
Al - Gazzaly Muslim Primary Vidyalaya
Nearby schools & colleges
Kendrapara district 754214
Vaid Road, Rangpur
Rajshahi Division 285205
Avenue Med
Pin, Old Malda
Rajshahi Division
Rajshahi Division
Darrang
Kec. Saluputti Kab. Tana Toraja, Rajshahi Division
Godda
Rajshahi Division
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Al - Gazzaly Muslim Primary Vidyalaya, School, Atulugama, Bandaragama, Chittagong Division.
Operating as usual


எமது தரம் 4 மற்றும் 5 மாணவர்களுக்கான பரீட்சை வழிகாட்டல் கருத்தரங்கு அல்கஸ்ஸாலி பிரதான மண்டபத்தில் இன்று சிறப்பாக நடைபெற்றது. இதற்கு மாவனல்ல நஜிபுல்லா ஸேர் வளவாளராக கலந்துகொண்டார்கள். இக்கருத்தரங்கு காலை வேளையில் தரம் 5 மாணவர்களுக்கும் தரம் 4 மாணவர்களுக்கு மாலை வேளையிலும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது .கருத்தரங்கு சிறப்பாக நடைபெற அட்டுளுகம நலன்புரிச்சங்கம் சார்பாக மில்ஹான் ஹாஜியார் பூரண அனுசரனை வழங்கினார்கள்.

எமது தரம் ஒன்று மாணவர்களின் சந்தை இன்று நடைபெற்ற போது

புலமைப்பரிசில் பரீட்சை எழுத உள்ள மாணவர்களுக்கான எட்டாவது ஊக்குவிப்புப் பரீட்சை இன்று நடைபெற்றது.அத்துடன் ஏழாவது ஊக்குவிப்புப் பரீட்சையில் அதிக புள்ளிகளை எடுத்த மாணவர்களுக்கான பாராட்டும் நடைபெற்றது. இந்நிகழ்வில் SDEC செயலாளர் எம்.எம்.முஷ்தாக் மற்றும் உறுப்பினர்கள், ஆசிரியர்கள், தரம் ஐந்து பெற்றோர்கள் என பல தரப்பினரும் கலந்து கொண்டனர் .
வலய மட்ட போட்டிகளில் பங்குபற்றி முதலாம் இடத்தைப் பெற்ற மாணவர்கள். இம்மாணவர்கள் மாகாண மட்ட போட்டிகளில் பங்கு பற்ற உள்ளார்கள். அனைத்து மாணவர்களுக்கும் நல்வாழ்த்துக்கள். இவர்களை பயிற்றுவித்து போட்டிகளுக்கு அழைத்துச் சென்ற ஆசிரியர்களுக்கு நன்றி. ஜஸாகல்லாஹு கைரா.

வலய மட்ட தமிழ் தின போட்டி-2024
ஹொரண வலயம்
பிரிவு- 1
ஆக்கத்திறன் வெளிப்பாடு
முதலாம் இடம்
Algazzaly Muslim primary Vidyalaya
M.A.M. அஷ்பாக்
பி.தி. 2014.03.14

வலய மட்ட தமிழ் மொழி தின போட்டிகள் - 2024
ஹொரண வலயம்
பிரிவு- 1
இசையும் அசைவும்
முதலாம் இடம்
Algazzaly Muslim primary Vidyalaya
M.M.F. அய்னா
பி.தி. 2014.06.15

வலய மட்ட தமிழ் மொழி தின போட்டி-2024
ஹொரண வலயம்
பிரிவு- 1
பேச்சு
முதலாம் இடம்
Algazzaly Muslim primary Vidyalaya
M.S.F. சுமையா
பி.தி. 2015.11.04

அல்கஸ்ஸாலி முஸ்லிம் ஆரம்ப வித்தியாலயத்தின் கலஉடவத்த பகுதியின் பிரதான நுழைவாயில் கதவை(Gate) Unique Trading Company உரிமையாளர் அல்ஹாஜ் இம்தியாஸ் அவர்கள் அமைத்து பாடசாலைக்கு இன்று (2024.07.23) அன்பளிப்பு செய்தார்கள்.பாடசாலை சார்பாக அவர்களுக்கு எமது நன்றியைத் தெரிவிக்கின்றோம். இதன் மூலம் பாடசாலையின் நீண்ட கால தேவைகளில் ஒன்று நிறைவேறியது.அல்ஹம்து லில்லாஹ். இந்நிகழ்வில் மெளலவி அப்துர் ரஹ்மான் பஹ்ஜி ஹஸ்ரத் அவர்கள் ,SDEC செயலாளர் முஷ்தாக் உட்பட ஏனைய நிர்வாக அங்கத்தவர்களும் கலந்துகொண்டார்கள்.
அதிபர்
அல்கஸ்ஸாலி முஸ்லிம் ஆரம்ப வித்தியாலயம்.


அல்கஸ்ஸாலி முஸ்லிம் ஆரம்ப வித்தியாலய தரம் 4,5 மாணவர்களுக்கான காலைச் சாப்பாடு வழங்கும் செயற்பாடு கல்வி அமைச்சின் உதவியடன் நடைபெற்று வருகின்றது.தரம் 1,2,3 மாணவர்களுக்கான காலை உணவு வழங்கும் வேலைத்திட்டம் ஜுன் 5 ஆம் திகதி புதன்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

அல்கஸ்ஸாலி முஸ்லிம் ஆரம்ப வித்தியாலயத்தில் சேவையாற்றிய ஆசிரியை எம்.எம்.எஸ்.முஸ்லிஹா அவர்கள் 2024.05.28 ஆம் திகதி தொடக்கம் தனது 26 வருட கால ஆசிரியப்பணியை நிறைவு செய்தார். ஆரம்ப நெறி பயிற்சி ஆசிரியையான இவர்கள் சில வருட காலம் வியாங்கல்லை முஸ்லிம் மகா வித்தியாலயத்திலும் ஆசிரியப் பணியை மேற்கொண்டார்கள்.
இவர்கள் கணித பாட ஆசிரிய ஆலோசகர் ஜனாப் ஏ.எச்.ஏ.அமான் அவர்களின் துணைவியார் என்பதுடன் ஓய்வுபெற்ற அதிபர் கஸ்ஸாலி அஷ்ஷம்ஸ் மற்றும் அதிபர் ஸர்ஜுன் ஆகியோரின் சகோதரியும் ஆவார். பல வருடங்களாக தரம் 5 மாணவர்களுக்கு கற்பித்து சிறப்பான பெறுபேறுகளைப் பெற்றுக்கொள்ளவும் மாணவர்களின் அடைவு மட்டத்தை அதிகரிக்கவும் முயற்சி செய்துள்ளார். இதற்கான கூலியை வழங்க அல்லாஹ்விடம் வேண்டுகின்றோம்.
அவர்களின் ஓய்வுக்காலம் ஆரோக்கியம் மிகுந்த மகிழ்ச்சியானதாக அமைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.

EDF நிறுவனம் மற்றும் பெற்றோர்களின் ஏற்பாட்டில் எமது பாடசாலையில் 2024 தரம் 5 பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான முதலாவது முன்னோடிப் பரீட்சை சென்ற 2024.04.28 ஆம் திகதி நடைபெற்றது.
எமது அல்கஸ்ஸாலி முஸ்லிம் ஆரம்ப வித்தியாலய ஆசிரியை A.C.F. ஸரீனா(சுது டீச்சர்) அவர்கள் 2024.03.25 முதல் சேவையிலிருந்து ஓய்வு பெறுகின்றார். அவர்களின் ஓய்வுக்காலம் ஆரோக்கியம் நிறைந்த மகிழ்ச்சியான பொழுதாக அமைய எல்லாம் வல்ல அல்லாஹ் துணை புரிவானாக.

இன்று எமது பாடசாலையில் கல்வி அமைச்சின் அனுசரணையுடன் மாணவர்களுக்கான காலை உணவு வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பமானது. முதற்கட்டமாக தரம் 4,5 மாணவர்களுக்கு இன்று பாடசாலையில் காலை உணவு வழங்கப்பட்டது.

எமது பாடசாலையின் 2024 தரம் ஒன்றுக்கு மாணவர்களை அனுமதிக்கும் வித்தியாரம்ப விழா பாடசாலை வளாகத்தில் மிகச்சிறப்பாக அதிபர் எம்.என்.எம்.ஜொலிபர் அவர்களின் தலைமையில் இன்று நடைபெற்றது. வலய பிரதிநிதியாக ஆசிரிய ஆலோசகர் அமான் ஆசிரியர் கலந்து கொண்டதுடன் ஊர் சார்பாக மாணவர்களை வரவேற்று துஆ பிரார்த்தனையை ஜாமிஆ இனாமில் ஹஸன் அதிபர் அஷ்ஷேய்ஹ் எம்.கே.அப்துர் ரஹ்மான் பஹ்ஜி ஹஸரத் அவர்கள் நிகழ்த்தினார்கள்.

அட்டுளுகம, அல்கஸ்ஸாலி முஸ்லிம் ஆரம்ப வித்தியாலய தரம் 5 மாணவர் பாராட்டு விழாவின் (2023.12.14)சில காட்சிகள்.2022 மற்றும் 2023 இல் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றி சித்தியடைந்த 20 மாணவர்களும் மேழும் அதிக புள்ளிகளைப் பெற்ற மாணவர்களும் இவ்விழாவில் பாராட்டப்பட்டனர். ஹொரண வலய ஆரம்பக்கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளரும் பண்டாரகம கோட்டக்கல்விப் பணிப்பாளருமான U.Y.L.PRADEEPIKA, அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபன முன்னாள் தலைவர் அல்ஹாஜ் ரூமி, ஜாமிஆ இன்ஆமில் ஹஸன் அதிபர் M.K.அப்துர் ரஹ்மான் பஹ்ஜி, அல்கஸ்ஸாலி மத்திய கல்லூரி அதிபர் எம். சந்திரமோகன் ஆகியோர் அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர். அல்கஸ்ஸாலி ஆரம்ப வித்தியாலய வரலாற்றில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 16 மாணவர்கள் 2023 இல் சித்தியடைந்தமை வரலாற்றுச் சாதனையாகும். அஸ்மா ஜெமீல் என்ற எமது பாடசாலை மாணவி 183 புள்ளிகளைப் பெற்று கழுத்தறை மாவட்டத்தில் தமிழ் மொழி மூலப்பாடசாலைகளில் இரண்டாம் இடத்தைப் பெற்றுக்கொண்டமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

மாகாண மட்ட தமிழ் மொழி தினப் போட்டிகளில் பங்கு பற்றிய மாணவர்கள்.
இவர்களில் I.U.A.யாஸிர் ஆக்கம், எழுத்துப் போட்டியில் பங்குபற்றி முதலாம் இடத்தைப் பெற்று அல்கஸ்ஸாலி ஆரம்ப வித்தியாலய வரலாற்றில் முதற்தடவையாக தேசிய மட்ட போட்டியில் பங்குபற்றுவதற்கான சந்தர்ப்பத்தைப் பெற்றுள்ளார். M.I.F.இல்மா வாசிப்பு போட்டியில் பங்குபற்றி இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளார். இம்மாணவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு வழிகாட்டி பயிற்சிகளை வழங்கிய அதிபர் மற்றும் ஆசிரியர்களுக்கு நன்றி.

ஹொரண வலய மட்ட தமிழ் மொழி தின போட்டிகளில் பங்குபற்றி வெற்றியீட்டிய மாணவர்கள்.
M.A.M.அஷ்பாக், கதை கூறல் -2ஆம் இடம்
I.U.A. யாஸிர், ஆக்கம் எழுத்து - 1 ஆம் இடம்
M.B.F.ரிபா, பாவோதல்- 3 ஆம் இடம்
M.J.F.அஸ்மா, பேச்சு- 1 ஆம் இடம்
M.I.F.இல்மா, வாசிப்பு-1ஆம் இடம்
M.F.F. அய்னா , இசையும் அசைவும் - 3 ஆம் இடம்

2022 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு EDF நிறுவனம் கொழும்பு புதிய நகர மண்டபத்தில் ஏற்பாடு செய்த பாராட்டு விழாவின் போது எமது அல்கஸ்ஸாலி ஆரம்ப வித்தியாலய மாணவர்கள்

தரம் 5 மாணவர்களின் புலமைபுபரிசில் பரீட்சைக்கான இரண்டாவது கருத்தரங்கு நேற்று வியாழக்கிழமை அல்கஸ்ஸாலி மத்திய கல்லூரி பிரதான மண்டபத்தில் நடைபெற்றது. பாடசாலை SDEC குழுவின் பூரண அனுசரணையுடன் நடைபெற்ற இக்கருத்தரங்கின் விரிவுரையாளராக குருவிட்ட முஸ்லிம் மகா வித்தியாலய ஆசிரியர் நளீம் ஸேர் பங்குபற்றினார்கள். இதற்காக வழிகாட்டிய பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர்கள் உட்பட இதற்காக ஒத்துழைத்த பெற்றோர்கள் அனைவருக்கும் நன்றிகள்.
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Location
Category
Telephone
Website
Address
Atulugama, Bandaragama
Chittagong Division
12530
Opening Hours
Monday | 07:30 - 14:00 |
Tuesday | 07:30 - 14:00 |
Wednesday | 07:30 - 14:00 |
Thursday | 07:30 - 14:00 |
Friday | 07:30 - 14:00 |
Dalta
Chittagong Division
দল্টা আইডিয়াল একাডেমি স্থাপিত : ডিসেম
Chittagong Division
BOYS AND GIRLS EVENING CLASSES (English and Urdu Medium) 8th, 9th, 10th(Science and Arts) FSc,ICS,F.A
R. Antonieta Pauluci, 533/Conj. Hab. Altos Da Boa Vista, Avaré/SP, 18708/320
Chittagong Division, 18708-320
Programa Escola da Família E.E. Dona Cota Leonel DER - Avaré Sábado e Domingo 09:00 às 16:00horas
Chittagong Division
معهد تعليمي ، مدرسة ، دورات تقوية لكافة اللغات . العنوان عنترية_شارع جامع سلمان الفارسي مركز Let's go
Chittagong Division
চুন্টা অবিনাশ চন্দ্র একাডেমি (উঃবিঃ)। একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান যা ১৯৪১সালে প্রতিষ্ঠিত।
Chittagong Division, 791125
SHEMROCK LIKABALI is one of the best schools in lower siang Arunachal Pradesh. It is the branch
মৌলভীবাজার, মোহরা, চান্দগাঁও, চট্টগ্রাম।, Char Mohara
Chittagong Division
আপনিকি চিন্তিত?ভাবছেন সন্তানকে শুধু শিক্ষা নয়, গড়তে হবে নৈতিক শিক্ষায়।তবে দেড়ি কেন! চলে আসুন আল-আকসায়