23/05/2026
📢 அறிவிப்பு: இரண்டாண்டு பொதுக்கூட்டம் (BGM) 2026
ஆயர் தாவார் தமிழ்பள்ளி முன்னாள் மாணவர் சங்கம்
ஆயர் தாவார் தமிழ்பள்ளி முன்னாள் மாணவர் சங்கத்தின் 2026/2027 ஆம் ஆண்டுக்கான இரண்டாண்டு பொதுக்கூட்டம் கீழ்கண்டவாறு நடைபெறும்:
📅 தேதி: 7 ஜூன் 2026 (ஞாயிற்றுக்கிழமை)
🕒 நேரம்: மதியம் 3.00 – மாலை 4.30 மணி
📍 இடம்: SJKT ஆயர் தாவார் கூட்ட அறை
கூட்ட நிகழ்சி நிரல்:
1️⃣ தலைவரின் உரை
2️⃣ 2023/2024 ஆம் ஆண்டு இரண்டாண்டு பொதுக்கூட்ட நிமிடக்குறிப்பின் சமர்பிப்பு மற்றும் உறுதிப்படுத்தல்
3️⃣ 2024/2025 ஆம் ஆண்டுக்கான செயல்பாட்டு அறிக்கை மற்றும் நிதி அறிக்கை சமர்பிப்பு
4️⃣ தற்போதைய செயற்குழுவை கலைத்தல்
5️⃣ தற்காலிக தலைவர் மற்றும் நிமிடக்குறிப்பாளர் நியமனம்
6️⃣ புதிய செயற்குழு உறுப்பினர்களுக்கான வாக்கெடுப்பு மற்றும் நியமனம்
7️⃣ புதிய தலைவரின் நிறைவுரை
8️⃣ பிற விவகாரங்கள்
9️⃣ சிற்றுண்டி
சங்கம் மற்றும் பள்ளியின் முன்னேற்றத்திற்காக கருத்துக்களைப் பகிர்ந்து கூட்டத்தை சிறப்பிக்க அனைத்து முன்னாள் மாணவர்களும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கப்படுகிறீர்கள்.
தயவுசெய்து 1 ஜூன் 2026-க்கு முன் கீழ்கண்ட Google Form மூலம் உங்கள் வருகையை உறுதிப்படுத்தவும்:
https://forms.gle/TFWZCPxnPngkMhsc9
அனைத்து முன்னாள் மாணவர்களின் ஒத்துழைப்பும் ஆதரவும் மிகவும் பாராட்டப்படுகிறது. நன்றி.
📢 *NOTIS MESYUARAT AGUNG DWI-TAHUNAN (BGM) 2026*
*Persatuan Alumni SJK(T) Ayer Tawar*
Mesyuarat Agung Tahunan (BGM) Persatuan Alumni SJK(T) Ayer Tawar 2026/2027 akan diadakan seperti ketetapan berikut:
📅 Tarikh: *7 Jun 2026 (Ahad)*
🕒 Masa: *3.00 petang – 4.30 petang*
📍 Tempat: *Bilik Mesyuarat SJKT Ayer Tawar*
Agenda mesyuarat:
1️⃣ Ucapan Presiden
2️⃣ Pembentangan dan Pengesahan Minit Mesyuarat Agung Dwi-Tahunan 2023/2024
3️⃣ Pembentangan Laporan Aktiviti dan Laporan Kewangan sesi 2024/2025
4️⃣ Pembubaran Jawatankuasa Sedia Ada
5️⃣ Pelantikan Pengerusi Sementara dan Pencatat Minit
6️⃣ Pengundian dan Pelantikan Ahli Jawatankuasa Baharu
7️⃣ Ucapan Penangguhan Pengerusi Baharu
8️⃣ Hal-hal Berbangkit
9️⃣ Jamuan Ringan
Semua ahli alumni dijemput hadir bagi memeriahkan mesyuarat serta bersama-sama menyumbang idea demi kemajuan persatuan dan sekolah.
Mohon sahkan kehadiran anda sebelum 1 Jun 2026 melalui Google Form berikut: https://forms.gle/TFWZCPxnPngkMhsc9
Kerjasama dan sokongan semua alumni amat dihargai. Terima kasih.
30/04/2026
♟️ PERTANDINGAN CATUR GHAJAM ♟️
THE BISHOP | கஜம்
Edisi Mei 2026
📅 23 Mei 2026 (Sabtu)
🕣 Bermula 8.30 pagi
📍 Dewan Chan Han Boon, SJKT Ayer Tawar
👦👩 4 Pairing :
U12 Boys | U12 Girls | U9 Boys | U9 Girls
⏱️ Format Rapid : 15 minit
♟️ 5 Pusingan
📌 Penyertaan Terhad:
30 pemain setiap kategori
🎁 Hadiah :
🏅 Medal Pencapaian + Sijil Pencapaian
🏆 Johan hingga Ke-10 setiap kategori & Terbaik Sub-kategori
🏅 Sijil + Medal untuk semua peserta
💰 Yuran Pendaftaran :
Early Bird (1 – 8 Mei 2026) : RM 20
Normal (9 – 17 Mei 2026) : RM25
Lewat (bermula 18 Mei 2026) : RM30 (Terhad)
📆 Tarikh Tutup Pendaftaran:
17 Mei 2026
📝 Daftar di sini:
https://forms.gle/Q15pHbtd9P1d8Bsg9
🌟 Anjuran Bersama :
♟️ Kelab Catur SJKT Ayer Tawar
👨👩👧 PIBG SJKT Ayer Tawar
🎓 Persatuan Alumni SJKT Ayer Tawar
01/03/2026
*வெற்றித் தடம் பதித்த வீரர்கள்!*
பேரா மாநிலக் களத்தினிலே - ஒரு
பேரலை வீசியது இன்று!
அறுபத்து நான்கு பள்ளிகளோ - அங்கே
அணிவகுத்து நின்றது ஒன்று!
கருடா ஓட்டப்பந்தயக் கழகம் - நடத்திய
குறுக்கோட்டப் போர்க்களத்தில்,
சிறுக்கால்கள் காற்றாய் மாற - நம்
சிங்கங்கள் பாய்ந்தன முன்னால்!
*ஆயர் தாவார் தமிழ்ப்பள்ளி* - புகழ்
ஆகாயப் பந்தலில் ஏறியதே!
ஒட்டுமொத்த வெற்றியின் இரண்டாம் இடம் - இன்று
உரிமையோடு மகுடம் சூடியதே!
ஓடிய கால்கள் ஓய்வதில்லை - இனி
உலகம் முழுதும் நம் பெயர் ஒலிக்கும்!
வெற்றி வாகை சூடிய வீரர்களுக்கு - என்றும்
தமிழ்ச்சமூகத்தின் வாழ்த்துகள் நிலைக்கும்!
*வாழ்த்துகள் ஆயர் தாவார் தமிழ்ப்பள்ளி மாணவர்களே!*
18/02/2026
2027-ஆம் கல்வித் தவணைக்கான முதலாம் ஆண்டு பதிவு
📌 15 February 2026 முதல் 31 march 2026 வரை
📌 https://idme.moe.gov.my என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம்.
📌 2 january 2021 முதல் 31 december 2021 வரை பிறந்த 6 வயது மாணவர்கள் மற்றும் 2 january 2020 முதல் 1 january 2021 வரை பிறந்த 7 வயது மாணவர்கள்
📌 மலேசிய குடியுரிமைப் பெற்ற ஆறு மற்றும் ஏழு வயதுடைய குழந்தைகளைப் பதிவு செய்யலாம்
📌 தன்னார்வ அடிப்படையில் பதிவு செய்யலாம். 6 வயது மாணவர்கள் சிறப்பு தேர்வு எதுவும் எழுத வேண்டியதில்லை.
⭐️ ஆறு வயது குழந்தைகள் (5+) முதலாம் வகுப்பில் சேருவதை ஊக்குவிக்கும் இந்த முயற்சி, குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் நல்வாழ்வை உறுதி செய்வதற்கும், அதே நேரத்தில் அவர்கள் கல்வியில் பின்தங்கியிருக்காமல் இருப்பதை உறுதி செய்வதற்கும் MADANI அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட ஒரு சீரிய முன்னெடுப்பாகும்.
PENDAFTARAN TAHUN 1 BAGI SESI 2027
📌 Pendaftaran secara dalam talian boleh dibuat melalui Modul Pengurusan Awam, Sistem Bersepadu KPM (MOEIS) di laman sesawang https://idme.moe.gov.my bermula 15 FEB 2026 hingga 31 MAR 2026
📌 Pendaftaran terbuka kepada kanak-kanak WARGANEGARA MALAYSIA KOHORT ENAM TAHUN (5+) DAN TUJUH TAHUN (6+) secara PENDAFTARAN SUKARELA dan TIDAK PERLU MENDUDUKI UJIAN SARINGAN.
SISTEM BERSEPADU KEMENTERIAN PENDIDIKAN (MOEIS)
1. DAFTAR Di : https://idme.moe.gov.my
2. KEMASKINI : Maklumat Peribadi
3. PERMOHONAN : Menerusi MOEIS
⭐️ Inisiatif untuk menggalakkan kemasukan kanak-kanak berusia enam tahun (5+) ke Tahun 1 adalah Langkah prograsif kerajaan MADANI bagi memastikan perkembangan dan kesejahteraan kanak-kanak serta pada masa yang sama memastikan mereka tidak ketinggalan dalam pendidikan."
18/02/2026
நினைவுகள் மலரும் மாலை ✨
பழைய நண்பர்கள், பழைய ஆசிரியர்கள்… ஆனால் அதே பாசம், அதே சிரிப்பு ❤️ இன்று நினைவுகள் மீண்டும் உயிர்த்தெழுந்த நாள்!
17/02/2026
மறந்து விடாதீர்.இன்று மாலை 4 30 க்கு எங்களோடு பழைய நினைவுகளை அசைபோட வாருங்கள்.
10/02/2026
ஆயர் தாவார் தமிழ்ப்பள்ளியின் மின்னும் நட்சத்திரங்கள் 3.0
Shining Stars of our school 3.0
08/02/2026
வணக்கம்🙏🏽,
“நினைவுகள் மலரும் மாலை” நிகழ்ச்சிக்கு முன்பதிவு செய்துள்ளவர்களின் எண்ணிக்கை இன்னும் குறைவாகவே உள்ளது. ஆகவே, இந்த நிகழ்வை நாம் ஏன் நடத்துகிறோம் என்பதை தெளிபடுத்த விரும்புகிறேன்.
இந்த நிகழ்வின் முக்கிய நோக்கம் பல பேட்ச்-களைச் சேர்ந்த முன்னாள் மாணவர்கள் மீண்டும் ஒன்றுகூடி, நம் பள்ளிக்கான செயலில் ஈடுபடும் முன்னாள் மாணவர் வலையமைப்பை உருவாக்குவது. இது உறவுகள், சேர்ந்துணர்வு, மற்றும் எதிர்கால பள்ளி மற்றும் சமூக முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் ஒரு தளத்தை உருவாக்குவது இலக்காக கொண்டுள்ளது. முன்னாள் மாணவர்கள் வருகை குறைவாக இருந்தால், அந்த வலையமைப்பு உருவாகாது அல்லது வலுப்பெறாது.
மேலும், முன்னாள் மற்றும் மூத்த ஆசிரியர்களை அழைத்துள்ளோம். அவர்களின் வருகை இந்த மாலையை இன்னும் அர்த்தமுள்ளதாக மாற்றும் என்று நாங்கள் நம்புகிறோம்.
வலுவான முன்னாள் மாணவர் சமூகம் உருவாக வேண்டும் என்று நீங்கள் நினைத்தால், இதற்கு ஆதரவு அளிப்பதற்கான எளிய வழி உங்கள் வருகைதான். வாருங்கள், உங்கள் பேட்ச் எல்லையைத் தாண்டி மற்ற முன்னாள் மாணவர்களையும் சந்தியுங்கள், இந்த முயற்சிக்கு வேகம் கொடுங்கள். ஒரே ஒரு மாலையின் பங்கேற்பு, புதிய வலையமைப்பை தொடங்கிவைக்க முடியும்.
தயவுசெய்து இன்று உங்கள் வருகையை உறுதிப்படுத்துங்கள். மேலும், உங்கள் பேட்சில் இருந்து குறைந்தது ஒருவரையாவது அழைத்து வருங்கள்.
RSVP இணைப்பு: https://forms.gle/y7xZZR2EKoqJxh8a9
தேதி: 17 பிப்ரவரி 2026 (செவ்வாய்)
நேரம்: மாலை 4.30 முதல்
இடம்: ஆயர் தாவார் தமிழ்ப்பள்ளி
“ஒருநாள் செய்வோம்” என்று தள்ளிப்போட வேண்டாம். இதுபோன்ற நிகழ்வை மீண்டும் தொடங்க யாராவது முயற்சி செய்வதற்கு இன்னொரு தசாப்தம் கூட ஆகலாம்.
நன்றி🙏🏽
RSVP NINAIVUGAL MALARUM MAALAI
Date: 17 Februari 2026 (Tuesday) Time : 4:30 pm onwards Venue: SJK Tamil Ayer Tawar
04/02/2026
📣 *அழைப்பு*
அன்புடைய ஆயர் தாவார் தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவருக்கும் வணக்கம்.
முன்னாள் மாணவர்கள் சங்கம், பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் ஆதரவுடன், நடத்தும்
“ *நினைவுகள் மலரும் மாலை* ”
என்ற சந்திப்பு நிகழ்விற்கு உங்களை அன்புடன் அழைக்கிறோம்.
📅 தேதி: *17 பிப்ரவரி 2026, செவ்வாய்*
🕟 நேரம்: *மாலை 4.30 முதல்*
📍 இடம்: *ஆயர் தாவார் தமிழ்ப்பள்ளி*
நாம் எல்லோரும் மீண்டும் ஒன்று கூடும் நேரம் இது.
நினைவுகள், நட்பு, உரையாடல், மற்றும் இனிய மாலை உணவு.
உங்கள் வருகை இந்த நிகழ்வை மேலும் அர்த்தமுள்ளதாக மாற்றும்.
👉 வருகையை உறுதிப்படுத்த (RSVP):
https://forms.gle/y7xZZR2EKoqJxh8a9
📞 மேலும் தகவல்களுக்கு:
திரு. மு. சிவபாலன் : 016 563 3541
திருமதி. து. கஸ்தூரி : 014 341 4175
உங்களை நேரில் சந்திக்கும் ஆவலுடன்,
முன்னாள் மாணவர் சங்கம்
ஆயர் தாவார் தமிழ்ப்பள்ளி