026
Photos from TEDCUK's post 23/02/2026

22.02.2026 ஞாயிற்றுக் கிழமை வேல்ஸ் தமிழ் கலை பண்பாட்டுக் கல்விக்கூடம் தனது 16வது ஆண்டு விழாவை சிறப்பாகக் கொண்டாடியது.
பள்ளி நிர்வாகத்தின் அழைப்பை ஏற்று தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் நிர்வாக உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி வேல்ஸ் தமிழ் கலை பண்பாட்டுக் கல்விக்கூடத்திற்கு தமது வாழ்த்துரைகளையும் விழாவில் தெரிவித்து இருந்தனர்.

வேல்ஸ் தமிழ் கலை பண்பாட்டுக் கல்விக்கூடம் கடந்த பதினாறு ஆண்டுகளாக பல்வேறு சவால்கள் எதிர்கொண்டு தமது கொள்கையில் உறுதியாக இருந்து தேசியத் தலைவரின் வழிகாட்டலில் அமையப் பெற்ற தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவை வெளியிடும் வளர்தமிழ் பாடநூல்களைப் பின்பற்றித் தன் கல்விப் பணியை முன்னெடுத்து வருகிறது.

இந்நிறுவனத்தின் பணிப்பிணைப்பு தேசிய வேர்களை வலுப்படுத்துவதோடு மட்டுமல்லாது அடுத்த தலைமுறைக்கு எமது வரலாறு, மொழி, பண்பாடு ஆகியவற்றை சரியான முறையில் எடுத்துச் செல்லும் உயர்ந்த பணியாகவும் பார்க்கப்படுகின்றது . தமிழ்க்கல்வி என்பது தேசிய அடையாளத்தின் அடித்தளமாகும் என்பதை அவர்கள் செயல்முறை மூலம் எடுத்துக்காட்டி வருகின்றனர்.

இத் தமிழ்க்கல்வி முக்கோணப்பங்களிப்பில் அயராது பாடுபடும் ஆசிரியர் - பெற்றோர் - மாணவர் அனைவரையும் வாழ்த்தி நிற்கின்றோம்.

நேற்றைய ஆண்டு விழாவில் மாணவர்கள் வழங்கிய கலை மற்றும் பண்பாட்டு நிகழ்ச்சிகள் கல்விக்கூடத்தின் அர்ப்பணிப்பையும் தமிழ்ப்பணியின் செழுமையையும் வெளிப்படுத்தின. பாரம்பரிய நடனங்கள் பாடல்கள் உரைகள் ஆகியவை பார்வையாளர்களைக் கவர்ந்திருந்தன..

வழமைபோல் இந்நிறுவனத்தின் தமிழ்க்கல்விப் பணி தொடர்ந்து வளர்ந்து தமிழ்த்தேசியத்துடனான உறவுப்பாலமாக மேலும் சிறக்க தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவை ஐக்கிய இராச்சியக் கிளை வாழ்த்தி நிற்கின்றது.

Photos from TEDCUK's post 21/02/2026

(பகுதி 2)

தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவை ஐக்கிய இராச்சியக் கிளையின் மாபெரும் பரிசளிப்பு விழா 15.02.2026 எம் தமிழுக்கான பெருவிழாவாகச் சிறப்புற நடைபெற்றது. இவ்விழாவிலே ஆசிரியர்களின் அர்ப்பணிப்பையும், மாணவர்களின் சாதனைகளையும் பாராட்டி விருதுகள் வழங்கப்பட்டன. தமிழ்மொழி வளர்ச்சிக்கு உழைக்கும் அனைவரையும் தமிழினம் என்ற எல்லைக்குள் ஒன்றிணைக்கும் ஒரு பெருவிழாவாக இது அமைந்தது.

வளர்தமிழ் பொதுத்தேர்வில் 90 க்கும் மேற்பட்ட மதிப்பெண்கள் பெற்று அதிதிறன் எடுத்த மாணவர்கள், மற்றும் தமிழ்த்திறன் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள், அத்துடன் வளர்தமிழ் 10, 11, 12 நிறைவு செய்த மாணவர்கள் என மதிப்பளிக்கப்பட்டனர். மொத்தமாக *1,292* பரிசில்கள் வழங்கப்பட்டன.
மாணவர்களின் கடின உழைப்பை மதிப்பதோடு அவர்களுக்கு மேலும் உற்சாகத்தையும் ஊக்கத்தையும் இவ் விழா அளித்தது.

மற்றும், புலம்பெயர் தேசங்களில் தமிழ்மொழியை மனநிறைவுடனும், ஆர்வத்துடனும், பெருவிருப்புடனும் கற்பித்து வரும் ஆசிரியர்களின் அர்ப்பணிப்புப் பணியைப் பாராட்டி அவர்களுக்கும் மதிப்பளிக்கப்பட்டது. மண்டபம் நிரம்பிய மக்களுடன் வெகு சிறப்பாக இந்நிகழ்வு
நடைபெற்றது எம்மொழிக்கான பெரு வெற்றியாக எம்மால் உணர முடிந்தது.

இவ்விழாவில் 5000 இற்கு மேற்பட்டோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த மாபெரும் விழாவுக்கு வருகை தந்து விழா சிறப்பாக நடைபெற ஒத்துழைப்பு வழங்கிய அத்தனை அன்புள்ளங்களுக்கும் உள்ளத்தால் உவந்து நன்றி கூறுகின்றோம்.

தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவை ஐக்கியராச்சியக் கிளை.
நன்றி.

Want your school to be the top-listed School/college in London?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Address

162 Franciscan Road
London
SW178HH

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm