Vidyasagar College of Arts and Science

Vidyasagar College of Arts and Science

Share

Vidyasagar College of Arts and Science,Udumalpet Vidyasagar College of Arts and Science was established in the year 1991 by Late Shri.V.Vidyasagar and Shri.V.

Sathyanathan. They were well known Philanthropist, Industrialist, with a great vision. From a humble beginning in the early nineties, we have grown from strength to strength over 30 years. Today the legacy is being carried forward by Smt.Padmavathy Sathyanathan who is currently the Managing Trustee and Secretary of the College. Over the years our student strength has scaled appreciably to around 1

Operating as usual

04/04/2024
Photos from Vidyasagar College of Arts and Science's post 02/04/2024
Photos from Vidyasagar College of Arts and Science's post 02/04/2024

உடுமலை வித்யாசாகர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம், தேசிய மாணவர் படை, Rotract , Green field, Fine Arts Club மற்றும் உடற்கல்வித்துறை ஆகியவை இணைந்து வருகின்ற ஏப்ரல் 19. 2024 பாராளுமன்றத் தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவு என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வுப் பேரணி மற்றும் கலை நிகழ்ச்சியில் இன்று (02.04.2024) உடுமலை குட்டைத் திடல் வளாகத்தில் துவங்கி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நிறைவு பெற்றது. இந்நிகழ்விற்கு சிறப்பு விருந்தினர்களாக திரு.R. ஜஸ்வந்த் கண்ணன், (வருவாய் கோட்டாட்சியர்), திரு.P.சுந்தரம் (வட்டாட்சியர்), திரு.S.மூர்த்தி, தாளாளர், விவேகானந்தா மேல்நிலைப்பள்ளி, உடுமலை. மற்றும் கோவை பாரதியார் பல்கலைக்கழக நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் R.அண்ணாதுரை மற்றும் உடற்கல்வித்துறை பேராசிரியர் முனைவர். ராதாகிருஷ்ணன் ஆகியோர்
கலந்து கொண்டு 100 % வாக்களிப்பதன் முக்கியத்துவம் மற்றும் நேர்மையான வாக்கு ஆகியவற்றைப் பற்றியும், மாணவ, மாணவிகள் எவ்வாறு தங்களது வாக்கினைச் சரியாகப் பயன்படுத்த வேண்டும் என்பதைப் பற்றியும் விரிவாகவும் விளக்கமாகவும் எடுத்துக் கூறி பேரணியைத் துவக்கி வைத்தனர். அதனைத் தொடர்ந்து வட்டாட்சியர் அலுவலகம், மத்திய பேருந்து நிலையம், அரசு கலைக்கல்லூரி வளாகம் ஆகிய இடங்களில் மாணவ, மாணவிகளின் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக மக்களவைத் தேர்தல் பற்றிய விழிப்புணர்வு சுவரொட்டிகள் உடுமலை நகரின் முக்கிய இடங்களில் ஒட்டப்பட்டன. இதற்குக் கல்லூரியின் முதல்வர் முனைவர் T.ஜெயக்குமார் அவர்கள் தலைமை தாங்கி சிறப்பித்தார். இதில் இருபால் பேராசிரியர்கள்,மாணவ, மாணவிகள், பணியாளர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரியின் முதல்வர், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் சிறப்பாக செய்திருந்தனர்.

Photos from Vidyasagar College of Arts and Science's post 28/03/2024

வித்யாசாகர் கல்லூரியில் 28.03.2024 அன்று சிறந்த பெண் ஆளுமைச் செயற்பாட்டாளர்களைக் கௌரவிக்கும் வகையில் விருது வழங்கும் விழா

Photos from Vidyasagar College of Arts and Science's post 26/03/2024

உடுமலை வித்யாசாகர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம், தேசிய மாணவர் படை, சமூகப் பணித்துறை மற்றும் தமிழ் இலக்கியத்துறை ஆகியவை இணைந்து வருகின்ற 2024 பாராளுமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவு என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு மற்றும் உறுதிமொழி ஏற்கும் நிகழ்வை இன்று (26.03.2024) கல்லூரி வளாகத்தில் ஏற்பாடு செய்து நடத்தினர். இந்நிகழ்விற்குசிறப்பு விருந்தினராக திரு.R. ஜஸ்வந்த்கண்ணன், (கோட்டாட்சியர்,உடுமலை)
கலந்து கொண்டு 100 % வாக்களிப்பதன் முக்கியத்துவம் மற்றும் நேர்மையான வாக்கு ஆகியவற்றைப் பற்றியும், மாணவ மாணவிகள் எவ்வாறு தங்களது வாக்கினை சரியாகப் பயன்படுத்த வேண்டும் என்பதைப் பற்றியும் விரிவாகவும் விளக்கமாகவும் எடுத்துக் கூறினார். இதில் தேசிய வாக்காளர் தின உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதற்குக் கல்லூரியின் செயலர் திருமதி.பத்மாவதி சத்தியநாதன் அவர்கள் முன்னிலை வகித்தார். கல்லூரியின் முதல்வர் முனைவர் T.ஜெயக்குமார் அவர்கள் தலைமை தாங்கி சிறப்பித்தார். இதில் இருபால் பேராசிரியர்கள்,மாணவ மாணவிகள், பணியாளர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரியின் முதல்வர், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் சிறப்பாக செய்திருந்தனர்.

26/03/2024

Annual Day Celebration 2024🎉🎊

Photos from Vidyasagar College of Arts and Science's post 25/03/2024

Sports day Celebration 2024

Photos from Vidyasagar College of Arts and Science's post 24/03/2024

நம் வித்யாசாகர் கல்லூரியில் 23.03.24 சனிக்கிழமை திருப்பூர் & கோவை சத்ய சாயி சேவா நிறுவனங்களின் சார்பாக மாணவர்களுக்கான பேரிடர் மேலாண்மைப் பயிலரங்கம் நடைபெற்றது. நிகழ்வில் கல்லூரி முதல்வர் முனைவர் தி. ஜெயக்குமார் அவர்கள் முன்னிலை வகித்து தலைமையுரை ஆற்றினார். திருப்பூர் மாவட்ட சத்ய சாயி சேவா நிறுவனங்களின் தலைவர் திரு.ராஜேஸ்வரன் சாய்ராம் அவர்கள் கலந்து கொண்டு மனித வாழ்வின் உயர்வினை நெஞ்சில் நினைத்து உணரும் வகையில் சிறப்புரை வழங்கினார். தொடர்ந்து நிகழ்வில் பேரிடர் மேலாண்மைக் குழுவினரால் இயற்கைப் பேரிடர் வகைகள், உலக அளவில் ஏற்பட்ட பேரிடர்கள், அவற்றின் பாதிப்புகள், பின்பற்ற வேண்டிய வழிமுறைகள், பெண்கள் அன்றாட வாழ்வில் அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய சில பாதுகாப்பு அம்சங்கள் குறித்து விளக்கம் அளித்தும் செய்முறை விளக்கம் வாயிலாக மனதில் பதிய வைத்தும் நெறிப்படுத்தினர். நிகழ்வின் அடையாளமாக இரண்டு மகிழம் பூ மரக்கன்றுகள் நடப்பட்டன. தமிழ்த்துறை, தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணித்திட்டம்,சமூக பணியியல் துறை சார்ந்த சுமார் 80 மாணவர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். நிறைவாக தமிழ் உதவிப் பேராசிரியர் கா. சந்தியா அவர்கள் நன்றியுரை நல்கினார். நிகழ்விற்கான ஏற்பாடுகளை உடற்கல்வி இயக்குநர் J. சண்முக ராஜா அவர்கள், தமிழ்த்துறை, சமூகப் பணியியல் துறை பேராசிரியர்கள் மற்றும் உடுமலை சத்ய சாயி சேவா சமிதி உறுப்பினர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
🌷🌷🌷🌷🌷🌷🌷

Photos from Vidyasagar College of Arts and Science's post 23/03/2024

Tailoring class inaugurated along with Women Empowerment Cell Coordinator Swarna Gandhi madam and Prof Rajalakshmi.
The classes conducted by Prof Gunasekaran of Maths Department.

Photos from Vidyasagar College of Arts and Science's post 25/02/2024

Women's day celebrations- water filling competition.

Photos from Vidyasagar College of Arts and Science's post 25/02/2024

Peanut hulling competition

25/02/2024

First year Data Science students had a real time session on crime data analytics by DSP, Udumalpet Sub Division .

Photos from Vidyasagar College of Arts and Science's post 25/02/2024

Flower Tying compitition

Photos from Vidyasagar College of Arts and Science's post 25/02/2024

Greeting card making competition

Photos from Vidyasagar College of Arts and Science's post 19/02/2024

Women's day celebrations- Cooking with millets competition

Photos from Vidyasagar College of Arts and Science's post 17/02/2024

அனைவருக்கும் வணக்கம்.
உடுமலை வித்யாசாகர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி சமூகப் பணித்துறை, வணிகவியல் துறை மற்றும் உடுமலை தொழிலாளர் நலத்துறை ஆகியவை இணைந்து இன்று (13.02.2024) கொத்தடிமை தொழிலாளர் ஒழிப்பு முறை பற்றிய சிறப்பு விழிப்புணர்வு நிகழ்வைக் கல்லூரி கலையரங்கில் திருப்பூர் மாவட்ட தொழிலாளர் நல உதவி ஆணையர் (அமலாக்கம்) திரு A.ஜெயக்குமார் அவர்களின் வழிகாட்டுதலின்படி ஏற்பாடு செய்து நடத்தப்பட்டது. இதற்கு கல்லூரியின் முதல்வர் முனைவர் T.ஜெயக்குமார் அவர்கள் தலைமை தாங்கிச் சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக உடுமலை தொழிலாளர் நல உதவி ஆய்வாளர் திரு C.ராஜமுருகன் மற்றும் முத்திரை ஆய்வாளர் திரு R. பேச்சிமுத்து ஆகியோர் கலந்து கொண்டு கொத்தடிமை தொழிலாளர் பற்றிய சட்டம் சார்ந்த தகவல்களை மாணவ மாணவிகளுக்கு விரிவாகவும் விளக்கமாகவும் எடுத்துக் கூறினர். அதனைத் தொடர்ந்து கொத்தடிமை தொழிலாளர் ஒழிப்பு முறை பற்றிய உறுதிமொழி ஏற்கப்பட்டது. இந்நிகழ்விற்கு வருகை தந்த அனைவரையும் சமூகப் பணித்துறைத் தலைவர் பேராசிரியர் திரு.பிளஸ்சோ ஏசுவடியான் வரவேற்றார். இறுதியாக வணிகவியல் துறை பேராசிரியர் திரு.B.செந்தில்குமார் அனைவருக்கும் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை துறை தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள் தொழிலாளர் நலத்துறையுடன் இணைந்து சிறப்பாக செய்திருந்தனர்.

Photos from Vidyasagar College of Arts and Science's post 12/02/2024

அனைவருக்கும் வணக்கம்.
உடுமலை வித்யாசாகர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் இன்று (10.02.2024) திருப்பூர் வனக்கோட்டம், உடுமலை வனச்சரகத்திற்குட்பட்ட சின்னாறு வனப்பகுதியில் சத்ய சாய் சேவா நிறுவனம், கோவை பிஎஸ்ஜி மருத்துவமனை மற்றும் வனத்துறை இணைந்து நடத்திய மலைவாழ் மக்களுக்கான ஒருங்கிணைந்த மருத்துவ முகாம், வனத்தில் ஏற்படும் தீ விபத்துக்களைத் தடுப்பது, தற்காப்பு பற்றிய செய்முறை பயிற்சி மற்றும் மரம் நடு விழா ஆகிய நிகழ்வுகளில் கலந்து கொண்டு சேவை செய்தமைக்காக வனத்துறையினர் மற்றும் ஒருங்கிணைப்பாளர்களின் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் பெற்றனர் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

Photos from Vidyasagar College of Arts and Science's post 12/02/2024

அனைவருக்கும் வணக்கம் .
உடுமலைப்பேட்டை வித்யாசாகர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் இன்று (12.2.2024) திங்கட்கிழமை காலை 10 மணியளவில்
*தமிழக முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம்* நடைபெற்றது.
இதற்குச் சிறப்பு விருந்தினர்களாக பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர்,
மாண்புமிகு திரு.கு.சண்முகசுந்தரம் B.E., விவேகானந்தா மேல்நிலைப்பள்ளி தாளாளர் ,
திரு.செ.மூர்த்தி, உடுமலை அரிமா யோகானந்த், அரிமா கணேஷ் மற்றும் ஆசிரியர் தர்மராஜ் ஆகியோர் கலந்து கொண்டு தமிழ்நாடு முதலமைச்சரின் காப்பீட்டுத்திட்டம் பற்றிய தகவல்களை விரிவாகவும் விளக்கமாகவும் எடுத்துக் கூறினர். இதற்குக் கல்லூரியின் முதல்வர்
முனைவர் தி.ஜெயக்குமார் தலைமை தாங்கிச் சிறப்பித்தார். முகாமிற்கான ஏற்பாடுகளைத் துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் சிறப்பாகச் செய்திருந்தனர்.

Want your school to be the top-listed School/college?

Videos (show all)

சாலை பாதுகாப்பு வார விழா மற்றும் வாக்காளர் தினம் நமது கல்லூரி வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது🛵🛵🛵
Pongal Celebration @ Vidyasagar College
Our college slow bike race competition mass video
Christmas and New Year celebration @ Vidyasagar College
Christmas and New Year celebration @ VCAS
Slow bike race @ Vidyasagar College
Kabadi kabadi kabadi kabadi

Telephone